அறிவியல் ஆயிரம் : புதிய முறையில் குடிநீர் திட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு செலவு அதிகம் என்பதால் இத்தொழில்நுட்பம் பரவலாக்கப் படவில்லை. இந்நிலையில் மின்சாரம் இல்லாமல், சூரிய ஒளியை பயன்படுத்தி கடல்நீரை, குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதனால் செலவும் குறைகிறது. சூரிய ஆற்றலை உறிஞ்சி கடல்நீரை நன்னீராக்கும் செயல் முறைக்குத் தேவையான, முப்பரிமாண ஒளி-வெப்ப ஆவியாதல் பொருளாக, நானோ துகள்களை பயன்படுத்தி இதை செயல்படுத்துகின்றனர்.
தகவல் சுரங்கம் : உலகின் தனிமையான தீவு
உலகின் தனிமையான தீவு
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது 'டிரிஸ்டன் டா குன்கா' தீவு. பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ளது. பரப்பளவு 207 சதுர கி.மீ., மக்கள்தொகை 221. இந்த தீவை சுற்றி குறைந்தது 2500 கி.மீ., துாரத்துக்கு, மக்கள் வாழும் பகுதியே இல்லை. இது உலகின் தனிமையான தீவு என அழைக்கப்படுகிறது. இத்தீவுக்கு விமானம், ஹெலிகாப்டர் வசதி கிடையாது. கப்பல் பயணம் மட்டுமே உள்ளது. தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் இருந்து கப்பல் இயக்கப்படுகிறது. துாரம் 3179 கி.மீ., இத்தீவுக்கு அருகிலுள்ள (2434 கி.மீ.,) மக்கள் வாழும் பகுதி செயின்ட் ஹெலீனா தீவு.