அறிவியல் ஆயிரம்

9 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 7, 2025, 9:08:27 PMApr 7
to brailleacl, valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்
PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM



வருமானத்தை குறைக்கும் வெப்பநிலை

உலகில் அதிகரிக்கும் வெப்பமயமாதலால் வறட்சி, பனிக்கட்டி உருகுதல் உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவெடுத்துள்ளன. இந்நிலையில் வெப்பமயமாதல் காரணமாக மக்களின் பொருளாதாரம் குறைகிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவித்துள்ளது.

உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்,சராசரி மக்களின் பொருளாதாரத்தை 40 சதவீதம் குறைக்கிறது. இது ஏற்கனவே மதிப்பிட்டதை விட நான்கு மடங்கு அதிகம். உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் குறைந்தால் உலகின் ஜி.டி.பி.,யில் 16 சதவீதம் குறைகிறது என தெரிவித்துள்ளனர்.

Dhivisha dhivi

unread,
Apr 14, 2025, 9:30:57 PMApr 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM
நிலவில் சுத்திகரிப்பு

உலகில் 55 ஆண்டுகளுக்கு முன் நிலவில் காலடி வைத்து சாதித்தனர் அமெரிக்க விண்வெளி வீரர்கள். நாசாவின் 'அப்பல்லோ' விண்கலத்தில் சென்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் 1969 ஜூலை 20ல் நிலவில் காலடி வைத்தனர். மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த விஞ்ஞானிகள் குழு, நிலவில் விட்டுச்சென்ற 96 பை, மனித கழிவுகளை சுத்திகரித்து தண்ணீர், எரிசக்தி, உரம் உள்ளிட்டவையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த முன்வருபவர்களுக்கு ரூ. 25.82 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM
உலக ஓவிய தினம்

ஓவியம் என்பது அழகியல் சார்ந்த கலை. இது நம் சிந்தனை திறனை வளர்க்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக புகழ்பெற்ற ஓவியரான இத்தாலியின் லியோனார்டோ டா வின்சியின் பிறந்த தினமான ஏப். 15, யுனெஸ்கோ சார்பில் உலக ஓவிய தினமாக கொண்டாடப்படுகிறது. ஓவியர்களின் திறமையை அங்கீகரிப்பது, படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வருவதே இதன் நோக்கம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் இருந்து ஓவியத்திறனை வளர்க்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.


 
 

Dhivisha dhivi

unread,
Apr 21, 2025, 9:21:13 PMApr 21
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

வானில் தோன்றும் சிரித்த முகம்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் வெவ்வேறு வேகத்தில், சுற்றுவட்டப்பாதையில் சூரியனை சுற்றுகின்றன. சில சமயங்களில் சில கோள்கள் ஒரே நேர் கோட்டில் வரும் வானியல் நிகழ்வு நடைபெறுகின்றன. இவ்வரிசையில் ஏப்.25ல் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 5:30 மணிக்கு வெள்ளி, சனி, நிலவு ஆகிய மூன்றும் முக்கோண அமைப்பில் 'சிரித்த முக' வடிவில் தோன்றும் வானியல் நிகழ்வு நடக்க உள்ளது. இதில் மேலே வெள்ளி மிக பிரகாசமாகவும், கீழே சனியும், அதற்கு கீழே நிலவும் தோன்றும். இது பார்ப்பதற்கு சிரித்த முகம் போல தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

உலக பூமி தினம்

மனிதர்கள் வாழும் ஒரே கோள் பூமி. இதை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.22ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நமது பலம், நமது பிரபஞ்சம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இதன்படி உலகில் 2040க்குள் அனைத்து வித பிளாஸ்டிக் உற்பத்தியை 60 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.பிளாஸ்டிக் நுண்துகள்கள் நிலம், நீர், ஆகாயம்என உலகம் முழுவதும் பரவி விட்டது. இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். 1970 ஏப்.22ல் பூமி தினம் தொடங்கப்பட்டது.


