அறிவியல் ஆயிரம்:சூரியனை நெருங்கும் விண்கலம்
சூரிய மேற்பரப்பு வெப்பம், சூரிய புயல், துகள்கள் பற்றி ஆய்வு செய்ய 2018 ஆக. 12ல் அமெரிக்காவின் 'நாசா' 'பார்க்கர்' விண்கலத்தை அனுப்பியது.
n
இது சூரியனை இதுவரை இல்லாத அளவில் 2026 மார்ச் 11ன் படி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து 62 லட்சம் கி.மீ., துாரம் என்ற அளவில் நெருங்கியுள்ளது. 2018ல் இருந்து 27வது அதிகபட்சம். மேலும் இது சமீபத்தில் மணிக்கு 6,92,017.92 கி.மீ. வேகம் என்ற உச்ச நிலையை எட்டியது. இது டில்லி - மும்பைக்கு 4 வினாடியில் செல்வதற்கு சமம். சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ., துாரத்தில் பூமி உள்ளது.
தகவல் சுரங்கம்:உலகின் நீளமான குகை
அமெரிக்காவின் கென்டஸ்கி மாகாணத்தில் உள்ளது 'மமூத் கேவ்' குகை. இதன் நீளம் 686 கி.மீ., இது உலகின் நீளமான குகை அமைப்பு என அழைக்கப்படுகிறது. இது 33 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என அந்நாட்டின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் 'மமூத் கேவ் தேசியப் பூங்கா'1941ல் அமைக்கப்பட்டது. இது யுனஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் பரப்பளவு 210 சதுர கி.மீ. ஆண்டுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். பசுமை ஆறு, இப்பகுதியில் ஓடுகிறது.