சங்க இலக்கியத்தில் முகில்

469 views
Skip to first unread message

kempu kumar

unread,
Aug 28, 2021, 11:03:44 PM8/28/21
to brail...@googlegroups.com
சங்க இலக்கியத்தில் முகில்

கெ. குமார் உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை மாநிலக் கல்லூரித்
தன்னாட்சிச் சேப்பாக்கம் சென்னை 600005.

மழையைத் தருவன மேகங்களே, மேகங்கள் மழையைத் தருவதோடு வெயிலிலிருந்து
நமக்கு இதந்தருகின்றன. மேகம் என்பது நுண்ணிய நீர்த்திவலைகளாலோ அல்லது
நுண்ணிய
நீர்த்திவலைகளுடன் ஆன, பனிக்கட்டிகளால் நீர்த்திவலைகளின் ஓர்
தொகுதியாகும். மேலே செல்லும்போது, குளிரடைந்து. (condensation) ஏற்பட்டு,
மேகமாய் உருவாகிறது'. ஈரமான காற்று ஆவிச்சுருக்கம் அமைந்துள்ள, வானிலைக்
வெவ்வேறு வளிமண்டலத்தின் வானில் காற்றால் அளவிலான கூறுகளில் காலங்களில்
இவ்வியலில் நீர்த்திவலைகள், செலுத்தப்படும்.
மேகத்தின் வகைகள்
வெவ்வேறு காலங்களில் வானில் தோன்றி ஓடும் மேகங்கள் வானிலையாய்வு
வல்லுநர்களால் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. லூக் ஹவார்ட்
(Luke Howard) என்ற ஆங்கிலேய மருந்தாளுநர் மற்றும் வானிலை அறிவியலாளர்
1803 ஆம் ஆண்டு முதன் முதலாக மேகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்.
அவையாவன (1) கீற்று வகை முகில்கள் (Cirrus clouds) (2) படை முகில்கள்
(Stratus clouds) (3) குவியல் முகில்கள் (Cumulus clouds) ஆகியவையாகும்.
மேகங்கள் வளிமண்டலத்தில் உருவாகின்ற உயரத்தின் அடிப்படையில் மூன்று
பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன, அவையான (அ) உயர்மட்ட மேகங்கள் (high
clouds) (ஆ )இடைமட்ட மேகங்கள் (medium clouds) (இ) கீழ்மட்ட மேகங்கள்
(low clouds) என்பனவாகும். கீழ்மட்ட மேகங்கள் தரையிலிருந்து இரண்டு கிலோ
மீட்டர் உயரம் வரை தோன்றக்கூடியவை. இவை பனிமுகில் (ஸ்ட்ரேடஸ்), படைத்
திரள் முகில் (ஸ்ட்ரேடோக்யுமுலஸ் ), திரள் முகில் (க்யுமுலஸ்),
இடிமுகில்கள் (க்யுமுலோநிம்பஸ் )என நான்கு வகைப்படும். பனிமுகில்கள்
தரைக்கருகில் தோன்றக்கூடியவை. இவை டிசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்களில்
அதிகமாகத் தோன்றக்கூடியவை. இரவில் பூமி விரைவில் குளிர்ச்சியடைகிறது.
இதனால் பூமியை ஓட்டியுள்ள காற்றுமண்டலமும் குளிர்ச்சியடைகிறது. அவ்வாறு
குளிரடைவதனால் நீராவி, ஆவிச்சுருக்கம் (condensation) அடைந்து
பனித்துளிகளாக மாறுகிறது. பனித்துளி அதிகமான அளவில் உருவானால் அதனை
மூடுபனி என்று அழைக்கிறோம். இதனை தரைமட்ட மேகம் என்றும் அழைப்பர். மலைப்
பகுதிகளில் மழை பொழிந்த பின்னர் இத்தகைய மேகங்கள் சிறு சிறு கூட்டமாய்
நகர்வதுண்டு.