 
  

Dhivisha dhivi

unread,
Apr 28, 2025, 8:55:53 PMApr 28
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 பனி விழும் செவ்வாய்

செவ்வாய் கோளில் இன்றும் பனி விழுகிறது. ஆனால் இதை எந்தவொரு விண்கலம் அல்லது ரோவரும் படம் பிடித்ததில்லை. அதே போல நுாறு கோடி ஆண்டுகளுக்கு முன் மழைப் பொழிவும் இருந்தது என அமெரிக்காவின் கொலராடோ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் ஒரு குளிர்ச்சியான, வறண்ட கிரகமாகக் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அது வெப்பம், ஈரப்பதமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பழமையான ஆற்று டெல்டா இருந்ததை ஏற்கனவே அமெரிக்காவின் பெர்சிவிரன்ஸ் ரோவர்

கண்டு பிடித்திருந்தது.




 
தகவல் சுரங்கம்

 உலக நடன தினம்

சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் ஏப். 29ல் உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது. நடனம் ஒரு சிறந்த கலை. இது மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. நடனத்தில் பங்கேற்பது, அதை கற்றுக்கொடுப்பது, அவர்களது திறமையை அங்கீகரிப்பதே இத்தினத்தின் நோக்கம். பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து

விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் (ஏப். 29) உலக நடன தினமாக கொண்டாடப்படுகிறது.


 

 

Dhivisha dhivi

unread,
May 4, 2025, 9:42:35 PMMay 4
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 
அரிதான தாவரம்

பூமியில் பல்வேறு வகையான தாவரங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் 'என்சிபலரேட்டஸ் வூடி' என்பது உலகின் அரிதான தாவரங்களில் ஒன்று என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். உலகில் மிக அரிதான தாவரமான இது, தென் ஆப்ரிக்காவில் உள்ளது. இது பார்ப்பதற்கு தென்னை மரம் போல இருக்கிறது. இதன் உயரம் 20 அடி. விட்டம் 30 - 50 செ.மீ. கீழிருந்து உயரம் வரை 50 - 100 இலைகள் இருக்கும். அடர் பச்சை நிறமான இதன் ஒரு இலையின் நீளம் 5 - 8 அடி. இத்தாவரத்தில் இதுவரை ஆண் இனம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்


 

 இரட்டை சகோதரி குழு

பார்லிமென்ட் நடைமுறையில் உள்ள பல கமிட்டிகளில், மதிப்பீட்டு குழு, பொதுக்கணக்கு குழு என இரண்டும் 'இரட்டை சகோதரி குழு' என அழைக்கப்படுகிறது. இரு குழுவின் பணியும் நிதி தொடர்பாக இருப்பதால் இப்பெயர் வந்தது. மதிப்பீட்டுக்குழு 1950ல் உருவாக்கப்பட்டது. இதில் 30 லோக்சபா எம்.பி.,க்கள் உறுப்பினராக உள்ளனர். மத்திய பட்ஜெட்டின் மதிப்பீடுகளை ஆய்வு செய்வது இதன் பணி. பொதுக்கணக்கு குழு 22 எம்.பி.,க்களுடன் (லோக்சபா 15, ராஜ்யசபா 7) செயல்படுகிறது. மத்திய அரசின் வருவாயை தணிக்கை செய்தல், செலவுகளை ஆய்வு செய்வது இதன் பணி.


Dhivisha dhivi

unread,
May 6, 2025, 1:05:25 AMMay 6
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்

எந்த தண்ணீர் சிறந்தது

தற்போது அக்னி வெயில் தொடங்கி விட்டதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் உடலில் நீர்சத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு உணவும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்பநிலையை அடைய வேண்டும். வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே குளிர்ந்த நீர், மென்பானம் அருந்துவது தவறு. அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது. மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம், நிறம் இருக்கும். சத்துக்கள் குறைவு. எனவே சாதாரண தண்ணீரே நல்லது.

