அறிவியல் ஆயிரம்

4 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 4, 2026, 8:09:47 PMFeb 4
to brailleacl
அறிவியல் ஆயிரம் : சீனாவின் வெப்பமான ஆண்டு

 
உலக வரலாற்றில் வெப்பமான ஆண்டு 2024. இதில் அடுத்த இரண்டு இடங்களில் 2023, 2025 ஆண்டுகள் உள்ளன என சமீபத்தில் உலக வானிலை அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் வெப்பமான ஆண்டாக 2025 பதிவாகியுள்ளது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதன்படி சீனாவின் ஆண்டு சராசரி வெப்பநிலை 2025ல் 10.9 டிகிரி செல்சியசாக பதிவாகி, 2024ஐ (10.9 டிகிரி செல்சியஸ்) சமன் செய்தது. இது அந்நாட்டில் 1991 - 2020ல் சராசரி வெப்பநிலையை விட 1 சதவீதம் அதிகம். சீனாவில் 1961ல் இருந்து வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.
 தகவல் சுரங்கம் : ஜனாதிபதி ஆட்சி அமலாகாத மாநிலம்

 சட்டசபையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக மாநிலங்களில் 'ஜனாதிபதி ஆட்சி' (அரசியலமைப்பு சட்ட விதி 356) அமல்படுத்தப்படும். ஆறு மாதம் அமலில் இருக்கும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் நீடிக்கலாம். ஆனால் 6 மாதத்துக்கு ஒருமுறை பார்லிமென்ட் அனுமதி தேவை. இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட மாநிலம் மணிப்பூர் (12 முறை). அடுத்த இடங்களில் உ.பி., (9), பஞ்சாப் (8) உள்ளன. இதுவரை இந்த விதி ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத மாநிலம் சத்தீஸ்கர், தெலுங்கானா.

Dhivisha dhivi

unread,
Feb 10, 2026, 8:10:16 AMFeb 10
to brailleacl
அறிவியல் ஆயிரம்:நிலவின் நிறம் என்ன

  ்கை
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
உலகம்



நிலவில் அடுத்த பத்தாண்டுக்குள் மனிதர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். நிலவுக்கு பல சிறப்புகள் உண்டு. பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. பூமியில் இருந்து சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ., இதன் ஈர்ப்பு விசை தான், பூமியை அதன் அச்சில் வைத்திருக்க உதவுகிறது.

நிலவு என்பது பாறைகள், தாதுக்கள், சிலிகேட்டுகளால் ஆனது. வளிமண்டலம் கிடையாது. பூமியில் இருந்து பார்க்கும் போது, நிலவு வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கிறது. ஆனால் சூரியனின் ஒளியையே நிலவு பிரகாசிப்பதால், அருகில் சென்றால் அடர் சாம்பல் நிறத்தி ின் ஒளியையே நிலவு பிரகாசிப்பதால், அருகில் சென்றால் அடர் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

 தகவல் சுரங்கம்:உலக பயறு வகை தினம்


 பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது உடல்நலனுக்கு நல்லது. காய்கறியை விட இவற்றில் சத்து
 அதிகம். புரதச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளில் பயறு வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

'உலகின் பயறு வகைகள் : சிறிய அளவில் இருந்து சிறப்பான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Dhivisha dhivi

unread,
Feb 15, 2026, 8:11:15 PMFeb 15
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 சூரியனை சுற்றும் கோள்கள்

 சூரியனை சுற்றும் கோள்கள்

 சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன. 1616ல் இதை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு தெரியப்படுத்தியவர் இத்தாலி விஞ்ஞானி கலிலியோ கலிலி. ஆனால் அவர் கூறியதை உண்மை என யாரும் அப்போது நம்பவில்லை. பின்னர் கலிலியோவின் கூற்று உண்மைதான் என உலகம் உணர்ந்தது. 1564 பிப். 15ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர் இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலைநோக்கியை (டெலஸ்கோப்) கண்டுபிடித்தார்.
 
 தகவல் சுரங்கம்

மெதுவாக நகரும் உயிரினம்

நத்தை வகையை சேர்ந்தது 'வாழைப்பழ நத்தை'. இவை வட அமெரிக்காவின் ஈரமான காடுகளில் காணப்படுகின்றன. இது பார்ப்பதற்கு வாழைப்பழம் போல இருப்பதால் இப்பெயர் வந்தது. இது நிலத்தில் வாழும் உயிரினங்களில் மெல்ல நகரும் உயிரினம் என அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் நீளம் 25 செ.மீ. எடை 115 கிராம். இது மணிக்கு 0.0096 கி.மீ., வேகத்தில் (ஒரு வினாடிக்கு 2.7 மி.மீ., துாரம்) மிக மெதுவாக நகரும். சாதாரண நத்தை ஒரு வினாடிக்கு 13 மி.மீ., துாரம் நகரும். காளான், தாவர, விலங்குகளின் கழிவுகளை உண்ணும்.







Dhivisha dhivi

unread,
Feb 19, 2026, 8:07:04 PMFeb 19
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 பல் சுகாதாரம் தரும் பாதுகாப்பு

 





உடல் உறுப்புகளில் பற்கள் முக்கியமானவை. தினமும் சரியாக பல் துலக்கி, பற்களை சுகாதாரமாக வைத்துக் கொண்டால் மனச்சோர்வு, முடக்குவாதம், உடல் நடுக்கம் உள்ளிட்ட 50 விதமான உடல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. வாய் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று உடல் முழுதும் ஏற்படும் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை, இதில் குறிப்பாக இனிப்பு உணவுப்பொருள் சாப்பிட்ட பின் பல் துலக்குவது அவசியம். அதே போல துாங்குவதற்கு முன் பல் துலக்குவது சிறந்தது என தெரிவித்துள்ளனர்.
  தகவல் சுரங்கம்

 உலக சமூகநீதி தினம்

உலகில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2007ல் இத்தினம் உருவாக்கப் பட்டது. 'அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, சிறந்த பணி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நாட்டின் சமூக வளர்ச்சிக்கு 'சமூக நீதி' மிக அவசியம். மக்களிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மையை போக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.
  

