அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Dec 14, 2025, 8:13:55 PM12/14/25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்

 உணவு தயாரிப்பு, பார்சல் (பேக்கேஜிங்) ஆகியவற்றில்அதிகரிக்கும் ரசாயன பயன்பாட்டால் புற்றுநோய், நரம்பியல் வளர்ச்சி கோளாறு, கருவுறுதலில் குறைபாடுஉள்ளிட்ட உடல்நல பாதிப்பும், வேளாண் உற்பத்தி குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.
 உணவுப்பொருட்கள் பார்சலுக்கான பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் 'பீஸ்பீனால், தாலேட்' ரசாயனங்களால் ஹார்மோனில் பாதிப்பு உருவாகிறது. இதன் காரணமாக 2025 - 2100ல் 20 கோடி - 70 கோடி குழந்தைகள் பிறப்பு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்:பெரிய இயற்கை குகை

 உலகின் பெரிய இயற்கை குகை, வியட்நாமில் 'போங் நா-கே பாங்' தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இதன் பெயர் 'சன் டூங்' குகை. நீளம் 9 கி.மீ. அகலம் 650 அடி. உயரம் 490 அடி. 'சன் டூங்' என்பதற்கு 'மலையாறு குகை' என பொருள்.
 மலையில் ஓடும் ஆறுஇக்குகை வழியாக செல்கிறது. நுாற்றுக்கணக்கான ஆண்டுக்கு முன் நீர் அரிப்பினால் இக்குகை உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 1991ல் அந்நாட்டின்பஹம் டை ஹாங் என்பவர் கண்டுபிடித்தார். 2009ல் 'பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி கூட்டமைப்பினர்' ஆய்வுக்குப்பின் பிரபலமடைந்தது.
Reply all
Reply to author
Forward
0 new messages