அறிவியல் ஆயிரம் : ஐந்து நிமிட உடற்பயிற்சி
ஐந்து நிமிட உடற்பயிற்சி
இன்றைய சூழலில் நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் உட்பட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் வீதம் தினமும் உடற்பயிற்சி செய்வது, உடல்நல, மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என ஆஸ்திரேலியாவின் எடித் கோவான் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி வீட்டிலேயே நாற்காலியில் அமர்ந்த நிலையில் சில அசைவுகள், 'புஷ்-அப்' உள்ளிட்ட சில உடற்பயிற்சியில் ஈடுபடுவது தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : உலக புத்தக தினம்
தகவல் சுரங்கம்
உலக புத்தக தினம்
உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். இதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கைவளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்தவழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல்,அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம்பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.23ல் உலகபுத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.*உலகில் அதிக நாடுகளில் பேசும் மொழியாகஆங்கிலம் உள்ளது. இதன் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஏப். 23ல் உலக ஆங்கில தினம்கடைபிடிக்கப்படுகிறது.