Mohan

unread,
Feb 20, 2026, 7:23:36 PMFeb 20
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்

     மன அழுத்தம் போக்கும் மருந்து

பொதுவாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல்நலனுக்கு சிறந்தது என
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தியானம், உளவியல் ஆலோசனை
மேற்கொள்வதால் கிடைக்கும் பலனை விட ஓட்டம், நீச்சல், நடனம் உள்ளிட்ட
உடற்பயிற்சிகள் மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பிரச்னையை தீர்ப்பதற்கு
உதவுகிறது என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. 10 முதல் 90 வயதுக்குட்பட்ட
10 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. உலகில் நான்கில்
ஒருவர் மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள், பெண்கள் அதிகம்.

Dhivisha dhivi

unread,
Feb 22, 2026, 6:13:05 AMFeb 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 எண்ணெய் வளம் எங்கு அதிகம்

 n
பூமிக்கடியில் பாறை அடுக்கில் இயற்கையாகக் கிடைக்கும் சுத்திகரிக்கப்படாத திரவ ஹைட்ரோகார்பன்கலவை தான், கச்சா எண்ணெய். உலகில் நிரூபிக்கப்பட்ட வகையில் அதிக கச்சா எண்ணெய் இருப்பை (30 ஆயிரம் கோடி பேரல்) வைத்துள்ள நாடு வெனிசுலா. இது உலகின் மொத்த இருப்பில் 17 சதவீதம். அந்நாடு 1990ல் ஒரு நாளைக்கு 37 லட்சம் பேரல் கச்சா
 
  போது 10 லட்சம் பேரல்) செய்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் 'டாப்-3' இடத்தில் அமெரிக்கா (ஒரு நாளைக்கு 2.2 கோடி பேரல்), சவுதி (1.10 கோடி), ரஷ்யா (1.08 கோடி) உள்ளன.

   தகவல் சுரங்கம்

 உலக தாய்மொழி தினம்

ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பன்மொழிக் கல்வி குறித்த இளைஞர்களின் குரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) 1952ல் உருதுக்கு பதில் வங்காளத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த டாக்கா பல்கலை மாணவர்கள் நினைவாக 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

Dhivisha dhivi

unread,
Feb 25, 2026, 7:59:05 PMFeb 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 வானில் ஒரு ரத்த நிலா

ஒரே நேர்கோட்டில் சூரியன் - நிலவு இடையே பூமி வரும் போது, சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான் நிலவில் படுகிறது. இதுதான் சந்திர கிரகணம். மார்ச் 3ல் நிகழும் இந்த சந்திர கிரகணத்தின் சிறப்பு, அன்றைய தினம் பூமி - நிலவு இடையேயான துாரம் சராசரியை விட (3,84,000 கி.மீ.,) குறைவாக இருக்கும். இதனால் பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறும் சூரிய ஒளியில், அதிக அலை நீளமுள்ள சிவப்பு, நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' எனப்படுகிறது.
 தகவல் சுரங்கம்
 நீண்டதுார ரயில்



 
 
உலகில் நீண்டதுாரம் செல்லும் பயணிகள் ரயில், ரஷ்யாவில் செயல்படுகிறது. இது மேற்கில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கி, கிழக்கில் அந்நாட்டின் விலாடிவோஸ்டக் வரை செல்கிறது. 9300 கி.மீ., துாரம் பயணிக்கிறது. இடையில் 140 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. 15 - 20 பெட்டிகள் இருக்கும். பயண நேரம் 167 மணி நேரம் (சுமார் 7 நாள்). இது எட்டு நேர மண்டலத்தை கடந்து செல்கிறது. இடையில் யூரல் மலைத்தொடர், சைபீரியன் காடுகள், பைகால் ஏரி உள்ளிட்டவற்றை கடந்து செல்கிறது. இது மணிக்கு 60 - 90 கி.மீ., வேகத்தில் செல்கிறது.

Mohan

unread,
Feb 26, 2026, 8:01:18 PMFeb 26
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்

 பறவைகள் பறக்கும் விதம்

உணவு, இனப்பெருக்கம், காலநிலைக்காக பறவைகள் வலசை (இடம் பெயர்தல்)
செல்கின்றன. இடைநில்லாமல் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம், கண்டங்கள் தாண்டி
இலக்கை அடைகின்றன. இதற்காக பறவைகள் ஒரு யுக்தியை கடைபிடிக்கிறது என
விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி சஹாரா போன்ற பாலைவன
பகுதியில் இரவு நேரத்தில் பறக்கின்றன. இதுவே பகலில் எனில், வெப்பத்தில்
இருந்து தப்பிக்க மேலும் உயரே பறக்கிறது. ஆனால் கடல் பகுதியில் மிக தாழ்வாக
பறக்கிறது. அதிலும் சில பகுதியில், சில மீட்டர் உயரம் தான் வித்தியாசம்
இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Dhivisha dhivi

unread,
Feb 27, 2026, 7:35:22 PMFeb 27
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 
 உயரம் வித்தியாசப்படுவது ஏன்
 
காலையில் அளவிடும் நம் உடலின் உயரத்தை, மீண்டும் இரவில் அளவிட்டால் குறைவாக (1 முதல் 2 செ.மீ., வித்தியாசம்) இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. இதற்கு காரணம் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப செயல்படும் நம் முதுகெலும்பு தான் என ஆய்வு தெரிவித்துள்ளது. துாக்கத்துக்குப்பின் காலை எழுந்ததும் முதுகெலும்புக்கு அழுத்தம் குறைவாக இருக்கும். அடுத்து நடப்பது, அமர்வது என நாள் முழுதும் வேலைபார்க்கும் போது, புவிஈர்ப்பு விசையால் நம் முதுகெலும்பு சற்று கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. இது இரவில் துாங்கும் போது இயல்புக்கு திரும்புகிறது என தெரிவித்துள்ளனர்.


