அறிவியல் ஆயிரம் : ஒன்பதாவது கோள்
ஒன்பதாவது கோள்
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இந்நிலையில் சூரிய குடும்பத்தின் விளிம்பில் 9வது கோள் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை 'எக்ஸ் கோள்' என நாசா குறிப்பிட்டுள்ளது. தைவான், ஜப்பான், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 40 ஆண்டு விண்வெளி தரவுகளை ஆய்வு செய்து, தொலைதுாரத்தில் இருந்து சூரியனை ஒரு கோள் சுற்றி வருவதற்கான அறிகுறி இருக்கிறது. இது சூரியனில் இருந்து 7483 கோடி - 10,716 கோடி கி.மீ., தொலைவில் இருந்து சுற்றுகிறது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் பத்திரிகை சுதந்திர தினம்
பத்திரிகை சுதந்திர தினம்
உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1993 முதல் மே 3ல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனத்துக்கு 'யுனெஸ்கோ' சார்பில் விருது வழங்கப்படுகிறது.