அறிவியல் ஆயிரம்: ஆறு கோள்கள் ஒன்றாய் காண...

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Feb 24, 2026, 7:52:56 PMFeb 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்: ஆறு கோள்கள் ஒன்றாய் காண...

 சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் வெவ்வேறு வேகத்தில், துாரத்தில் இருந்து சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றன. அவ்வகையில் சில கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் வானியல் அதிசயம் அரிதாக நடைபெறும்.
 இதன்படி 2026 பிப். 28ல் சூரியன் மறைவுக்கு பின் புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன் என ஆறு கோள்கள் நேர்கோட்டில் வருகின்றன. வானிலையை பொறுத்து யுரேனஸ், நெப்டியூனை பைனாகுலர் வழியாகவும், மற்றவற்றை நேரடியாகவும் பார்க்கலாம். சில நேரம், புதனை பார்ப்பதும் கடினமாக இருக்கலாம்.
 தகவல் சுரங்கம்

 சிறிய பாலுாட்டி உயிரினம்

வவ்வால் வகைகளில் ஒன்று 'பம்பிள்பீ' எனும் 'பெரும் தேனீ வவ்வால்'. இவை மேற்கு தாய்லாந்து, தென்கிழக்கு மியான்மரில் ஆற்றங்கரை, குகைகளில் காணப்படுகின்றன. ஒரு குகையில் குறைந்தது 100 எண்ணிக்கையில் குழுவாக வாழ்கின்றன. மாலை, அதிகாலையில் குறைந்த துாரத்தில் இரை தேடி செல்லும். நீளம் (2.9 - 3.3 மி.மீ.) அடிப்படையில் இது உலகின் சிறிய பறக்கும் பாலுாட்டி உயிரினம். எடை 2 கிராம். இதன் மூக்கு, பன்றியின் மூக்கை போல இருக்கும். பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.
Reply all
Reply to author
Forward
0 new messages