 

 

Dhivisha dhivi

unread,
Feb 28, 2026, 7:56:35 PMFeb 28
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 ஏன் நீல நிறம்



 
 

சர்.சிவி.ராமன் கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியபோது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது'' என யோசித்தார். இதற்கு 1928 பிப்.,28ல், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார். இத்தினமே (பிப். 28) தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறத்தால் கடல் நீர் நீல நிறமாக தெரிகிறது' என கண்டுபிடித்தார். 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்

 தகவல் சுரங்கம்
 
கடல் புற்கள், பாகுபாடு ஒழிப்பு தினம்





* கடலுக்கு அடியில் வாழும் கடல் புற்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், மாசுக்களையும் குறைக்கிறது. இவை குறைந்தால் அது கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 * உலகில் பாலினம், நிறம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடின்றி கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் பாகுபாடு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'முதலில் மக்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Dhivisha dhivi

unread,
Mar 6, 2026, 8:02:14 PMMar 6
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 செவ்வாயில் கடல் இருக்கிறதா...

 செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் கடல் இருந்ததா என்பது பற்றி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2021ல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சீனாவின் 'ஜூராங் மார்ஸ் ரோவர்', பூமிக்கு அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 'கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில், அலையுடன் கூடிய பெரிய நீர்நிலை இருந்திருக்கலாம். இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் இது மேற்பரப்பு புகைப்படங்களுக்குப் பதிலாக, நிலத்தடி இமேஜிங் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்தது என தெரிவித்துள்ளனர்.
  தகவல் சுரங்கம்
P
 
 வேகமாக பறக்கும் பூச்சி

பூச்சியினங்களில் வேகமாக பறக்கக்கூடியது தட்டான். இது மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறனுடையது. இதன் இறக்கை 2 - 5 இன்ச். பல வகைகள் உள்ளன. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் பார்க்கும் திறன் வேகமானது. வினாடிக்கு 200 படங்களை பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இது தன் மூளையின் திறனில் 80 சதவீதத்தை, பார்வைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. அதே போல வேகமாக ஓடும் பூச்சியினம் 'ஆஸ்திரேலிய புலி வண்டு'. இது மணிக்கு 9 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு ஆறு கால்கள் இருக்கும். 2500 வகைகள் உள்ளன.

 
 



Mohan

unread,
Mar 12, 2026, 8:59:11 PMMar 12
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்

  'மெட்ராஸ் ஐ' ஏற்படுவது எப்படி

  மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவுகிறது. இது பெரும்பாலும் 'அடினோ' வைரஸ்,
சில நேரம் பாக்டீரியா, அலர்ஜியால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதத்தில்
வேகமாக பரவும். 1918ல் சென்னையில் புதுவித கண்நோய் பரவியது. மருத்துவர்கள்
ஆராய்ந்து அதற்கு காரணமாக இருப்பது 'அடினோ' வைரஸ் என கண்டுபிடித்தனர்.
சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'மெட்ராஸ் ஐ' என பெயரிடப்பட்டது. 'பிங்
ஐ' எனவும் அழைக்கப் படுகிறது. 1969 வரை சென்னை,

மெட்ராஸ் என இருந்தது. கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறி.
 தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 13, 2026 12:03 AM
4

 உலகப்போர் வரலாறு



  அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 12 நாட்களாக தொடர்கிறது. இது
மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதல் உலகப்போர் 1914 ஜூலை 28 - 1918 நவ. 11ல் ஐரோப்பா, மத்திய கிழக்கு
நாடுகளை மையமாக வைத்து நடந்தது. 90 லட்சம் ராணுவ வீரர்கள், 80 லட்சம்
மக்கள் பலியாகினர். இரண்டாம் உலகப்போர் 1939 செப். 1 - 1945 செப். 2ல்
பெரும்பாலான உலக நாடுகள் இடையே நடந்தது. 7 - 8.5 கோடி பேர் பலியாகினர்.
ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான் தோல்வியடைந்தன. இரண்டு உலகப்போரின் போதும்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது.




Dhivisha dhivi

unread,
Mar 20, 2026, 9:41:41 AMMar 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
 அறிவியல் ஆயிரம்
 கடலுக்குள் ஆறு

  தென்கிழக்கு ஐரோப்பா - மேற்கு ஆசியா இடையே கருங்கடல் அமைந்துள்ளது. இந்நிலையில் கருங்கடலில் 115 அடி ஆழத்தின் கீழ் ஆறு ஓடுகிறது என பிரிட்டனின் லீட்ஸ் பல்கலை முன்னாள் பேராசிரியர் டேனியல் பர்சன் தெரிவித்துள்ளார். இதன் அகலம் 1 கி.மீ. மொத்தம் 60 கி.மீ., துாரம் செல்கிறது. 'ரோபோடிக் மேப்பிங்' தொழில்நுட்பத்தில் கண்டறிந்துள்ளார். இந்த ஆறு நிலப்பரப்பில் ஓடுகிறது எனில், நீர் வெளியேற்றம் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய ஆறாக இருக்கும். இதில் வினாடிக்கு 22 ஆயிரம் கன மீட்டர் என்ற அளவில் தண்ணீர் வெளியேறுகிறது.

