அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் புலம் பெயர்வு

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 16, 2026, 8:39:16 PMJun 16
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் புலம் பெயர்வு
 

  அதிகரிக்கும் புலம் பெயர்வு

வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், போர் ஆகியவற்றால் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம் பெயர்கின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி 2020ல் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.5 கோடி பேர் என உயர்ந்துள்ளது. இது 2000ல் ஆண்டுக்கு 1.3 கோடி பேர் என இருந்தது. உலகில் 2008ல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி, 2019ல் கொரோனா பரவல் ஆகியவற்றின் போது மட்டும் புலம்பெயர்வு குறைவாக இருந்தது.
  தகவல் சுரங்கம் : வறட்சி ஒழிப்பு தினம்
 





வறட்சி ஒழிப்பு தினம்

பூமியின் நிலப்பகுதியில் பாதி, மேய்ச்சல் நிலமாக உள்ளது. இதை சார்ந்து 200 கோடி பேர் உள்ளனர். 70 சதவீத கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு வினாடிக்கு நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு, வளமான நிலப்பகுதி பாதிப்படைகிறது. உலகில் 40 சதவீத நிலங்கள் பசுமையை இழந்து விட்டன. இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மேய்ச்சல் நிலங்கள் : அங்கீகரித்தல், கவனம் செலுத்துதல், மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Reply all
Reply to author
Forward
0 new messages