அறிவியல் ஆயிரம்:சுற்றி வரும் இலைகள்
தாவரங்களில் பல வகை உண்டு. இதில் 'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 24 அடி உயரம் வளரும். இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை. 22 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும் போது, இதன் சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசைகளிலும் நகர்கிறது.
இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது. இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன. இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படு , நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.
தகவல் சுரங்கம்:அறிவியலில் பெண்களுக்கு முன்னுரிமை
அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா.,சார்பில் பிப். 11ல் அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'செயற்கை தொழில்நுட்பம், சமூக அறிவியல், நிதியை ஒருங்கிணைத்தல் : பெண்கள்,குழுந்தைகளுக்கான ஒருங்கிணைந்த எதிர்காலத்தை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் அறிவியல் ஆராய்ச்சியில் 33.3 சதவீதம்,அறிவியல் பட்டப்படிப்பில் 35 சதவீதம், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 22 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது அதிகரிக்கப்பட வேண்டும்.