மேகங்களின் அமைப்பு
உயர் மட்ட மேகங்கள் கீற்று முகில் (cirrus) , கீற்றுத்திரள் முகில்
(cirro cumulus), கீற்றுப்படை முகில் (cirro stratus) என மூவகைப்படும்.
கீற்று முகில்கள் நார் போன்ற அமைப்பினையும் பட்டுப் போன்ற மென்மையான
தோற்றத்தையும் கொண்டது. கீற்றுத்திரள் முகில் துண்டுகளாகக் காணப்படும்.
இவ்வெண்முகிற் துண்டுகள் ஆட்டு உரோமத்தைப் போலவும் மீனின் செதில்களைப்
போலவும் காட்சியளிக்கும், கீற்றுப்படை முகில் மெலிந்த தகடு போன்ற
உருவினைப் பெற்றதாகும். இது வெண்திரை போலக் காணப்படும். சில நேரங்களில்
இவ்வகை மேகம் வானம் முழுவதும் பரவி வானத்திற்கு பால் போன்ற வெண்ணிறத்தைத்
தருகிறது. இடை மட்ட மேகங்கள் இடை மட்டத் திரள் முகில் (Alto cumulus),
இடை மட்டப் படை முகில் (Alto Stratus), கார்ப்படை முகில் (Nimbostratus)
என மூவகைப்படும். இடை மட்டத் திரள் முகிலின் தோற்றம் கரடு முரடாக
ஆங்காங்கே கோபுரம் போன்று காணப்படும். இடை மட்டப் படை முகில்கள் நார்
அமைப்புடன் சாம்பல் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறம் பெற்று இருக்கும்.
இவை அடர்த்தியானவை. கார்ப்படை முகில்கள் அடர்த்தி அதிகமான உருவமற்ற
மேகங்களாகும். இவற்றள் புயற்படலம், பனிப்படலம், மழைப்படலம் எனப் பல
படலங்கள் உண்டு. அம்மேகங்களிலிருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டே
இருக்கும். கீழ்மட்ட மேகங்கள் படைத்திரள் முகில் (Strato cumulus), பனி
முகில் (startus), திரள் முகில் (Cumulus), இடிமுகில் (cumulonimbus) என
நால்வகைப்படும். படைத்திரள் முகில்கள் திரண்ட தொகுதிகளாகவோ, கருஞ்சாம்பல்
நிறம் கொண்ட சுருள்களாகவோ அமைந்து காணப்படும். சில சமயங்களில் கருப்பு
நிறத்தில் குறைந்த உயரத்தில் காணப்படும். பனிமுகில்கள் மிகவும் குறைவான
உயரத்தில் மூடுபனி போன்ற தோற்றத்தில் காணப்படும். திரள் முகில்கள் குமிழ்
வடிவில், அடித்தளம் சமமாகவும் தட்டையாகவும் காணப்படும். மேற் பகுதி
காலிப்ளவர் பூவைப் போன்று காணப்படும். இடிமுகில்கள் மலைகள் போன்றும்
கோபுரங்கள் போன்றும் காணப்படும் . இவ்வகை மேகங்களிலிருந்து இடி, மின்னல்,
திடீர்ப் பெருமழை, கீழ்நோக்கிய திடீர்ப்பெருங்காற்று ஆகியவை தோன்றும்',
மேகங்கள் உருவாகும் விதம்
ஈரமான காற்று வளிமண்டலத்தின் மேலே எழும்ப நான்கு வெவ்வேறு காரணங்கள்
உள்ளன. நான்கு காரணத்தாலும் ஏற்படும் மழையும் அதனை உருவாக்கும்
மேகங்களும் வெவ்வேறு விதமானவை, அந்த நான்கு காரணங்களாவன: (1) வெப்பச்
சலனம், (2) மலைப்பகுதியில் ஏறும் காற்று, (3) காற்று முகப்புகள்,( 4
)பருவக்காற்று என்பனவாகும். வெப்பச்
சலன முறையில் பூமியிலுள்ள நீர்நிலைகளின் மேல் சூரியனின் கிரணங்கள்
விழுவதால் அந்த வெப்ப சக்தியில் நீர் ஆவியாகி மேலெழும்பி வளிமண்டலத்தில்
மேகமாய் உருவாகிறது. ஈரப்பதம் மிகுந்த காற்று மலைச்சரிவொன்றில்
