அறிவியல் ஆயிரம் : விரைவில் வெப்பமாவது எது

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
May 11, 2026, 8:02:01 AM (8 days ago) May 11
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : விரைவில் வெப்பமாவது எது
 
விரைவில் வெப்பமாவது எது

கடும் வெயிலில் உலோகத்தையோ காகிதத்தையோ வைத்தால் விரைவில் சூடாகி விடுகிறது. ஆனால் சூரிய ஒளியில் நேரடியாக எவ்வளவு நேரம் இருந்தாலும் தாவர இலைகள் சூடாகுவதில்லை. இதற்கு காரணம் தாவர இலைகள் பல அடுக்கு செல்களால் ஆனவை. இதில் கீழ், மேல் வழியாக 'ஸ்டோமெட்டா' எனும் துளைகள் உள்ளன. இந்த இலைத்துளைகள் மூலமாக வாயு பரிமாற்றம் நடக்கிறது. இதில் எப்போதும் ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். இதனால்வெப்பம்
  தகவல் சுரங்கம் : தேசிய தொழில்நுட்ப தினம்
 
 தொழில்நுட்ப தினம்

இந்தியா 1998 மே 11, மே 13ல், ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்தது. இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் இத்தினத்தின் நோக்கம். இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
Reply all
Reply to author
Forward
0 new messages