இலக்கியத்தில் கண்கள்

938 views
Skip to first unread message

professer k. kumar

unread,
Nov 2, 2013, 6:53:08 AM11/2/13
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com, Thamaraikkannan B
இலக்கியத்தில் கண்கள்
சிலர் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள். அப்பொழுதெல்லாம் காட்டிக்
கொடுக்கும் தகவல் உடல் நுட்பம் ‘கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு
வலிமையதிகம். கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்து
விடுகிறது.
ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை அந்தக்
கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டு சேர்க்கும் என்பது மிகையல்ல.
இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.
காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம். கண்கள் இரண்டால் பாடல் சமீபத்திய
உதாரணம். ஆனால் ஆண்டாண்டு காலமாய் இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு
லயித்திருக்கிறார்கள். என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.
திருக்குறள்... வள்ளுவர்... மிகுந்த பொறாமை கொள்ளச் செய்யும் ஒரு மனிதர் (அல்லது
திருக்குறளை தொகுத்த பலர்) மீது ஏற்படும் என்றால் அது திருக்குறள் இயற்றப்பட்ட கைகளின்
மீதுதான்.
ஆம், வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை. அதில் காதல், கண்கள் என இப்படி.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து.
ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால், அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த
பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/ பார்வை.
(தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே. அந்தத் தானை
தான் வள்ளுவர் சொல்வது).
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து.
என்னுயிர் பறிக்கும் எமனோ, பார்வைக்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும்
சேர்ந்ததோ அவளின் கண்கள்.
இன்றைய ‘லட்சத்திச் சொச்ச’ காதல் கவிதைகளின் மூலம் இந்த குரல் தானோ?
இருநோக்கு இவளுண் கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கொன் றந்நோய் மருந்து.
இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது. ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை.
மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை.
ரசனையின் உச்சம் வள்ளுவா. மீண்டும் வா தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது.
திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இரு மடங்கு.
‘பூ ஒத்து அலமரும்
தகைய, ஏஒத்து
எல்லாரும் அறிய
நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட
மென்தோள், மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள்
பெருமழைக் கண்ணே
இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு
நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பல வகைக் கண்களுடன் ஒப்பிட்டு தலைவனைப்
பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான்.
அழகியல் அல்லது அழகியல் மட்டுமே. தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப்
பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.
மாண்ட மாரிப் பித்துகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்.
மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,
செவ்வரிகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்கள் மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை
விரியச் செய்யும் வரிகள் அவை.
காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் ‘யல் விழியாள் என் காதலியே’ என்று எழுதி
வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய
பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி என்று தொடங்கும் பாடலில்.
கயல் ஏர் உண்கண்
கனங்குழை மகளிர்
கைபுணையாக
நெய்பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும்...
என்கிறார். கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.
புறநானூற்றில் போனால் போகிறது என்று ஆணின் சோழன்.
கரிகாற் பெருவளத்தானின்
கண்ணை இப்படி,

களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது
கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம்
கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்...

என்று கண்ணை வில்லொடு
கோர்க்கிறார் புலவர்
கருங்குழலாதனார்.
கம்பர்...
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள்வேல்
என கண்களைக் கூர் வேலுக்கு ஒப்பிட்டுக் கூறும் கம்பர்
கை வளை திருத்துபு கடைக்
கணின் உணர்ந்தாள் என கடைக்கண் பார்வையின் ஆழம் பற்றி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற, நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து
நின்றாள்.
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண் ஐயனை, ஒல்லை வா என்று அழைப்பது போன்றது
கமலச் செங்கண்ணன் ராமனை அந்த ஊர் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறதாம். பெண்ணுக்கு இணையாக
ஆணையும் வாணித்ததில் கம்பர் தனிச் சிறப்பு பெறுகிறார்.
மையோ மரகதமோ
மரிகடலோ மலை முகிலோ
அய்யோ இவன்
வடிவென்பதோர் அழியா
அழகுடையான்.
என்று ராமனை வியப்பது ஒரு உதாரணம்.
மாடத்தில் நின்ற சீதையின் கண்களை இப்படி
வென்று அம்மானை,
தார் அயில் வேலும் கொலை
வாளும் பின்ற, மானப் பேர்
கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்.
என்கிற கம்பர் அடுத்து,
கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன
மதர்க்கும் விழி கொண்டாள் என்று முடிக்கிறார்.
இராமன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் சீதையின் நிலையை மால் உற வருவதலும், மனமும்
மெய்யும் தன் நூல் உறு மருங்குல் போல், நுடங்குவாள், நெடுங்கால் உறு கண் வழிப் புகுந்த
காதல் நோய் என்கிறார். விழியில் விழுந்து இதயம் நுழைந்த கம்ப வரிகள்... கண்கள் பற்றி
இப்படி போய்க் கொண்டே இருக்கிறது இலக்கியத்தில்.

--


“அடங்க மறு
அத்து மீறு
திரும்பி எழு
திருப்பி அடி
வெற்றி நமதே”
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
மாநிலக் கல்லூரி
சென்னை-5.
அலைபேசி எண் – 9444218357.

"முனைவர். சே. திவாகர்"

unread,
Nov 3, 2013, 12:32:45 AM11/3/13
to brail...@googlegroups.com
சிலப்பதிகாரத்தினை இக்கட்டுறையாளர் நினைவூட்ட மரந்தார் போலும்!
மனையரம் படுத்த காதையில், கோவலன் கண்ணகியை வருனிக்குமிடத்து,
“அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே

அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?”
என்று கேட்கின்றான்.
ஆருமுகக் கடவுளாகிய முருகப்பெருமான், உணக்கு உரவிணனாக இல்லாவிடினும், அவனது
பங்கிற்கு தனது ஒளி;மிகுந்த வேலினை எடுத்து இரண்டாக்கி உனது இருகண்களாய்ச் சமைத்தணன்.
என்பது மேற்கூரிய வரிகளின் பொருளாகும்.
மாகவியின் கண்களை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே, இளங்கோவடிகள் வருணித்திருப்பதும் இங்கு
சுட்டிக்காட்டத்தக்கது.
நல்ல கட்டுறை வழங்கியமைக்கு நன்றி தோழர்..

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
நன்றி,
இவண் முனைவர். சே. திவாகர்.

Skype: divakar.sekar2
அலைபேசி: 9444143645
Reply all
Reply to author
Forward
0 new messages