 தகவல் சுரங்கம்

 மகிழ்ச்சி, சிட்டுக்குருவி தினம்
 
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும். இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சமூக ஊடகம், மகிழ்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Dhivisha dhivi

unread,
Mar 21, 2026, 9:41:48 PMMar 21
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  மாற்று எரிபொருள்

 
 

 மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால், உலகின் எரிபொருள் துறை பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர், காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்து அதை செயற்கை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை சீனாவின் ஷாங்காயில் உள்ள 'கார்பனாலஜி' நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதிலிருந்து சிந்தெடிக் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
 தகவல் சுரங்கம்

  பனிப்பாறை, காடு, கவிதை தினம்

 
 



 * பனிப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றி வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல்உலக பனிப்பாறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நன்னீரில் 70 சதவீதம் இவற்றை சார்ந்தே உள்ளது.

* காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் சர்வதேச காடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'காடு, பொருளாதாரம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

* கவிதை எழுதுதல், வாசித்தல், பயிற்சியளிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக கவிதை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

Dhivisha dhivi

unread,
Mar 23, 2026, 9:03:19 PMMar 23
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 செவ்வாயில் செடி

 செவ்வாய் கோளின் தரைப்பரப்பில் வளரும் தன்மையுடைய 'சிண்ட்ரிச்சியா கேனினெர்விஸ்' எனும் பாலைவன பாசி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 'பசுமை செவ்வாய்' என்ற விஞ்ஞானிகளின் இலக்கை நோக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும். செவ்வாய் கோள் சூழலில் சோதனை செய்யப்பட்டதில், அங்கு இருப்பதை போல மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, அதிக கதிர்வீச்சை தாங்கி வளர்ந்தது. அதே போல அதன் செல்லுலர் தண்ணீரை 98 சதவீதம் இழந்தாலும் இரண்டே வினாடியில் மீண்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

 தகவல் சுரங்கம்

 உலக காசநோய் தினம்

 காசநோய் பரவும் முறை, தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'டியூப்பர்குளோசிஸ்' என்ற பாக்டீரியா நுண்கிருமிகளால் காசநோய் பரவுகிறது. 'ஆம் நம்மால் காசநோயை ஒழிக்க முடியும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 2024ல் 1.07 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டனர். 12.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2000ல் இருந்து இதுவரை 8.30 கோடி பேர் காசநோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர். 2030க்குள் தொற்றுநோயில் இருந்து காசநோயை விடுவிக்க ஐ.நா., திட்டமிட்டுள்ளது.
 
 

Dhivisha dhivi

unread,
Mar 25, 2026, 9:13:02 PMMar 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 தொடரும் கதிரியக்க கசிவு
 சோவியத் யூனியனின் (தற்போது ரஷ்யா) 'கோம்சோமோலெட்ஸ்' நீர்மூழ்கி கப்பல் 1989 ஏப். 7ல் நார்வே கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. இதில் 42 பேர் பலியாகினர். 5511 அடி ஆழத்தில் மூழ்கியது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின்பும், அக்கப்பலில் இருந்து கதிரியக்க கசிவு தொடர்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, அக்கப்பலில் இருந்த வெடிகுண்டுகளில் இருந்து 'புளுட்டோனியம்' வெளியேறியது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 தகவல் சுரங்கம்

 உலக ஊதா தினம்

உலகில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர நாடுகளில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 1 முதல் 1.5 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளை நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பால் வலிப்பு ஏற்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 26ல் உலக ஊதா தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
 
 
 

Dhivisha dhivi

unread,
Mar 28, 2026, 8:03:05 PMMar 28
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 சுவருக்குள் ஊடுருவும் செயற்கைக்கோள்
 
பிரிட்டனை சேர்ந்த 'சாட்வு' நிறுவனம் தயாரித்த 'ஹாட்சாட்-2' செயற்கைக்கோள், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட்டில் மார்ச் 29ல் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதிலுள்ள தெர்மல் கேமரா, தடிமனான சுவர்கள், கட்டடங்கள், புகையினுள் ஊடுருவி உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும். இது

மலை சுரங்கத்துக்குள் உள்ள ஈரானின் அணுசக்தி மையத்தில் பணியாளர்களின் நடமாட்டத்தை படம் பிடிக்கும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 தகவல் சுரங்கம்
 உலக பியானோ தினம்
 இசை கருவிகளில் ஒன்று 'பியானோ'. இந்த கீபோர்டில் 88 கட்டைகள் உள்ளன. இதை உணர்த்தும் விதமாக ஆண்டின் 88வது நாள், மார்ச் 29ல் (லீப் ஆண்டில் மார்ச் 28) உலக பியானோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. பியானோ இசைக்கருவி 1709ல் இத்தாலியின் பிரான்சிஸ்கோ கிறிஸ்டோபொரியால் முதலில் வடிவமைக்கப்பட்டது. பியானோ இசைப்பவர்களை ஒருங்கிணைத்து, பியானோ இசையை பிரபலப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். திரைப்பட பாடல்கள், பின்னணி இசை உள்ளிட்டவற்றில் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.