இயற்கையால் செலுத்தப்படும்போது, அது மேலெழும்புவதால் குளிரடைந்து மேகமாய்
உருப்பெறுகின்றது. அரபிக் கடல் பகுதியிலிருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த
தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறும்போது
மேகங்களாய் உருப்பெறுதலை இதற்கு எடுத்துக்கட்டாகச் சொல்லலாம். வறண்ட,
வெப்பமான காற்றினைக் கொண்ட ஓர் காற்றுத் தொகுதியோ அல்லது ஈரப்பதம்
மிகுந்த குளிர்ந்த காற்றினைக் கொண்ட ஓர் காற்றுத் தொகுதியோ ஒன்றின் மேல்
ஒன்று நகரும்போது நீராவி குளிர்ந்து அவற்றின் முகப்புப் பகுதியில்
மேகமாய் உருமாறுகிறது . இவ்வானிலை நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக
நிகழும் ஒர் வானிலை நிகழ்வாகும். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்
பருவக்காற்றுக் காலங்களில் அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் முறையே
மேகங்கள் உருவாகி நிலம் நோக்கி நகருவது நான்காவது முறையில் மேகங்கள்
உருவாவதற்கு சரியானதோர் எடுத்துக்காட்டாகும்.
மேகங்கள் பற்றிய கலைச் சொற்கள்
தொடர்பான
வானிலை இயல் கலைச்சொல் அகராதி மேகம் பின்வரும் கலைச்சொற்களைத் தொகுத்துத்
தருகிறது”. அவை மேக அளவு (cloud amount), மேக வரைபடத் தொகுப்பு (cloud
Atlas), திடீர்ப்பெருமழை\ cloud burst), மேக விதைப்பு (cloud seeding),
மேக வகை (cloud type), மேக வகைப்பாடு (cloud classification),
மேகமூட்டமான (clouded), பெருமளவு மேகமூட்டமான (generally clouded), ஓரளவு
மேகமூட்டமான (partly clouded), மேகம் நிறைந்த (cloudiness), மேகங்கள்
(clouds), உயர் மட்ட மேகங்கள் (high clouds), கீழ் மட்ட மேகங்கள் (low
clouds), இடை மட்ட மேகங்கள் (medium clouds) மேகமூட்டம் நிறைந்த overcast
clouds), இடிமேகங்கள்( thunder clouds), சிறிதளவு மேகங்கள் (traces of
clouds), மேகம் நிறைந்த (cloudy), மேகமூட்டமுள்ள நாள் (cloudy days),
மேகம் நிறைந்த வானிலை (cloudy weather), கீற்று முகில் (cirus),
கீற்றுத்திரள் முகில் (cirro cumulus), கீற்றுப்படை முகில் (cirro
stratus), இடை மட்டத் திரள் முகில் (Alto Cumulus), இடை மட்டப் படை
முகில் (Alto Stratus), கார்ப்படை முகில் (Nimbostratus), படைத்திரள்
முகில் (Strato cumulus), பனி முகில்( startus), திரள் முகில் (Cumulus),
இடிமுகில் (cumulonimbus), மழையற்ற காலத்துத் திரள்முகில் (cumulus
humilis), உயரமாக வளர்ந்துள்ள திரள்முகில் (dumulus congestus), தொங்கும்
பைகளையுடைய இடிமுகில் (cumulonimbus mammatus)
சங்க இலக்கியத்தில் மேகங்கள் பற்றிய செய்திகள்
மேகங்கள் பற்றிய சொற்கள்
சங்க இலக்கியங்களில் மேகம், எழிலி, கார்', கொண்டல், கொண்டல் மா மலை',
கொண்டல் மா மழை", கொண்மூ" புயல்". மஞ்சு". மழை". அலங்கு மழை". ஆடு மழை".
இன மழை". இள மழை". ஓடுமழை”. கடு இடி மழை" கமஞ் சூல் மா மழை". கருவி மா
மழை, செல் மழை, தண் மழை". துணி மழை". பா மழை". பெரு மழை, மங்குல் மா
மழை", மாரி மழை", வரு மழை", வெண் மழை". மாரி, மாரி மா மழை", மை". வான்"
வானம்". ஆர் கலி வானம்", கருவி வானம், பெய்யா வானம்", கலி கெழு வானம்"
என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது.
மேகங்கள் உருவாதல் பற்றிய சங்க இலக்கியச் செய்திகள்
சங்க இலக்கியப் புலவர்கள் பெரும் நீர்ப்பரப்புகளான கீழைக் கடலிலிருந்தும்
மேலைக்கடலில் இருந்தும் மேகங்கள் உருவாகி வருவதைப் பதிவு
செய்திருக்கிறார்கள். கடல் முகந்து கொண்ட மேகங்கள்", கீழைக் கடலான வங்கக்
கடலிலிருந்து மேகங்கள் நீர் சுமந்து வந்தமை", ஒலிக்கின்ற கடலின் நீரைப்
பருகி மேகங்கள் எழுந்து வந்தமை", பெரிய கடலின் நீரை மேகங்கள் முகந்து
வருதல்" பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகும் மேகங்கள்" ஆகியன
பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது. மாக்கடல் முகந்து, மலை இமைப்பது போல்
மின்னி, சிலை வல் ஏற்றோடு மழை பொழிந்த மேகத்தைப் பற்றியும் . இனிய
நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு எஞ்சிய கடல் நீர் சிறிது நீர்
எனும்படியாக வந்த மேகத்தைப் பற்றியும்" சுறா மீன் கடலில் கக்கிய நீரால்
மேகங்கள் உருவாகி மழையைப் பொழிந்தது பற்றியும் கீழைக் கடலில் உருவாகி
மேற்கு நோக்கி நகரும் மேகங்கள் பற்றியும்" நற்றிணை குறிப்பிடுகிறது.
மேகங்கள் திரை இரும் பனிப்பௌவத்திலிருந்து நீரை செம்மையான முறையில்
முகந்து வருதல், கடல் குறைய நீரெடுத்து மலை குறையப் பெய்தல், காலையில்
கடலில் உதிக்கும் கதிரவன் மாலையில் மலையில் போய் மறையும் வழியில் சென்று
மழையாய் மண்ணில் விழுதல் ஆகியன பற்றி பரிபாடல் பேசுகிறது. மேகங்கள்
உருவாக காற்றில் ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த
ஈரப்பதம் நீர்நிலைகளிலிருந்து குறிப்பாக கடலிலிருந்து ஆவியாகிறது. சங்க
காலத் தமிழகப் பகுதிகள் மூன்று புறமும் கடலால் சூழப்பட்டிருந்தன. எனவே
மேகங்கள் கடலிலிருந்து உருவாகி பெருமக்கள் கண்டுள்ளனர். கடலில் உள்ள நீர்
ஆவியாகி மேகம் உருவாவதையும் மேலும்
பெரிய மாறுதலையும் குறிப்பிட்டுள்ளனர். கூட்டமாகத் திரண்டு கடலின் கண்
படியும் தலைமை மிக்க
முகில்கள் நீரை மொள்ளாமல் மீளா" என்று புறநானூற்றுப் பாடலொன்று மேகமாய்
குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியம் காட்டும் மேக வகைகள்
வருவதைப் தரைநிலை வானிலைக் கண்காணிப்புக் சேகரிக்கப்படும்போது மேகங்கள்
கூடமொன்றில் பற்றிய அவர்கள் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. கண்ணுக்குத்
தெரியும் வான விதானத்தை (visible celestial dome) |
புலவர் மனக்கண்ணால் சேகரிக்கும் தங்களின் பிரிவுகளாகப் நேரத்தில் எட்டுப்
அவ்வெட்டு
பாடலில் பிரித்து, பிரிவினுள் எத்தனை வானிலைத் தரவுகளும் வானிலைத் பங்கு
மேகத்தால் தரவு பின்னர் மறைக்கப்பட்டுள்ளது என்பதனை முதலில் கணக்கிடுவர்.
