அறிவியல் ஆயிரம் : 'நிபா' வைரஸ் பரவுவது எப்படி

2 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 11, 2026, 8:58:55 PMJun 11
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : 'நிபா' வைரஸ் பரவுவது எப்படி
 
 
கேரளாவில் மீண்டும் 'நிபா' வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 'நிபா' வைரஸ் பாதித்த பறவை (வவ்வால்), விலங்குகள் (பன்றி, ஆடு, பூனை, குதிரை) கடித்த, எச்சில் பட்ட பழங்களை, மனிதர்கள் பயன்படுத்தும்போது பரவுகிறது. உலகில் 1999ல் முதன்முதலாக மலேசியாவில் 'நிபா' வைரஸ் மனிதருக்கு பரவியது. வைரஸ் பாதித்த பன்றிகள் வழியாக பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக 2001ல் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிக்கப்பட்டனர். தென்னிந்தியாவில் 2018ல் கேரளாவின் கோழிக்கோட்டில் 'நிபா' வைரஸ் பரவியது.
 தகவல் சுரங்கம் : குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
 
 உலக குழந்தைகளில் 7.5 சதவீதம் பேர் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் 5.40 கோடி பேர் கடினமான வேலையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர்களில் 61% விவசாயத் துறையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 2000ல் இருந்து 2024ல் 2% குறைந்துள்ளது. குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தை தொழிலுக்கு ரெட்கார்டு: குழந்தைகளுக்கு நியாயமான விளையாட்டு, பெரியவர்களுக்கு மரியாதையான வேலை' என்பது இந்தாண்டு மைரெட்கார்டு: குழந்தைகளுக்கு நியாயமான விளையாட்டு, பெரியவர்களுக்கு மரியாதையான வேலை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.




Reply all
Reply to author
Forward
0 new messages