 
 
 

Dhivisha dhivi

unread,
Mar 31, 2026, 9:30:43 PMMar 31
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 உப்பின் உயரம் எவ்வளவு

பூமியின் பெரும்பகுதி நீர், கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது. அப்போது பாறை, மணலில் உள்ள தாது, உப்பு கடலில் சேர்க்கப்படுகிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. n
ஆனால் உப்பு தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது. அந்த சுழற்சி (மழை நீர் தாது, உப்புகளை ஆறு வழியாக கடலுக்கு) தொடர்கிறது. இதுவே கடல் நீர் உப்புக்கு காரணம். ஒருவேளை கடல்நீர் முழுவதும் ஆவியாகி விட்டால், உப்பு படிந்திருக்கும் தடிமன் 500 அடி உயரம் இருக்கும். இது 40 மாடி கட்டடத்துக்கு சமம்.
 தகவல் சுரங்கம் முட்டாள்கள் தினம் பின்னணி

 தகவல் சுரங்கம்
 ஜூலியன் காலண்டரில் ஏப். 1 தான் புத்தாண்டு. பின் 13ம் போப் கிரிகோரி 1582ல் புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இதில் ஜன. 1 புத்தாண்டாக மாற்றப்பட்டது. இதை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை பயன்படுத்த துவங்கின. 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை கிண்டல் செய்வதற்காக ஏப்.1ல் 'முட்டாள்கள் தினம்' அறிமுகமானது. பின் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Apr 6, 2026, 9:10:26 PMApr 6
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 ஈபிள் டவரை மிஞ்சும் விண்கல்

 
 
 
 n
உலக அதிசயங்களில் ஒன்றான 'ஈபிள் டவரை' விட பெரிய விண்கல் (99942 அபோபிஸ்), 2029 ஏப். 13ல் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. பூமியில் இருந்து 32 ஆயிரம் கி.மீ., துாரத்தில் கடக்க உள்ளது. இது வினாடிக்கு 7.4 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. இது பூமியில் இருந்து நிலவு இருக்கும் (3.84 லட்சம் கி.மீ., ) துாரத்தை விட 12 மடங்கு குறைவு. ஆனால் இது பூமியை தாக்குமா என்பது பற்றி விஞ்ஞானிகள்ஆய்வு செய்து வருகின்றனர். பிரான்சின் பாரிசில் உள்ள ஈபிள் டவரின் உயரம் 1083 அடி. ஆனால் இந்த விண்கல் உயரம் 1476 அடி. இந்த விண்கல்லை 2004 ஜூன் 19ல் கண்டறிந்தனர்.
 தகவல் சுரங்கம்

 உலக சுகாதார தினம்

 
 சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப். 7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் 1948 ஏப்.7ல் நிறுவப்பட்டது. இந்நாளே உலக சுகாதார தினமாக உருவாக்கப்பட்டது. 'சுகாதாரத்துக்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் துணை நிற்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். சத்தான உணவு எடுப்பது, போதிய துாக்கம், தினமும் யோகா, 40 நிமிட நடைபயிற்சி, மது, புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடித்தால் நோயின்றி வாழலாம்.

Dhivisha dhivi

unread,
Apr 13, 2026, 9:18:43 AMApr 13
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 தும்மலின் வேகம்
 ஒவ்வாமையால்தான் தும்மல் ஏற்படுகிறது. துாசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழையும்போது, அவற்றைத் தும்மலின் மூலம் உடல் வெளியேற்றுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் தும்மல் வெளிப்படும் போது, கண்கள் அனிச்சையாக மூடிக்கொள்கின்றன.

தும்மலில் இருந்து வெளிப்படும் கிருமிகள் கண்களுக்குள் செல்லாமல் இருப்பதற்காக, இமைகள் மூடிக் கொள்கின்றன. கண், மூக்கு போன்ற உறுப்புகள் இணைப்பில் இருப்பதால் மூக்குக்கு ஒரு பிரச்னை என்றால் கண்களும் சேர்ந்து அந்தச் செயலில் பங்கேற்கின்றன.

 
 




Dhivisha dhivi

unread,
Apr 14, 2026, 1:56:10 AMApr 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 எதிரொலி கேட்பது எப்படி

 
  காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 330 மீட்டர். எதிரொலி என்பது ஒலியின் பிரதிபலிப்பு. நமக்கு அருகே உருவாகும் ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் மீது மோதி நமது திசை நோக்கி பிரதிபலிப்பதே எதிரொலி. ஒலிபடும் பொருள், ஒலியைக்கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து குறைந்தது 17.2 மீட்டருக்கு தொலைவில் இருந்தால் மட்டுமே எதிரொலி கேட்க வாய்ப்பு உருவாகும். மலை போன்ற உயரமான இடங்களில் இருந்து கூக்குரலிடும்போது ஒலி எதிரொலிக்கிறது.

 
/தகவல் சுரங்கம்
 பாலைவனமாக மாறிய ஏரி

 
 


 கஜகஸ்தான் வடக்கே, உஸ்பெகிஸ்தான் தெற்கே அமைந்துள்ளது ஏரல் கடல். இது அளவில் சிறியதாக இருப்பதால் ஏரி என அழைக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய உப்புநீர் ஏரியாக திகழ்ந்தது. பரப்பளவு 68 ஆயிரம் சதுர கி.மீ. ஆனால் 1960களில் இந்த ஏரிக்கு செல்லும் முக்கிய நீராதாரமான ஆறுகளை சோவியத் யூனியன் தன் பாசன வசதிக்கு திருப்பியது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து 2007ல் பரப்பளவு வெறும் 10 சதவீதமாக குறைந்தது. நான்கு ஏரியாகவும் பிரிந்தது. பின் இதில் சில வறண்டு பாலைவனமானது. வடக்கு ஏரல் ஏரியை மட்டும் கஜகஸ்தான் பாதுகாத்து வருகிறது.