தகவல் சுரங்கம்
/தd
தகவல் சுரங்கம்

உலக ஆஸ்துமா தினம்

ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே மாதத்தின் முதல் செவ்வாய் (மே 6) உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் இன்ஹேலர் சிகிச்சை வசதியை ஏற்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் ஆண்டுக்கு


 
 

26 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். 4.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணம் தடுக்க முடிந்தவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Dhivisha dhivi

unread,
May 6, 2025, 10:34:37 PMMay 6
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

உலகின் பெரிய வெப்ப பாலைவனம் சஹாரா. இதன் பரப்பளவு 94 லட்சம் சதுர கி.மீ. இந்த பாலைவனத்தில் இருந்து ஆண்டுக்கு நுாறு கோடி டன் துாசி வளிமண்டலத்தை அடைகிறது. இந்நிலையில் இதன் துாசியால் ஐரோப்பா பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இதன்படி பலத்த காற்றால் பாலைவனத்தில் இருந்து கிளம்பும் கனிம துாசி துகள், ஐரோப்பிய பகுதியில் சூரிய ஒளியை சிதறடித்து உறிஞ்சி, அதன் கதிர்வீச்சை குறைக்கிறது. இதனால் சூரிய ஒளி வெளிச்சம் குறைவதால், சோலார் பேனல் செயல்திறன் பாதித்து, மின்சார உற்பத்தி குறையும் என எச்சரித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்


 
தடகள விளையாட்டு தினம்

விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். இது ஓட்டம், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. பள்ளி, கல்லுாரிகளில் தடகள விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக மே 7ல் உலக தடகள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தை உருவாக்கியது. இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

Dhivisha dhivi

unread,
May 7, 2025, 9:45:31 PMMay 7
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


ரயில் பாதையில் சோலார்

ரயில் தண்டவாளம் இடையே சோலார் பேனல்கள் நிறுவி, ரயிலுக்கான மின்சாரம் வழங்கும் தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்தின் 'சன்-வேய்ஸ்' நிறுவனம் உருவாக்கிஉள்ளது. சோதனை முறையில் 100 மீட்டர் துாரம், 48 சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயில் பாதுகாப்பு, தண்டவாள பராமரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என 2023ல் இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. சோலார் பேனல் வழக்கமாக நிரந்தரமாக அமைக்கப்படும். ஆனால் இம்முறையில் பாரமரிப்பு உட்பட தேவைப்படும் போது அகற்றி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்


 
செஞ்சிலுவை சங்க தினம்




* உலகில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களின் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8, உலக செஞ்சிலுவை சங்க தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த அமைப்புக்கு 1917, 1944, 1963 என 3 முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) பலியானோருக்கு நினைவஞ்சலி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் தினம் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.


Dhivisha dhivi

unread,
May 8, 2025, 9:41:53 PMMay 8
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 

இலை சுடுமா...

சுட்டெரிக்கும் வெயிலில் காகிதத்தையோ,உலோகத்தையோ சிறிதுநேரம் வைத்தால் விரைவில்சூடாகி விடுகிறது. ஆனால் எவ்வளவு வெயில் அடித்தாலும், மரத்தின் இலைகள் மட்டும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இலைகளிலுள்ள இலைத் துளைகள் தான். இலைத்துளைகள் மூலமாக எப்போதும் ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இலை பசுமையாக காணப்படுகிறது. மேலும் நீர் ஆவியாகி செல்லும்போது, இலைகளில் உள்ள ஓரளவு வெப்பத்தையும் எடுத்துச் செல்வதால் இலைகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.

தகவல் சுரங்கம்


 
ரயில்களின் மியூசியம்

ரயில்பாதை நீளத்தில் (1.35 லட்சம் கி.மீ., துாரம்) உலகின் நான்காவது பெரியதாக இந்திய ரயில்வே உள்ளது. துவக்கத்தில் நிலக்கரியில் இயங்கிய இந்திய ரயில்கள், இன்று மின்சாரத்தில் இயங்குகின்றன. 'வந்தே பாரத்', மெட்ரோ உள்ளிட்ட நவீன ரயில்கள் வந்துவிட்டன. இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை அறிந்து கொள்ளும்விதமாக டில்லியில் 'தேசிய ரயில் மியூசியம்', 1977 பிப்.,1ல் திறக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் பயன்படுத்திய ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டி, சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பரப்பளவு 11 ஏக்கர்.

