அறிவியல் ஆயிரம் : வறட்சியை தாங்கும் மரங்கள்

3 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jul 5, 2026, 7:54:23 PM (8 days ago) Jul 5
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : வறட்சியை தாங்கும் மரங்கள்
 
  ாவரங்கள் செழிப்புக்கு சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு உடன் தண்ணீர் அவசியம். வறட்சியில் உயரமான மரங்களிடம், தண்ணீரை உச்சிக்கு கொண்டு செல்வது கடினமாக இருக்கும். இது குறித்து மலேசிய காடுகளில் 'டிப்டெரோகார்ப்' வகை மரங்களில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 'இலைகள் மற்றும் தண்ணீரை கொண்டு செல்லும் குழாய்களில் (சைலம்) சில மாற்றங்களை செய்வதன் வழியாக, இப்பிரச்னையில் இருந்து அவை தப்புகின்றன' என கண்டறிந்துள்ளனர். ஆனால் அனைத்து வகை மரங்களுக்கும் இது பொருந்துமா என்பது உறுதியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம் : உலக ஊரக வளர்ச்சி தினம்
 
 
கிராமப்புற மக்களுக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 6ல் உலக ஊரக வளர்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 80 சதவீத ஏழை மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் தினசரி சம்பளம் ரூ. 183க்கும் குறைவு. 100 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இதில் பாதி பேர் குழந்தைகள். கிராமப்புற மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுகாதார வசதி கிடைப்பதில்லை. 2024ல் நகர்பகுதிகளில் 83 சதவீதம் பேர் இணைய வசதி பயன்படுத்துகின்றனர். இது ஊரக பகுதியில் 50சதவீதத்திற்கும் குறைவு.

Reply all
Reply to author
Forward
0 new messages