அறிவியல் ஆயிரம் : பூமியில் ஹைட்ரஜன்
பூமியில் ஹைட்ரஜன்
பூமியின் மேலோடு பகுதியில் அதிகளவில் ஹைட்ரஜன் இருக்கிறது. இது 1.70 லட்சம் ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்ளது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, துர்ஹாம், கனடாவின் டொரண்டோ பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உதவியோடு, நீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜன் அணுக்களை பிரிப்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. உலகில் சில இடங்களில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில், பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : விளையாட்டின் மகத்துவம்
விளையாட்டின் மகத்துவம்
நட்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, வாய்ப்பளித்தல், பாகுபாடின்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 19ல் சர்வதேச நியாயமான விளையாட்டு (பேர் பிளே) தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது விளையாட்டில் பங்கேற்பவர்களிடம் பரஸ்பர மரியாதை, ஒருவரது திறமைக்கு மற்றொருவர் மதிப்பளித்தலை வெளிக்காட்டுகிறது. இது சமத்துவத்தை ஊக்குவித்து கலாசார வேறுபாட்டை ஒன்றிணைக்கிறது. மேலும் விளையாட்டு எவ்வாறு சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இளைஞர்களுக்கு வெளிக்காட்டுகிறது.