minnambalam

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 5, 2026, 7:51:37 PM (8 days ago) Mar 5
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:லண்டனை மிஞ்சும் பனிக்கட்டி
 அண்டார்டிகாவில் கடந்த 30 ஆண்டுகளில் லண்டன் நகரின் பரப்பளவை விட 8 மடங்கு அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன என செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை தெரிவித்துள்ளது.

 இதன்படி அங்கு ஆண்டுக்கு 442 சதுர கி.மீ., என மொத்தம் 12,820 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிக்கட்டி இழக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் உருகும் பனிப்படலத்தால் 2100க்குள் கடல்நீர்மட்டம் 2.2 செ.மீ., அளவு உயர்வதற்கும், 2300க்குள் 17.2 செ.மீ., உயர்வதற்கும் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

 தகவல் சுரங்கம்:பல் மருத்துவர் தினம்

 உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பற்கள். உணவை மெல்லுதல், பேசுதல், புன்னகை உட்பட பல வழிகளிலும் பயன்படுகிறது. பல் சுத்தம், வாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பல் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 6ல் தேசிய பல் மருத்துவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
   லகில் 350 கோடி பேர் வாய்வழி தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் பல் மருத்துவம் முன்னேற்றமடைந்துள்ளது. பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சை முறை உள்ளது. பிரச்னைக்கு துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

Facebook sha 
Reply all
Reply to author
Forward
0 new messages