அறிவியல் ஆயிரம்வெற்றியை தரும் 'இடது கை'

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 4, 2026, 7:47:41 PM (9 days ago) Mar 4
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்வெற்றியை தரும் 'இடது கை'

 உலகில் சிலர் இயற்கையாகவே இடது கை பழக்கம் உடையவராக இருப்பர். இவர்கள் உலக மக்கள்தொகையில் 10 - 15 சதவீதம் உள்ளனர். இந்நிலையில் இவர்கள், வலது கை பழக்கம் உடையவர்களை விட அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக உள்ளனர்.
 இவர்களுக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருக்கும் என ஜெர்மனியின் மெடிக்கல் ஸ்கூல் ஹம்பர்க் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. சில விளையாட்டுகளில் முத்திரை பதிக்கின்றனர். முந்தைய ஆய்வுகளில் இவர்கள் படைப்பாற்றல், மொழி அறிவில் சிறந்து விளங்குவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 தகவல் சுரங்கம்:ஆயுத குறைப்பு தினம்
 இன்று ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா - உக்ரைன் உட்பட சில நாடுகளிடையே போர் நடக்கிறது. உலகில் எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. போரில் பயன்படுத்தும் ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 உலகில் அணு ஆயுதம் உட்பட ஆயுதங்களை குறைப்பது, பரவலை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 5ல் சர்வதேச ஆயுத குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ராணுவத்துக்கு செலவிடும் நிதி, தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2023ல் 209 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் 12,400 அணு ஆயுதங்கள் உள்ளன.
 
Reply all
Reply to author
Forward
0 new messages