அறிவியல் ஆயிரம்:நீண்ட ஆயுளின் ரகசியம்
ஒருவர் நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சுகாதார வசதி, நவீன மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கலாம். இந்நிலையில் பிரேசிலில் நுாறு வயதுக்கு மேல் வாழும் 160 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களில் சிலர் மனதளவில் ஆரோக்கியமாகவும், சிலர் பிறர் உதவியின்றி தனியாகவே செயல்படுபவர்களாகவும் இருந்தனர். சிலர் கொரோனாவையும் சமாளித்தவர்கள். இந்த ஆய்வில் நீண்ட காலம் வாழ்வதற்கு, ஒருவரது மரபணு, உயிரியல் காரணிகள் போன்றவையும் காரணமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
தகவல் சுரங்கம்:தேசிய வாக்காளர், சுற்றுலா தினம்
்காளர்
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப் பட்டது. தன்னாட்சி அதிகாரம் மிக்கது. இதன் 60வது ஆண்டை சிறப்பிக்க 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தொடங்கப்பட்டது. கிராம ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்களே ஓட்டளித்து தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தியாவில் மலை, கடல், ஆறு, நீர்வீழ்ச்சி, அணைகள், தேசியப்பூங்கா, பாரம்பரிய, வரலாற்று கட்டடங்கள், கோயில்கள் என பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளன. சுற்றுலா என்பது பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜன.25ல் தேசிய சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது.