அறிவியல் ஆயிரம் : சூரியன் நிறம் மாறுவது ஏன்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 11, 2026, 8:36:39 PMApr 11
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : சூரியன் நிறம் மாறுவது ஏன்

 சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் அடிவானத்தில் இருக்கிறது. பகல் பொழுதைவிட காலையிலும் மாலையிலும் சூரியன் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது ஒளிவிலகல் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியில் உள்ள காற்று மண்டலத்தால் நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. அப்போது குறைந்த அலைநீளமுடைய நீலம், ஊதா போன்ற நிறங்கள் தெரிவதில்லை. அலைநீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம் நமக்கு தெரிகிறது. இதே ஒளிவிலகல் காரணமாகத்தான் பகலைவிட காலை மாலையில் சூரியன் சற்றுப் பெரிதாகத் தோன்றுகிறது
  தகவல் சுரங்கம்

 மனிதர்களின் விண்வெளி பயணம்

 
 
1957 அக். 4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' விண்ணில் செலுத்தப்பட்டது. உலகில் 1961 ஏப். 12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின். இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தியும் ஏப். 12ல் மனிதர்களின் விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நிலவு, செவ்வாய்

கோள்களில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஆராய்ச்சியில் விண்வெளி துறை ஈடுபட்டுள்ளது.


Reply all
Reply to author
Forward
0 new messages