அறிவியல் ஆயிரம்:பேசும்போது உருவாகும் நீர்த்துளி
அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும் போது, வாயில் இருந்து புகை வருவது போல இருக்கும். இதற்கு காரணம் காற்றில் உள்ள நீராவி தான். குளிர் பகுதிகளில் நாம் பேசினால் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும்.
அப்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில், குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக (நீர்த்துளி) உருவாகும். அதுதான் புகை போல நமக்கு தெரிகிறது. அப்புகை என்பது மிக நுண்ணிய நீர்த்துளிகளின் தொகுப்பு. இதன் அடிப்படையில் தான், ஐஸ்கட்டி உள்ள கண்ணாடி டம்ளருக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுகிறது.
தகவல் சுரங்கம்:வேட்டி, போர் அனாதை தினம்
தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிப்பது, கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்கும் நோக்கில் ஜன. 6ல் உலக வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜன. 6ல் சர்வதேச போர் அனாதை தினம் கடைபிடிக்கப்படுகிறது.