அறிவியல் ஆயிரம்:வருகிறது வால்நட்சத்திரம்
சூரியனை நோக்கி வரும் 'சி/2026 ஏ1 (மேப்ஸ்)' என்ற வால்நட்சத்திரம், 2026 ஏப்ரல் 4, 5ல் வானில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய மறைவுக்குப்பின் 30 - 45 நிமிடங்களுக்குப்பின் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இதை பார்க்கலாம்.
மார்ச் மாத நடுவில், இந்த வால் நட்சத்திரத்தை 'டெலஸ்கோப்' உதவியுடன் பார்க்கலாம். வால்நட்சத்திரம் (காமெட்) என்பது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், உறைந்த வாயு, பனிக்கட்டியால் கலந்த கலவை. இது சூரியனுக்கு அருகில் வரும்போது தான், சூரிய ஒளி இதனை பிரகாசமான வால் போல மாற்றுகிறது.
தகவல் சுரங்கம்:நீளமான சுரங்கப்பாதை
பிரிட்டனின் போக்ஸ்டோன் நகரில் இருந்து பிரான்சின் கோகியூலஸ் வரை சுரங்க ரயில் பாதை 1987ல் அமைக்கப்பட்டது. இதன் நீளம் 5.46 கி.மீ. இது அட்லாண்டிக் கடலில் உள்ள ஆங்கில கால்வாயின் கீழ் 246 அடி ஆழத்தில் கட்டப்பட்டது.
இந்த சுரங்க ரயில் பாதையில் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. இது உலகில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட நீளமான சுரங்க ரயில் பாதை என அழைக்கப்படுகிறது. பொதுவாக சுரங்க ரயில்பாதையில் மூன்றாவது நீளமான பாலமாக உள்ளது.