அறிவியல் ஆயிரம்:பறவைகளின் முட்டை வடிவம்
பறவைகளின் முட்டைகள் பெரும்பாலும் கோள, நீள் உருளை வடிவத்தில் உள்ளன. உருண்டையாக இருப்பதில்லை. இதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பறவைகளின் பறக்கும் திறனைப் பொருத்தே முட்டைகளின் வடிவம் கோளம், நீள் உருளை வடிவத்தில் அமைகிறது என கண்டறிந்தனர்.
நீண்ட துாரம் பறக்கும் பறவைகளின் முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும், கோழி போன்று அதிகம் பறக்காத பறவைகளின் முட்டைகள் கோள வடிவத்திலும் இருக்கின்றன. அதாவது பறவைகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு முட்டைகளின் வடிவம் அமைகிறது.
தகவல் சுரங்கம்:ஆயுத தொழிற்சாலை தினம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தி தொடங்கியது. இந்நாளே (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
n
இது 'பாதுகாப்பு துறையின் நான்காவது கை' என அழைக்கப்படுகிறது. இதன்கீழ் 41 ஆயுதத் தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிறுவனங்கள்,மூன்று மண்டல மார்க்கெட்டிங் மையங்கள் செயல்படுகின்றன. தரை, ஆகாயம், கடல் பகுதி பாதுகாப்புக்குதேவையான ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, பரிசோதனை பிரிவுகளில் செயல்படுகிறது.