 

Dhivisha dhivi

unread,
Apr 15, 2026, 12:01:25 AMApr 15
to valluvanpaarvai, brailleacl, inaiathendral
அறிவியல் ஆயிரம்

  மச்சம் உருவாவது எப்படி

நம் தோல் பல அடுக்குகளை கொண்டது. மெலனின் எனும் நிறமியை உமிழும் சிறப்புவகை 'மேலானோகைட்ஸ்' செல்கள் தோலில் உள்ளன. இந்த மெலனின் செறிவே நம் உடலுக்கு நிறத்தைத் தருகிறது. மெலனின் குறைவாகச் சுரந்தால் வெளிர் நிறம், அதிகமெனில் கருப்பாக இருக்கும். இந்த செல் ஏதோ காரணத்தால் தவறாக துாண்டப்பட்டு தோலில் குறிப்பிட்ட இடத்தில் கூட்டாக உருவாகிறது. இந்த செல்களின் தோல் பகுதி சூரிய ஒளியில் துாண்டப்பட்டு மச்சம் உருவாகிறது. மெலனின் கருமை நிறமி. எனவேதான், அது கூடுதலாக இருக்கும் பகுதி கருப்பான மச்சமாக மாறுகிறது.
 தகவல் சுரங்கம்

 உலக ஓவிய தினம்

ஓவியம் என்பது அழகியல் சார்ந்த கலை. இது நம் சிந்தனை திறனை வளர்க்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக புகழ்பெற்ற ஓவியரான இத்தாலியின் லியோடர்னோ டாவின்சியின் பிறந்த தினமான ஏப். 15, யுனெஸ்கோ சார்பில் உலக ஓவிய தினமாக கொண்டாடப்படுகிறது. ஓவியர்களின் திறமையை அங்கீகரிப்பது, படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வருவதே இதன் நோக்கம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் இருந்து ஓவியத்திறனை வளர்க்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

Dhivisha dhivi

unread,
Apr 18, 2026, 8:27:09 PMApr 18
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

புதிய வகை சிலந்தி
 சிலந்தி வகைகளில் 'பிங்க் பிளோயட்' என்ற புதிய இனத்தை தென் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். நீளம் 3 - 4 மி.மீ., இவை எறும்பு, ஈ, கொசு, வண்டுகளை உணவாக உட்கொள்கிறது. இவற்றில் பல தொந்தரவு தரும் அல்லது நோய் பரப்புபவையாக கருதப்படுகின்றன. முக்கியமாக இது தன் உடல் அளவை விட, ஆறு மடங்கு பெரிய உயிரினத்தை (எறும்பு உட்பட) பிடித்து உண்கிறது. இதன் தோற்றம், பரிணாம வளர்ச்சி, சூழலியல் பங்கு ஆகியவற்றை புரிந்துகொள்ள டி.என்.ஏ. அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.தகவல் சுரங்கம்


 உலக கல்லீரல் தினம்

   உடல் உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல் உட்பட பல பணிகளை மேற்கொள்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 19ல் உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நல்ல பழக்கங்கள்; வலுவான கல்லீரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. துரித உணவு, உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பிடித்தல் உள்ளிட்டவை காரணமாக கல்லீரல் பாதிக்கிறது. உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
S
 

Dhivisha dhivi

unread,
Apr 20, 2026, 7:22:17 AMApr 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 அணு மின்சாரத்தின் மூலப்பொருள்

 
 

 யுரேனியம் என்பது ஒரு தனிமம். இதன் அணு எண் 92. குறியீடு 'யு'. சில வகைகள் உள்ளன. இதில் இயற்கையான நிலையில் கிடைப்பவை 'யுரேனியம் - 238'. இதை பயன்படுத்த முடியாது. செறிவூட்டம் செய்து 'யுரேனியம் - 235'-ஐ பிரித்து எடுக்க வேண்டும். இதுதான் அணுமின், ஆயுத தயாரிப்பதற்கான மூலப்பொருள். 'யுரேனியம் -235'ன் சக்தியில் 0.7 சதவீதம் தான் 'யுரேனியம் - 238'. அணுமின் நிலையங்களில் 25%க்கு குறைவான 'யுரேனியம் -235' பயன்படுத்தப்படுகிறது. 90% அதிகமான 'செறிவூட்டிய யுரேனியம் - 235' தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
 

 

Dhivisha dhivi

unread,
Apr 20, 2026, 7:23:51 AMApr 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

Mohan

unread,
Apr 24, 2026, 8:58:05 PMApr 24
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்
  கடலோர மக்களுக்கு பாதிப்பு

உலகின் முக்கிய ஆற்று டெல்டா பகுதிகள், கடல் நீர்மட்டம் உயர்வதை விட வேகமாக
தாழ்வாகி வருகின்றன என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வு
தெரிவித்துள்ளது. பெரிய 40 ஆற்று டெல்டாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. 18
ஆற்று டெல்டா, கடல்நீர்மட்ட உயர்வை விட, வேகமாக தாழ்ந்து வருகிறது. இதனால்
கடலோர பகுதிகளில் 23.60 கோடி பேர் பாதிக்கப்படுவர். பொதுவாக ஆற்று டெல்டா
என்பது ஆறு கடலில் வந்து சேரும் இடத்தில் அது கொண்டு வரும் வண்டல் மண்ணை
சேர்ப்பதால் உருவாகும் சமவெளிப் பகுதியாகும். இது முக்கோண வடிவில் இருக்கும் தகவல் சுரங்கம்
 பென்குயின், மலேரியா தினம்

மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சார்பில் ஏப். 25ல் உலக
மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மலேரியாவை ஒழிக்க உந்துதல்: தற்போது
நம்மால் முடியும். தற்போது நாம் அதைச் செய்தாக வேண்டும்' என்பது இந்தாண்டு
மையக்கருத்து. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி அனோபிலிஸ் பெண் கொசுவின் வயிற்றில்
தொற்றிக்கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது.
மலேரியாவால் 2023ல் 26.30 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5.97 லட்சம் பேர்
பலியாகினர். பறவையினத்தை சேர்ந்த பென்குயின்களை பாதுகாக்க ஏப். 25ல் உலக
பென்குயின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Apr 25, 2026, 11:46:20 PMApr 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  நிலவில் அதிக குளிர் ஏன்

பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. ஆரம் 1740 கி.மீ. இங்கு வெப்பநிலை பூமியை போல இருப்பதில்லை. நிலவில் பகல் நேர வெப்பநிலை 121 டிகிரி செல்சியஸ். இரவு நேரத்தில் நிலவில் வெப்பநிலை மைனஸ் 133 டிகிரி செல்சியஸ்க்கு செல்லும். காரணம் பூமியை போல வளிமண்டலம் நிலவுக்கு இல்லை. மெல்லிய 'எக்சோஸ்பியர்' தான் இருக்கிறது. இதன் ஈர்ப்பு விசை வாயுக்களை தக்கவைக்கும் அளவு வலிமையாக இல்லை. இதனால் பகலில் சூரிய ஒளியை தடுக்க முடியாததால் அதிகமாவும், இரவில் இந்த வெப்பத்தை தக்க வைக்கும் திறன் இல்லாததால் அதிக குளிராகவும் இருக்கிறது. ்
தகவல் சுரங்கம்

  அறிவுசார் சொத்துரிமை தினம்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்., 26ல் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  

Dhivisha dhivi

unread,
May 1, 2026, 9:17:18 PMMay 1
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  உலகை முந்தும் ஐரோப்பா

 ெப்பநிலை உயர்வில் உலக சராசரியை விட, இரண்டு மடங்கு அதிக வெப்பநிலை உயர்வு ஐரோப்பாவில் ஏற்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது. 'பருவநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல. அது தற்போதைய யதார்த்தம்' என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகில் கடந்த 30 ஆணடுகளில், ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் 0.27 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் 0.58 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. எனவே தொழில்புரட்சிக்கு பிந்தைய சராசரி வெப்பநிலை உயர்வு, உலகில் 1.4 டிகிரி, ஐரோப்பாவில் 2.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
 
  தகவல் சுரங்கம்

  உலக சூரை மீன் தினம்

 
 
 கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சம் (20 சதவீதம்) சூரை மீன் எனும் 'டுனா' மீன்கள் தான். மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் நீந்தும். இது 11 ஆயிரம் கி.மீ., துாரம் புலம் பெயர்கிறது. உலகில் விற்பனை செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8 சதவீதம் இதுதான் இடம் பெறுகிறது. இந்த மீனில் ஒமேகா-3, மினரல்ஸ், புரோட்டின், வைட்டமின் பி12 உள்ளன. உணவு, பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி என முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரை மீனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 2ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 
 

Dhivisha dhivi

unread,
May 8, 2026, 8:46:08 PM (11 days ago) May 8
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 பெரிய சுனாமி அலை

 அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான அலாஸ்காவில் 2025 ஆக. 10ல் சுனாமி அலை உருவாகியது. இது ஈபிள் டவரின் உயரத்தை விட 1.5 மடங்கு அதிகமாக (1578 அடி) இருந்தது. இது உலகில் இதுவரை பதிவான சுனாமி அலைகளில் இரண்டாவது உயரமானது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதலிடத்தில் 1958ல் இதே அலாஸ்காவில் ஏற்பட்ட சுனாமி அலை (1720 அடி உயரம்) உள்ளது. மூன்றாவது இடத்தில் 1980 மே 18ல் வாஷிங்டனில் ஏற்பட்ட சுனாமி அலை (853 அடி) உள்ளது. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகிறது.

/

/
தகவல் சுரங்கம்

  'டெபாசிட்' திரும்ப கிடைக்குமா...

   லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 34 1(ஏ) படி, வேட்புமனுவுடன் ரூ. 25 ஆயிரம் (எஸ்.சி., / எஸ்.டி., வேட்பாளர்களுக்கு ரூ. 12,500) டெபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும். அதுபோல சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவுடன் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் (எஸ்.சி., / எஸ்.டி.,க்கு ரூ. 5 ஆயிரம்) கட்டணமாக செலுத்த வேண்டும். இதை திரும்பபெற தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் 'டெபாசிட்' தொகை இழந்ததாக அறிவிக்கப்படுவர்.
 




Dhivisha dhivi

unread,
May 9, 2026, 11:33:32 PM (10 days ago) May 9
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  புயல் வீசாத பகுதி எது







உலகில் புயல், சூறாவளியே ஏற்படாத பகுதி ஒன்று உள்ளது. அதன் பெயர் பூமத்திய ரேகை. இது நிலநடுக்கோடு எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கற்பனை கோடு. இதற்கு வடக்கே வட அரைக்கோளம், தெற்கே தென் அரைக்கோளம் எனப்படுகிறது. மற்ற பகுதிகளை விட, இங்கு 'கொரியாலிஸ் விசை' (புவி சுழற்சியால் காற்று தன் பாதையில் இருந்து விலகி வீசுவது) காரணமாக புயல், சூறாவளி உருவாகாது. நிலநடுக்கோடு பகுதியிலிருந்து 5 டிகிரி வடக்கு - 5 டிகிரி தெற்கு அட்சங்களில் இருந்தே (
 
   தகவல் சுரங்கம்
  சர்வதேச ஆர்கன் மரங்கள் தினம் n
முன்பு வட ஆப்ரிக்காவில் இருந்த ஆர்கன் மரங்கள் இன்று மொரோக்கோ நாட்டில் மட்டும் உள்ளன. இது 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கி வளரும். இதன் விதைகளில் இருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த மரம் குட்டையாக இருப்பதால் ஆடுகள் இதன் மேல் ஏறி இலைகளை மேய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதன் ஆயுட்காலம் 200 ஆண்டுகள். இந்த மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 10ல் உலக ஆர்கன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

Dhivisha dhivi

unread,
May 11, 2026, 10:43:55 PM (8 days ago) May 11
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  தாவரங்களை பாதுகாப்போம்
   
நம் உணவுக்காக 80 சதவீதம், உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனுக்காக 98 சதவீதம் தாவரங்களை சார்ந்தே இருக்கிறோம். சர்வதேச அளவில் பாதுகாப்பான வர்த்தகம், தாவரங்களை காப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 12ல் சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உணவுப் பாதுகாப்பிற்கான தாவர உயிரியல் பாதுகாப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஆண்டுதோறும் 24 கோடி கன்டெய்னர்கள் சரக்குகள், தாவர உணவுகளை ஏற்றிக்கொண்டு நாடுகளுக்கு இடையே பயணிக்கிறது.