)அப்போதுள்ள மேகங்களின் வகைகளைக் கண்டறிவர்.
மேகமற்ற வானம்
மேகமற்ற வானம் அதாவது, பகற்பொழுதில் நீலவானம், இரவுப்பொழுதில்
விண்மீன்கள் நிறைந்த வானம் என்பதும் வானிலையியலைப் பொறுத்தவரையில் ஓர்
முக்கியமான தகவலாகும். ஏனெனில் பகற்பொழுதில் மேகமற்ற வானம் காணப்படின்
அதனால் மழை பொழிய வாய்ப்பு இருக்காது, மேலும் பகல்நேர வெப்பநிலை
அதிகரிக்கக்கூடும். இரவுப் பொழுதில் விண்மீன்கள் நிறைந்த மேகமற்ற வானம்
காணப்பட்டாலும் அது மழையில்லா நிலையைக் குறிக்கும். மேலும்
பூமியிலிருந்து விண்ணுக்குச் செல்லும் நீட்டலைக் கதிர்வீச்சு தடையின்றிச்
செல்லும். இதனால் பூமி தொடர்ந்து குளிர்ந்து இரவுநேர வெப்பநிலை தொடர்ந்து
குறையும். எனவே அதிகாலையில் பதிவாகும் குறைந்த அளவு வெப்பநிலையை மேலும்
குறைக்கக்கூடும். மேகமற்ற வானம் பற்றி சங்ககாலப் புலவர்கள் பலர்
குறிப்பிட்டுள்ளனர். வருமழை கரந்த வால் நிற விசும்பின்" என அம்மூவனாரும்
மழைஇல் வானம் மீன்அணிந் தன்ன" என உம்பற்காட்டு இளங்கண்ணனாரும்
அகநானூற்றில் குறிப்பிட்டுள்ளனர். புறநானூற்றில் ஆஅய் அரண்டிரன்
பற்றியதோர் பாடலில் ஆஅய் அரண்டிரன், அடு போர் அண்ணல் இரவலர்க்கு ஈத்த
யானையின், கரவு இன்று, வானம் மீன் பல பூப்பின், ஆனாது" என விண்மீன்கள்
நிறைந்த. மேகமில்லா இரவு வானம் பற்றியும் மீன் திகழ் விசும்பு பற்றி
வேறோர் பாடலிலும் குறிப்பிடப்படுகிறது. மழையற்ற வெளிரிய வானம் பற்றி
வருமழைகரந்த வால் நிற விசும்பினி" என நற்றிணையிலும், மேகமற்ற வானம் பற்றி
கையறவீழ்ந்த மை இல் வானமொடு" என ஐங்குறுநூற்றிலும், மழை நீங்கிய மா
விசும்பில் மதி
சேர்ந்த மகவெண்மீன்" எனப் பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகை போன்ற மேகம்
மேகங்கள் புகை போன்ற வடிவத்தினை உடையதாய் இருந்ததையும் இத்தகைய மேகங்கள்
எத்தகைய காலத்தில் இருந்தன என்பது பற்றியும் சங்க
இலக்கியப் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. இளவேனிற் காலத்தில் புகை
போன்றஅழகிய வெண்மேகங்கள் தவழ்வது பற்றியும்" இருண்ட மேகமானது விண்ணதிர
முழங்கி மிக்க மழையைப் பெய்து ஓய்ந்த பின்னர் புகை போன்ற
நுண்ணிய பனித்துளிகள் கொண்ட மேகமாய் காட்சி தந்தது பற்றியும் மட்கலம்
சுடுகின்ற சூளையின் புகை போலத் தோற்றம் தரும் மேகங்கள் சூழ்ந்த மலை
பற்றியும்" அகநானூற்றில் செய்திகள் காணப்படுகின்றன. அகிலின் புகை போன்ற
மேகம் பற்றி குறுந்தொகைப் பாடலொன்று குறிப்பிடுகிறது.