Dhivisha dhivi

unread,
May 9, 2025, 8:36:17 PMMay 9
to brailleacl
அறிவியல் ஆயிரம்


 
வண்ணங்களில் தீப்பொறி

மரக்கட்டையால் உருவாக்கப்படும் தீ, சிவப்பு நிறத்தில்எரிந்தாலும், ஆங்காங்கே ஆரஞ்சு நிற தீச்சுடரும் தெரியும். மரத்திலுள்ள சோடியம் எரியும்போது எழும் நிறமே இது. ஒவ்வொரு வேதிப்பொருளும் வெப்பநிலைக்கு ஏற்ப பல நிறங்களில் ஒளியை உமிழும். அதிக வெப்பநிலையில் சோடியம், ஆரஞ்சு நிற ஒளியை உமிழும். தீபாவளிப் பட்டாசில் வண்ணத் தீப்பொறி வருவதும் இதே போலதான். ஆனால் கேஸ் அடுப்பு 1900 டிகிரி வெப்பநிலையில் எரியும்போது நீல, ஊதா நிற தீப்பிழம்பு தான் ஏற்படும். இதற்கு இதில் உள்ள ஹைட்ரோகார்பன் மூலக்கூறு தான் காரணம்.

தகவல் சுரங்கம்


பறவைகள், ஆர்கன் மரங்கள் தினம்

வட ஆப்ரிக்கா முழுதும் இருந்த ஆர்கன் மரங்கள் இன்று மொரோக்கோவில் மட்டும் உள்ளது. இது 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கும். இதிலிருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது உணவு, மருந்துகள், அழகு சாதனப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. இம்மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 10ல் உலக ஆர்கன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* இடம் பெயரும் பறவைகளை பாதுகாப்பது, அவற்றுக்கான வசதிகளை உருவாக்கும் விதமாக மே 10ல் இடம்பெயரும் பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
May 10, 2025, 8:03:34 PMMay 10
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 
நாடுகளும் துாங்கும் நேரமும்

தினமும் போதிய நேரம் துாங்குவது அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 7 - 8 மணி நேரம் துாங்குவது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உலகில் 20 நாடுகளில் 50 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நாட்டின் சராசரி துாங்கும் நேர அளவில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. இங்கு சராசரி துாக்கம் 7 மணி, 52 நிமிடமாக உள்ளது. இப்பட்டியலில் நெதர்லாந்து (7 மணி, 45 நிமிடம்), பெல்ஜியம் (7 மணி, 41 நிமிடம்), நியூசிலாந்து (7 மணி, 40 நிமிடம்), பிரிட்டன் (7 மணி, 33 நிமிடம்) உள்ளது. இதில் பத்தாவது இடத்தில் இந்தியா (7 மணி, 14 நிமிடம்) உள்ளது.

தகவல் சுரங்கம்


அன்னையர், தொழில்நுட்ப தினம்

அன்னையர்கள் இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழலிலும் அன்னையை கைவிடக்கூடாது. வயதான காலத்திலும் அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 11) சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

* இந்தியா 1998 மே 11, 13ல் ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் ஆறாவதாக இணைந்தது. இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
May 15, 2025, 11:19:56 AMMay 15
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 
உலகின் பெரிய டெலஸ்கோப்

தென் அமெரிக்க நாடான சிலியின் அட்டகாமா பாலைவன மலைப்பகுதியில் ஐரோப்பிய வானியல் அமைப்பு சார்பில் டெலஸ்கோப் அமைக்கப்பட்டு வருகிறது. சராசரி கடல் நீர் மட்டத்தில் இருந்து 9993 அடி உயரத்தில் அமைகிறது. 2011ல் திட்டமிடப்பட்டு 2012ல் பணி தொடங்கியது. 2023ல் இதன் பாதி பணி நிறைவடைந்தது. 17 ஆண்டுகளுக்குப்பின் 2029ல் முழு பணியும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 260 அடி. விட்டம் 305 அடி. டெலஸ்கோப் மொத்த எடை 6100 டன். டெலஸ்கோப்பின் முதன்மை கண்ணாடியின் அகலம் 129 அடி. இதில் 798 அறுங்கோண பகுதிகள் உள்ளன.




