பாண்டியர் செப்பேடுகள்
திருவரமங்கலம் செப்பேடுகள்இளையன்புதூர் செப்பேடுகள்
பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர்
நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில்
இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர்
ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே
போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும்,
முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும்.[1]
ஏழு முக்கியச்செப்பேடுகள்
முற்கால மற்றும் பிற்கால செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் மிகவும் முக்கியமானவையாக
கருதப்படுகின்றன. அவை,
1.இளையன்புதூர் செப்பேடுகள்
2.வேள்விக்குடிச் செப்பேடுகள்
3.திருவரமங்கலத்துச் செப்பேடுகள்
4.சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை)
5.சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
6.பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்
7.சிவகாசிச் செப்பேடுகள்
காலநிரல்
மேற்கூறப்பட்ட 7 செப்பேடுகளையும் வைத்து பாண்டியர் ஆட்சிக்காலங்கள் (வரிசை) கணிக்கப்பட்டன.
அவை,
இளையன்புதூர்[2]
1.செழியன் சேந்தன்
2.அரிகேசரிவேள்விக்குடி[3]
1.பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - சங்ககாலம். இதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து,
2.கடுங்கோன்
3.அவனி சூளாமணி
4.செழியன் சேந்தன்
5.அரிகேசரி
6.கோச்சடையான்
7.முதலாம் இராசசிம்மன்
8.பராந்தகன்
சின்னமனூர் (சிறியவை)[4]
1.ஜடிலவர்மன்
2.அரிகேசரி
சின்னமனூர் (பெரியவை)[4]
1.ஜடிலன்
2.இரண்டாம் இராசசிம்மன்
3.வரகுணன்
4.சீவல்லபன்
5.இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்
6.மூன்றாம் இராசசிம்மன்
திருவரமங்கலம்[5]
1.மாறவர்மன்
2.நெடுஞ்சடையன்
தளவாய்புரம்
1.பராந்தகன் கோச்சடையான்
2.சீவல்லபன்
3.இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்
சிவகாசி
1.தீவிர கோபன்
2.சீவல்லபன்
3.மானகுலாசலன்
4.மானாபரனன்
5.சுந்தர பாண்டியன் மற்றும் அவன் இளையவன் வீர பாண்டியன்.
பாண்டியர் பற்றிய குறிப்புகள்
மேலுள்ள செப்பேடுகளில் தளவாய்புரம், சின்னமனூர், வேள்விக்குடி போன்ற செப்பேடுகளில்
பாண்டிய அரசர்கள் செய்ததாக சில செயல்கள் குறிக்கப்படுகின்றன. அவை,
1.உலகம் எல்லாம் பேரூழியில் அழிந்தது. பாண்டிய அரசன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்தான்.
மீண்டும் பிரம்மா பூவுலகை படைக்கும் போது அதை சுமக்கும் ஆதிசேசனுக்கு சுமை
அதிகமானதால், பாண்டியனை புவியின் பாரத்தை தாங்குமாறு வேண்டினான். அதற்கு பாண்டியன்
இசைந்து சந்திர வம்சத்தில் மீண்டும் புதனாக (கிரகம்) தோன்றினான். அவன் வழியில் புரூரவசு
என்ற மன்னன் வந்தான் என்று கூறுகின்றன. அதன்படி பின்வரும் பாண்டியர் வம்சம் விளக்கப்ப்டுகின்றது.
1.ஊழியில் அழியாத பாண்டியன் மற்றும் விட்ணு
2.அவரின் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மா
3.பிரம்மா அத்திரி முனிவரை தோற்றுவிக்கிறார்
4.அத்திரி சந்திரனை தோற்றுவிக்கிறார்
5.சந்திரனுக்கு புதன் பிறக்கிறான்
6.புதனுக்கு புரூரவசு பிறக்கிறான்
7.இன்னும் பல ஆண்டுகள் கழித்து மேற்கூறப்பட்ட வழியில் இருந்து தெளிவில் சந்திரனை
மிஞ்சியும், ஒளியில் சூரியனை விஞ்சியும், ஞானத்தால் தேவர்களின் குருவான பிரகசுபதியை
விஞ்சியும் பாண்டியர் குலம் பூவுலகில் தோன்றுகிறது.
1.பாற்கடலை பாண்டியர்கள் கடைந்தனர்
2.தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் சார்பில் போரிட்டு அசுரகணங்களை அழிக்கின்றனர்.
3.இந்திரன் தன் உலகத்துக்கு அழைக்க அங்கு சென்ற பாண்டியன் இந்திரன் ஆசனத்தில் அமர்ந்தான்.
4.இதனால் இந்திரன் வருணனை ஏவ வருணன் பாண்டிய நாட்டை ஊழியாக அழிக்க முயல கடலை தன்
வேலெறிந்து அடக்குகிறான் ஒரு பாண்டியன்.
5.இந்திரனின் முடியை உடைத்தான் ஒரு பாண்டியன்.
6.இந்திரனின் முத்தாரத்தை அணிந்து கொண்டான் ஒரு பாண்டியன்.