பஞ்சு போன்ற மேகம்
கியுமுலஸ் cumulus) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்
மழையற்ற நாட்களில் தோன்றும்போது பேர் வெதர் கியுமுலஸ்
திரள்முகில் (fair weather cumulus) என அழைக்கப்படும். இம்மேகங்கள் பஞ்சு
போன்ற அமைப்பினை உடையவை இத்தகைய மேகங்கள் பற்றிக் குறிப்புகள் சங்க
இலக்கியத்தில் காணப்படுகின்றன. மழை நீங்கிய வெண்பஞ்சு போன்ற மேகங்கள்"
பற்றியும் சிறிய குன்றுகளின் மேல் வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சு போன்ற
வெண்மையான மேகம் படிந்து கிடத்தல்" பற்றியும் தமக்கென உரியவரல்லாத தாபத
மகளிர் தம் முயற்சியால் செய்த நுண்ணிய பஞ்சு போலக் கூட்டமாய் காற்றால்
அலைக்கப்படும் மேகம் பற்றியும் ஆண் குரங்கு நறைக் கொடியைக் கொண்டு மலை
மேல் படிந்திருக்கும் வெண்ணிற மேகத்தை அடித்தல்" பற்றியும் வேண்டிய கால
அளவில் மழையைப் பொழிந்த பின்னர் பன்னின பஞ்சைப் போல பொங்கி எழுந்து
மலையைச் சேரும் மேகங்கள் பற்றியும் பகருகின்ற பாடல்கள் மழையில்லா
வெண்மேகங்களையும் பனிமேகங்களையும் சங்க இலக்கியம் காட்டும் பகுதிகளாகும்.
யானை போன்ற மேகம்
மழையற்ற காலத்தில் தோன்றக்கூடிய திரள்முகில்களும் மழைக்காலத்தில்
தோன்றக்கூடிய திரள்முகில் மற்றும் இடிமுகில்களும் பல்வேறு விலங்குகள்,
பறவையினங்கள் போலக் காட்சியளிக்கும். இத்தகைய காட்சிகளைச் சங்க இலக்கியப்
புலவர்களும் கண்டு, பதிவுசெய்திருக்கிறார்கள். சூலுற்ற பெண்
போன்று தோற்றமளிக்கும் மேகங்கள் பற்றி யானை
மேகமூட்டமுள்ள நாள்
ஒரு நகரத்தின் வானிலையைப் பற்றிய முன்னெச்சரிக்கையினை வெளியிடுகையில்
இந்திய வானிலை ஆய்வுத்துறை மேகங்கள் பற்றிய தகவலையும் வெளியிடுவது
வழக்கம். இத்தகவல்கள் மேகமில்லா தெளிவான வானம் காணப்படும் வானம் ஓரளவு
மேகமூட்டத்துடன் காணப்படும் வானம் பெருமளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
வானம் மேகமூட்டம் நிறைந்து வாணப்படும் என்கிற வகையில் அளிக்கப்படும்.
மேகமூட்டம் பற்றிய இவ்வகைத் தகவல்களைச் சங்க இலக்கியப் புலவர்களும்
தங்கள் பாடல்களில் தந்துள்ளனர். சிறிய அளவே நீரையுடைய நாழிகை வட்டில்
கொண்டு நாழிகையை அளந்து கூறுவோர் கூறுவதல்லாமல், பிறவகையில் ஞாயிறு உள்ள
இடம் இதுவெனத் அறியப்படாத வகையில், உலகு அச்சம் கொள்ளுமாறு, முழங்கும்
குளிர்ந்த மேகங்கள் இருந்தது பற்றி அகநானூற்றில் மதுரையாசிரியர்
நல்லந்துவனாரும்" மலைக் குகைகளில் எவ்வாறு இருள் படிந்திருக்குமோ
அதுபோன்ற இருளைத் தருகின்ற மேகங்கள் பற்றி நற்றிணையில் நல்லாவூர்
கிழாரும் வானத்தைக் காண இயலாதவாறு குழுமியிருக்கும் மேகங்களைக்
குறுந்தொகையில் கபிலரும்" கருவூர்க் கதப்பிள்ளை என்ற புலவரும்" பாடியுள்ள
பாடல்களனர். இப் பாடல்களிலிருந்து மேகம் சூழ்ந்த இருண்ட வானம் பற்றிய
சங்க இலக்கியப் புலவர்களின் வானிலை இயல் அறிவு புலப்படுகிறது.
