அறிவியல் ஆயிரம் : மனிதர்களின் நிலவு பயணம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 3, 2026, 8:20:31 PMApr 3
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம் : மனிதர்களின் நிலவு பயணம்

 நிலவுக்கு மனிதர்கள் செல்வது இது (ஆர்டிமிஸ் II) முதன்முறையல்ல. கடந்த 1968 டிச., 21ல் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம், 'அப்பலோ 8' விண்கலத்தை பிராங்க் போர்மன், ஜிம் லோவல், வில்லியம் ஆண்ட்ரஸ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கு அனுப்பியது. அவர்கள் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தில் இருந்தவாறே நிலவின் தரைப்பரப்பை புகைப்படம் எடுத்தனர். பின் டிச. 27ல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். இத்திட்டம் அடுத்து 1969 ஜூலை 16ல் நிலவில் மனிதர்களை தரையிறங்கிய 'அப்பலோ 11' திட்டத்துக்கு வழிகாட்டியாக அமைந்தது.
 தகவல் சுரங்கம் : சுரங்க பாதுகாப்பு, கேரட் தினம்
 *உலகில் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் வெடிமருந்து விபத்தில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஏப். 4ல் சுரங்க பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன்தருகிறது. உலகில் ஆண்டுக்கு 4 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் மூன்று இடங்களில் சீனா, உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா உள்ளன. கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்.4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages