அறிவியல் ஆயிரம்:முதல் 'சூப்பர் மூன்'
முதல் 'சூப்பர் மூன்'
வானியல் ஆர்வலர்களுக்கு ஆண்டின் தொடக்கமே சிறப்பாக அமைகிறது. ஆண்டின் (2026) முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு ஜன.,3 மாலை 5:45 மணிக்கு மேல் தோன்றுகிறது. பூமி - நிலவு இடையே சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ., இதில் அதிகமாக 4.06 லட்சம் கி.மீ., குறைவாக 3.56 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்து நிலவு, பூமியை சுற்றி வரும்.
இதில் பூமிக்கு அருகில் வரும் போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது. இது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14% பெரியதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் பிரகாசிக்கும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி (நடுவில்), நிலவு வரும்போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது.
தகவல் சுரங்கம்:வானவில் தேசம் எது
வானவில் தேசம் எது
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று தென் ஆப்ரிக்கா. இங்கு பல இனம், மொழி, கலாசாரம் உடைய மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்நாட்டின் அலுவல் மொழி மொத்தம் 12. இதன் காரணமாக இந்நாடு 'வானவில் தேசம்' என அழைக்கப்படுகிறது.
நிறவெறி காலத்துக்குப்பின், நாட்டின் பன்முகத்தன்மையை குறிப்பிடும் விதமாக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. இதன் மக்கள்தொகை 6.30 கோடி. பரப்பளவு 12 லட்சம் சதுர கி.மீ., இந்நாட்டின் கடற்கரையின் நீளம் 2798 கி.மீ. நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்டவை இதன் எல்லை நாடுகளாக உள்ளன.
S
க