அறிவியல் ஆயிரம் : பூமியில் தண்ணீரின் ஆதாரம்
PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM
பூமியில் தண்ணீரின் ஆதாரம்
அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்தது தான் தண்ணீர். இந்நிலையில் பூமிக்கு தண்ணீர் எப்படிவந்தது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் விண்கல் பூமியின் மீது மோதியதால் தண்ணீர் வந்தது என்ற முந்தைய கூற்றை, விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். பெரும்பாலான அளவு தண்ணீர் என்பது, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போதே கடல், ஆற்று நீருக்கான மூலக்கூறுகள் தோன்றியிருந்தன என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : உலக பாரம்பரிய தினம்
PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM
உலக பாரம்பரிய தினம்
ஒரு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் பாரம்பரிய சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த யுனெஸ்கோ சார்பில் ஏப்.18ல் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. 'பேரழிவு, போர்களில் இருந்து பாரம்பரியத்துக்கு ஆபத்து: 60 ஆண்டுகால நடவடிக்கையில் இருந்து தயார்நிலை, கற்றல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்களை பட்டியலிட்டு, அவற்றை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறது. இதில் இந்தியாவின் 43 இடங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 35 கலாசாரம், 7 இயற்கை, ஒன்று இரண்டும் கலந்தது.