அறிவியல் ஆயிரம்:மறைந்திருக்கும் விண்கல்

0 views
Skip to first unread message

Mohan

unread,
Mar 9, 2026, 8:51:48 PM (4 days ago) Mar 9
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்:மறைந்திருக்கும் விண்கல்

 சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான போது கோளாக
உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல். 1801ல்
கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 10 லட்சம் விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில் இன்னும் கண்டு பிடிக்கப்படாத 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட
விண்கற்களால் பூமி ஆபத்தில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கற்களில் ஒன்று, நம் பூமியை நோக்கி நகர்ந்தால், நாசாவின் 'டார்ட்'
உள்ளிட்ட எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உதவாது என எச்சரித்துள்ளனர்.
  தகவல் சுரங்கம்:உலக பெண் நீதிபதிகள் தினம்
 நீதியை நிலைநாட்டுவதில் நீதிபதிகளின் பங்கு முக்கியமானது. பெண்
நீதிபதிகளின் பணிகளை அங்கீகரிக்கவும், அனைத்து நாடுகளும் நீதித்துறையில்
பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் மார்ச் 10ல்
உலக பெண் நீதிபதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 'நீதியில் பெண்கள், நீதிக்காக பெண்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்களை விட பெண் நீதிபதிகள் அதிகம்.
அங்குள்ள உச்ச நீதிமன்றங்களில் 41 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இதை
மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

Reply all
Reply to author
Forward
0 new messages