தகவல் சுரங்கம்


ங்கிகள்

இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்க இருப்பை அதிகரித்து உள்ளன. 2009ல் இருந்து 2024 என 15 ஆண்டுகளில் உலகின் மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பு, 26 ஆயிரம் டன்னில்இருந்து 32 ஆயிரம் டன் ஆக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி சதவீதம் 4.1. தங்களது மொத்த அந்நிய செலாவணி இருப்பில், அதிக சதவீதம் தங்கத்தை வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா 75%, ஜெர்மனி 74.4%, பிரான்ஸ் 72.3%, இத்தாலி 70.8%, ரஷ்யா 32.1% முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 11.4 சதவீதத்துடன் (2009ல் 6.9%) 15வது இடத்தில் உள்ளது.

கம் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க வாய்ப்பு
vதங்கத்தை குவிக்கும் வங்கிகள்

இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்க இருப்பை அதிகரித்து உள்ளன. 2009ல் இருந்து 2024 என 15 ஆண்டுகளில் உலகின் மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பு, 26 ஆயிரம் டன்னில்இருந்து 32 ஆயிரம் டன் ஆக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி சதவீதம் 4.1. தங்களது மொத்த அந்நிய செலாவணி இருப்பில், அதிக சதவீதம் தங்கத்தை வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா 75%, ஜெர்மனி 74.4%, பிரான்ஸ் 72.3%, இத்தாலி 70.8%, ரஷ்யா 32.1% முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 11.4 சதவீதத்துடன் (2009ல் 6.9%) 15வது இடத்தில் உள்ளது

Dhivisha dhivi

unread,
May 15, 2025, 9:38:33 PMMay 15
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்



பிரபஞ்சம் அழியுமா

பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள்வாழ்கின்றன. இந்நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் ஏற்கனவே கணித்ததை விட அதற்கு முன்னதாகவே மறைவதற்கு வாய்ப்பு உள்ளன என நெதர்லாந்தின் ராட்பவுட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துஉள்ளனர். இதன்படி 'குயின்விஜின்டில்லியன்' ஆண்டுகளில் (1க்கு அடுத்து 78 பூஜ்ஜியம்) இது நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.முன்னதாக (1க்கு அடுத்து 1100 பூஜ்ஜியம்) ஆண்டுகளில் நிகழும் என கணிக்கப்பட்டிருந்தது.

 
தகவல் சுரங்கம்


ஒளி, டெங்கு தடுப்பு தினம்

 ஒளிரும் வெண்ணெய் உருண்டை பாறை
அமெரிக்க விஞ்ஞானி தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கினார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. லேசர் தொழில்நுட்பம் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, ஒரே வண்ணம் கொண்ட ஒளி. இது சாதாரண ஒளியைவிட பன்மடங்கு வலிமையானது.

* 'ஏடிஸ்' கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் மே 16ல் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


 

 

Dhivisha dhivi

unread,
May 16, 2025, 8:35:02 PMMay 16
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

 கார்பனில் இருந்து எரிபொருள்

சூரிய ஒளியை பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை துாய்மையான எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை தேசிய தைவான் பல்கலையுடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருள் என்பதால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் ஐ.நா.,வின் முயற்சிக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். சுத்தமான எரிபொருள் உற்பத்திக்கு இன்னும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை தங்களது ஆய்வில் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
 
தொலைத்தொடர்பு, ரத்த அழுத்த தினம்

* இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல், 1969 மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 100 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.