தொங்கும் பைகளையுடைய முகில்
கியுமுலோநிம்பஸ் மம்மடஸ் (curmolonimbus mammatas) எனப்படும் வகை
மேகங்கள், பாலுட்டிகளை நினைவுபடுத்தும் தொங்கும் பைகளையுடைய
இடிமுகில்களாகும். இவ்வகை வானிலையோடு காணப்படுபவையாகும்". இத்தகைய
மேகங்களைச் சங்க இலக்கியப் புலவர்கள் கேடயத்தோடு ஒப்பிட்டுப்
பாடியுள்ளனர். கேடயம் தோல் என்று பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரசினைடைய மன்னர்களின் பலவகைப் படையினரின் கேடயம் போன்ற
கபிலரும்" . அரசர்களின் கோட்டை மதிலின் மேல் போர்க் காலங்களில் ஏறும்
கிடுகுப் படையினரின் நற்றிணையில் நக்கீரரும்
கேடயம் போலக் காட்சியளிக்கும் மேகங்கள் பற்றி
மேகம் போன்ற உருவினை உடைய கேடயங்களைப் பரப்பியபடி சென்ற இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளியின் படைகள் பற்றிப் புறநானூற்றில் பாண்டரங்கண்ணனாரும்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறையின் மேகக்கூட்டம் என மருளுமாறு கேடயம் பல இருந்தமை பற்றிப்
புறநானூற்றில் கிழாரும் வாழியாதனின் கருமையான கேடயங்களைக் காணும்போது
மேகங்களோ என மருளத் தோன்றுவது பற்றியும் யானையின்
மீதும் குதிரையின் மீதும் வீற்றிருக்கும் வீரர்களின் பருவகால மேகம் போலத்
கேடயங்கள் கைகளில் உள்ள. மேகங்கள் மோசமான மேகங்கள் குறுங்கோழியூர்
படையில் பற்றி இருந்த தோற்றமளிக்கும் பாடியுள்ளனர். பெரிய அகநானூற்றில்
பற்றியும் செல்வக்கடுங்கோ பதிற்றுப்பத்தில் கபிலரும்.
பருவ கால முகில்கள்
சங்க காலத் தமிழகம் தென்மேற்கு, வடகிழக்குப் பருவகாலங்களில் மழை பெறும்
பகுதிகளைக் கொண்டது. மழைக் காலத்தில் இப்பகுதிகள் கருத்த மேகங்களால்
சூழப்பட்டிருக்கும்.
இம்மேகங்களுள் இடிமேகங்களும்
செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. கார்
வைக்கோலால் காலத்தில் பெரும்பாணாற்றுப்படை இசைக்கும் கொண்டல் வேயப்பட்டு
இவை வானத்தே இருக்கும். மா பாடலொன்று பாடுகிறது. மழை குறிப்பிடுகிறது.