  தகவல் சுரங்கம்
  உலக செவிலியர் தினம்
 
 
 
 
  நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது. இவர்களது சவாலானபணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; உயிரை காக்கும் செவிலியர்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இவர்களது பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை (மே 12) கவுரவிக்கும் விதமாக 1974ல் சர்வதேச செவிலியர் சங்கத்தால் இத்தினம் தொடங்கப்பட்டது.


 
 

Dhivisha dhivi

unread,
May 12, 2026, 11:48:27 PM (7 days ago) May 12
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

  உலகை முந்தும் எலன்மஸ்க்
 உலகின் விண்வெளி துறையில் அமெரிக்காவின் எலன் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சார்பில் பல விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பும் விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் 14,844 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. இது மற்ற உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக அனுப்பிய செயற்கைக்கோள்களை (15,062) விட, 218 தான் குறைவு. விரைவில் இதை முந்தி முதலிடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
  நீண்டகால சபாநாயகர்
 
சென்னை மாநில சட்டசபையில் 1952ல் முதல் சபாநாயகராக சிவசண்முகம் பதவி வகித்தார். அதை தொடர்ந்து 1968 வரை மொத்தம் 5 பேர் இப்பதவியை வகித்தனர். பின் 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின், சட்டசபையின் முதல் சபாநாயகராக புலவர் கோவிந்தன் பதவி வகித்தார். தற்போது 15வது சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் நேற்று பதவியேற்றார். தமிழகத்தில் 1952ல் இருந்து இன்று வரை 20 பேர் சபாநாயகர் பதவி வகித்துள்ளனர். இதில் நீண்டகாலம் பதவி வகித்தவர் பி.தனபால். இவர் 2012 அக். 10 - 202
 
 
    தகவல் சுரங்கம்

Dhivisha dhivi

unread,
May 17, 2026, 4:54:44 AM (3 days ago) May 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

   அதிகம் நேரம் துாங்கினால்...
 தினமும் குறிப்பிட்ட நேரம் துாங்குவது அவசியம். அதிக நேரம் துாங்குவது மற்றும் குறைந்த நேரம் துாங்குவது மூளை, இதயம், நுரையீரல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உட்பட பல உடல் உறுப்புகளை, விரைவில் வயதாக மாற்றுகிறது என அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. இதில் தினமும் 6.4 மணி -- 7.8 மணி நேரம் துாங்குபவர்களுக்கு இப்பாதிப்பு குறைவாக இருக்கிறது. உடல் உறுப்புகள் வயதாவதை கணக்கிட, இயந்திரக் கற்றலை பயன்படுத்தி 17 உறுப்பு மண்டலங்களுக்கான 23 உயிரியல் கடிகாரங்களை உருவாக்கினர். இதன்மூலம் உடலுறுப்புகளின் வயதை கண்டறிந்தனர்.
 தகவல் சுரங்கம்
 
  தொலைத்தொடர்பு, ரத்த அழுத்த தினம்

* சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு 1969 மே 17ல் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
   அமைதியான  உயிர்கொல்லி பீ.பி; ‘டீன்’ கீதாஞ்சலி பேச்சு
* உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 100 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
  

Dhivisha dhivi

unread,
May 18, 2026, 11:06:29 PM (18 hours ago) May 18
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம் : வளையங்கள் உருவான வரலாறு
 சூரிய குடும்பத்தில் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களுக்கு வளையங்கள்உள்ளன. இவை பெரும்பாலும் உறைந்த நீர் பனிக்கட்டி, லட்சக்கணக்கான பாறைத்துகளால் ஆனவை. இதில் சனி கோளுக்கு அதிக வளையங்கள் உள்ளன. இவற்றில் ஏழு முக்கிய அடிப்படை வளையங்கள் உள்ளன. சனியின் வளையங்கள், அதன் மேற்பரப்பில் இருந்து 2.82 லட்சம்கி.மீ., துாரத்தில் உள்ளன. வளையங்களின் உயரம் 30 அடி இருக்கும். நெதர்லாந்தின் கிறிஸ்டியான், 1655ல் வளையங்கள் இருப்பதை கண்டறிந்தார். சனி கோள் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை.
 தகவல் சுரங்கம் : நியாயமான விளையாட்டு தினம்

  நட்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, வாய்ப்பளித்தல், பாகுபாடின்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 19ல் சர்வதேச நியாயமான விளையாட்டு (பேர் பிளே) தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது போட்டியில் பங்கேற்பவர்கள் இடையே பரஸ்பர மரியாதை, ஒருவரதுதிறமைக்கு மற்றொருவர் மதிப்பளித்தலை வெளிக்காட்டுகிறது. இது சமத்துவத்தை ஊக்குவித்து கலாசாரவேறுபாட்டை ஒன்றிணைக்கிறது. விளையாட்டு எவ்வாறு சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இளைஞர்களுக்கு வெளிக்காட்டுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages