a
4அறிவியல் ஆயிரம்:முதல் கச்சா எண்ணெய் கிணறு
மின்சார வாகனங்கள் அறிமுகமானாலும், பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில் தான் இயங்குகின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள் இறந்தபின் நொதிக்கப்பட்டு மண்ணில் புதையுண்டன.
இவை மணல், களிமண் படிவுகளால் சூழப்பட்டு நிலத்துக்கு அடியில் நிலவும் அதிகப்படியான அழுத்தம், வெப்பத்தால் அடர் கருப்பு நிற எண்ணெய் வளங்களாக (கச்சா எண்ணெய்) மாறின. இதை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 1866ல் அசாமில் முதல் கச்சா எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது.
தகவல் சுரங்கம்:நீளமான தேசியகீதம்
நாட்டுப்பற்றை வளர்ப்பதில் தேசிய கீதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அந்தந்த நாடுகளின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை குறிப்பிடும் விதமாக இருக்கும். இசையுடன் சேர்த்து பாடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் அடிப்படையில் உலகின் பெரியது உருகுவே நாட்டின் தேசிய கீதம்.
இதை முழுவதும் பாடி முடிக்க 6 நிமிடம் ஆகும். கிரீஸ் நாட்டின் தேசிய கீதம், 158 பத்திகளை கொண்டது. 1823ல் இயற்றப்பட்டது. இதை முழுவதும் பாடி முடிக்க 55 நிமிடம் ஆகும். ஆனால் முதல் இரண்டு பத்தியை மட்டும் தேசிய கீதமாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துகிறது.
d=