இப்புறநானூற்றுப் கிழார் வேகமாக காவிரியின் பரவிய இத்தகைய விளங்கும்
கூற்றத்து ஆலத்துாராக தென்கரையிலுள்ள கூரையைப் பற்றிப் இமயத்திலிருந்து
வந்து இன்குரல் மேகங்கள் பற்றிப் புறநானூற்றுப் இருக்கலாம் என்ற
கருத்துள்ளது. எனவே
மேகங்களைப் பாடியுள்ளார் வடகிழக்குப் பருவமழைக் கால கார் காலத்தில்
நீர்பட முகில்கள் செய்யலாம். நகர்ந்து நித்தவினோத வீசும் மேகம்
பேசுகிறது”. வானத்தில் ஓட்டை மேகம்" பற்றிப் பரிபாடல் குறிப்பிடுகிறது,
மேகங்கள் போன்று பாடலை எழுதிய ஆலத்தூர் செல்லும். பற்றி
விழுந்தது பற்றிய வளநாட்டு போலப் வரகு என முடிவு ஐங்குறுநூறு பெருமழை
ஆவூர்க் இவர் தருகின்ற இவை தவிர தூரத்தில் தெரியும் மேகம்*, வெம்மை
தணிவிக்கும் மேகம்''. மதில்களின் மேல் தவழ்கின்ற குறைவான உயரத்தில்
மிதக்கின்ற மேகம்", அசைகின்ற மேகம்" ஆகியன பற்றியும் சங்க காலப்
புலவர்கள் பாடியுள்ளனர்.
இடிமுகில்கள்
இடிமுகில்கள் என்பவை மலைகள் போன்றும் கோபுரங்கள் போன்றும் காணப்படும்.
இவ்வகை மேகங்களிலிருந்து இடி, மின்னல், திடீர்ப் பெருமழை, கீழ்நோக்கிய
திடீர்ப்பெருங்காற்று ஆகியவை தோன்றும். இவை மிகுந்த நிறையுடைய மேகமாகும்.
இதன் செங்குத்து வளர்ச்சி மிக மிக அதிகமாகும். இதன் உச்சி அகன்று, அடி
குறுகிக் கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிய
இரும்பை வைத்து அடிக்கப் பயன்படும் பட்டறைக்கல் (anvil shaped) போன்று
இருக்கும். இடி மின்னலுடன் கூடிய கனமழை, கல்மாரி கலந்து பேரிரைச்சலோடு
வீசும் கடுங்காற்று முதலியன இம்மேகத்தால் உண்டாகின்றன. திரள்முகில்
இடிமுகிலாக மாறும்போது அது கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை (திரை
போன்ற) (veil பெறுகிறது. இடிமுகிலுக்கும் திரள்முகிலுக்கும் உள்ள
வேறுபாடு இதுவே. இத்தகைய ஒளி ஊடுருவும் தன்மை தோன்றுவது கனமழை
பெய்வதற்கான அறிகுறியாகும். இது பெரும்பாலும் நிலநடுக்கோட்டுப் பகுதியில்
அதிகம் ஏற்படுகிறது.
சங்க இலக்கியத்தில் மேகம் பற்றிய
மேகம் பற்றிய வரையறை, மேகத்தின் வகைகள், மேகங்களின் அமைப்பு, மேகங்கள்
உருவாகும் விதம், மேகங்கள் பற்றிய கலைச் சொற்கள் ஆகியன பற்றிய
வானிலையியற் செய்திகள் முதலில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் மேகங்கள்
பற்றிய சொற்கள், மேகங்கள் உருவாதல் பற்றிய சங்க இலக்கியச் செய்திகள்
பற்றிய செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சங்க
காட்டும் மேக வகைகள் என்ற தலைப்பில், மேகமற்ற வானம், புகை, பஞ்சு,
யானை போன்ற தொங்கும் பைகளையுடைய மேகங்கள் பற்றியும் மேகங்கள்,
மேகமூட்டமுள்ள பருவ கால மேகங்கள் நாள் ஆகியவை பற்றியும் பற்றி
விரித்துரைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம் காட்டும் மேக வகைகளில் ஒன்றான
இடிமுகில்கள் மழை, இடியால் என்ற யானை தலைப்பில் வருந்துதல், இடி,
மின்னல், இடியால் இடியுடன் அதிரும் நிலம், நீலவானத்திலிருந்து மின்னல்
(The Bolt from the blue) ஆகியவை பற்றி எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
தொடர்ந்து மலையும் மேகமும், மேகத்தின் இயக்கம் ஆகியவை பற்றி சங்க
இலக்கியப் பகுதிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
Reply all
Reply to author
Forward
0 new messages