7.மேருவின் மீது தன் சின்னமான இரு கயல்களை பொறிக்கிறான் ஒரு பாண்டியன்.
8.அகத்தியரை பாண்டியர்கள் குல குருவாகக் கொண்டனர்.
9.அரிச்சந்திரனின் நகரத்தை கவர்ந்து அவனின் கொற்றம், குடை முரசம் போன்றவற்றைக்
கைப்பற்றுகின்றனர்.
10.இராவணனை தோற்கடித்து தேவர்களுடன் சமாதானம் செய்து வைக்கின்றனர்.
11.அர்ச்சுனனனை தோற்கடித்தனர்.
12.அர்ச்சுனனின் வசு சாப்த்தை தீர்த்தனர்.
13.மகாபாரதப் போரில் பாண்டவர்கள் சார்பில் போரிட்டு கௌரவர்களை தங்கள் யானைப் படை மூலம்
வெல்கின்றனர்.
14.மகாபாரத்த்தை தமிழ் படுத்தினர்.
15.1000 வேள்விகளை செய்து 1000 யானைகளை அந்தணர்களுக்கு தானமாக கொடுக்கின்றனர்.
16.இன்னும் பல அரசர்களை அடக்கியதாகவும், இந்திரன், அசுரர்கள் போன்றவர்களை பலமுறை
தோற்கடித்தாகவும் பல வீரச் செயல்கள் கூறப்படுகின்றன.
செப்பேடுகளின் விவரங்கள்
செப்பேடுகளின் பெயர்கள்
தானம் கொடுத்த வேந்தனின் பெயர்
பாதுகாக்கப்ப்டும் இடம்
செப்பேடுகளை வெளியிட்ட அமைப்புகள்
செப்பேடுகளின் விவ்ரம்
செப்பேடுகள் கிடைத்த இடம்
இளையன்புதூர்
மாறவர்மன் அரிகேசரி
ஆவணம்
3 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.
மதுரை
வேள்விக்குடி
நெடுஞ்சடையன்
பிரித்தானிய அருங்காட்சியகம்
செந்தமிழ்
10 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.
தெரியவில்லை
திருவரமங்கலம்
நெடுஞ்சடையன்
மதராசிய அருங்காட்சியகம்
இந்திய பழம்பொருளகம்
7 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.
தெரியவில்லை
சின்னமனூர் (சிறியது)
தெரியவில்லை
மத்திய தொல்லியல் துறை, மைகசூர்
தென்னிந்திய கல்வெட்டுகள்
3 ஏடுகள் மட்டுமே உள்ளன, வட்டெழுத்து, சில எடுகள் கண்டறியப்படவில்லை.
சின்னமனூர், பெரியகுளம் வட்டம், மதுரை மாவட்டம்
தளவாய்புரம்
பராந்தகன் வீர நாராயணன்
டி.என். சுப்பிரமணியன்
தமிழ் வரலாற்றுக்கழகம்
7 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.
தளவாய்புரம், கோவிலபட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
சின்னமனூர் (பெரியது)
இராச சிம்மன்
மத்திய தொல்லியல் துறை, மைகசூர்
தென்னிந்திய கல்வெட்டுகள்
7 ஏடுகள் மட்டுமே உள்ளன, வட்டெழுத்து, முதலும் இறுதியுமான ஏடுகள் கிடக்கவில்லை.
சின்னமனூர், பெரியகுளம் வட்டம், மதுரை மாவட்டம்
சிவகாசி
வீர பாண்டியன்
மதராசிய அருங்காட்சியகம்
தமிழ் வரலாற்று கழகம்
5 ஏடுகள், வட்டெழுத்து, இரண்டாம் ஐந்தாம் ஏடுகள் உடைந்து உள்ளன.
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
மூலம்
•பாண்டியர் செப்பேடுகள் பத்து. 40, பீட்டர்சு தெரு, சென்னை - 14: தமிழ் வரலாற்றுக்கழகம்.
1967.
உசாத்துணை
•திருஞானசம்பந்த சுவாமிகள். "திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள்
மூன்றாம் திருமுறை" பக்கம் 140திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள மூல நூலான பாண்டியர்
செப்பேடுகள் பத்து என்னும் நூலில் எவ்வாறு பாண்டியரின் வரலாறு கணிக்கப்பட்டதென விரிவாக
உள்ளது.
tamilvu.org. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
மேற்கோள்களும் குறிப்புகளும்
1.↑ "தொல்பொருள் சான்றுகள்".
tamilvu.org. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
2.↑ T.S. SUBRAMANIAN. "How a Pandya ruler tackled rebellion".
hindu.com.
பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
3.↑ "South Indian Inscriptions, PANDYA INSCRIPTIONS, INTRODUCTION".
whatisindia.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
4.↑ 4.0 4.1 "No. 206.—TWO PANDYA COPPER PLATE GRANTS FROM SINNAMANUR".
whatisindia.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
--
இவன் முனைவர். சே. திவாகர்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு.
மின்னஞ்சல்:
divak...@gmail.com,
nagad...@gmail.com
அலைப் பேசி எண்: 9444143645