அறிவியல் ஆயிரம் : ஒன்றுசேர்ந்த விண்கல்
்பூர்)
ஒன்றுசேர்ந்த விண்கல்
ஜப்பான் விண்வெளி மையம் விண்கற்களை ஆய்வு செய்ய 'ஹயபுசா 2' விண்கலத்தை அனுப்பியது. இது 2020ல் 'ரியிகு' விண்கல்லில் தரையிறங்கி அதன் பாறை, மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்தது. இந்த விண்கலம் 2026 ஜூலை 5ல் 'டோரிபூன்' எனும் விண்கல்லை படம் பிடித்துள்ளது. பூமியில் இருந்து 10 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. 1476 அடி அகலம் கொண்ட இது, இரண்டு விண்கல் சேர்ந்து இருப்பது போல உள்ளது. இதற்கு காரணம், இது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இரண்டு விண்கல் ஒன்றாக நகர்ந்து, மெதுவாக இணைந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தகவல் சுரங்கம் : தனித்துவமான உயிரினங்களின் தீவு
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மடகாஸ்கர். இது உலகின் நான்காவது பெரிய தீவு, இரண்டாவது பெரிய தீவு நாடு. இது பல்லுயிரினங்களின் இடமாக திகழ்கிறது. இங்குள்ள தாவரங்கள், விலங்கு இனங்களில் 90 சதவீதம், உலகில் வேறு எந்த பகுதியிலும் இல்லை. லெமர், போஸா, இலை வால் பல்லிகள், பச்சோந்தி இனங்களில் பாதி உள்ளிட்டவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. 18 கோடி ஆண்டுகளுக்கு முன் கோன்ட்வானா எனும் சூப்பர் கண்டத்தில் இருந்து பிரிந்து தனி தீவாக மாறியதால், இங்குள்ள உயிரினங்கள் தனியாக பரிணாம வளர்ச்சி பெற்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.