தகவல் 

Dhivisha dhivi

unread,
May 17, 2025, 8:10:30 PMMay 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

சனியில் மழை

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து வானில் இருந்து மழை பெய்து ஆறு, ஏரி உள்ளிட்டவை நிரம்புவது சனி கோளின் நிலவுகளின் ஒன்றான டைட்டனில் தான். இது சனியில் உள்ள மொத்த நிலவுகளில் (274) பெரியது. இந்நிலையில் டைட்டனில் மழைத்துளி என்பது பூமியைப் போல தண்ணீராக இருப்பதில்லை. அதற்குப்பதில் மீத்தேன், ஈத்தேனாக இருக்கிறது என நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் ஆய்வு தெரிவித்துள்ளது. அதே போல பூமியில் வாயுக்களாக இருக்கும் ஹைட்ரோகார்பன்கள், டைட்டனின் குளிர்ச்சியான சூழலில் குளிர்ந்த திரவங்களாகச் செயல்படுகின்றன.



தகவல் சுரங்கம்

Advertisement
மியூசியம், எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
* அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 18ல் உலக அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல் அமைதியை ஏற்படுத்துவது இதன் நோக்கம்.

* எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1998 முதல் மே 18ல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது.



Dhivisha dhivi

unread,
May 19, 2025, 11:27:14 PMMay 19
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

'ஜங் புட்' ஆபத்து

எண்ணெயில் பொறித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுபவை 'ஜங் புட்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்து நிமிட

ஜங் புட்' விளம்பரம், குழந்தைகள் அதிக கலோரிகளை உட்கொள்வதற்கு காரணமாகிறது என ஐரோப்பிய ஆய்வு தெரிவித்துள்ளது. 7 - 15 வயது குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் 'ஜங் புட்' விளம்பரத்தை பார்த்த பின், சராசரியாக 130 கலோரி உணவு கூடுதலாக எடுக்கின்றனர். அதே நேரம் உணவு அல்லாத விளம்பரத்தை பார்த்து விட்டு சாப்பிடும் போது 73 கலோரி என்ற அளவில்

உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்

 
உலக தேனீக்கள் தினம்

சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு தேனீக்கள். இவற்றிடம் இருந்து உழைப்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேனீக்கள் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளன. தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. தேனீ வளர்ப்பை ஊக்குவித்தால், அது தேன் சேகரிப்புக்கு மட்டுமின்றி, அயல் மகரந்தச் சேர்க்கையினால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும்.
விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்

u

 



 

Dhivisha dhivi

unread,
May 20, 2025, 8:51:42 PMMay 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


சூரிய குடும்பத்துக்கு வெளியே தண்ணீர்

சூரிய குடும்பத்துக்கு வெளியே 'எச்.டி., 181327' நட்சத்திரத்தின் துாசி மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் பெரிய அளவில் இருப்பதை அமெரிக்காவின்'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.இந்த நட்சத்திரம், பூமியில் இருந்து 156 ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் துாரம்) தொலைவில் உள்ளது. இதற்கு முன், நாசாவின் 'ஸ்பிட்ஜர் டெலஸ்கோப்' 2008லேயே இதில் உறைந்த தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்திருந்தது.தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் 2.30 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது.



தகவல் சுரங்கம்
 
தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்









உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையில்தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. உலகில் தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகி
rist
பொது

* முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
May 21, 2025, 9:32:26 PMMay 21
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


 



வேகமாக சுற்றும் விண்கல்

'2003 எம்.எச்.4.,' என்ற விண்கல் மே 24ல் பூமிக்கு அருகில் (பூமியில் இருந்து 66 லட்சம் கி.மீ., தொலைவில்) கடந்து செல்ல உள்ளது. இதன் விட்டம் 1100 அடி. இதன் நீளம் மூன்று கால்பந்து மைதானங்களுக்கு சமம். இது மணிக்கு 50,400 கி.மீ., வேகத்தில் (ஒரு நிமிடத்தில் மும்பை - டில்லி சென்று விடும்) சுற்றுகிறது. இது ஒருமுறை சூரியனை சுற்றுவதற்கு 410 நாட்கள் ஆகிறது. விட்டம் 500 அடி, அருகில் வரும் துாரம் 70 லட்சம் கி.மீ.,க்கு கீழ் வந்தால், பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என நாசா குறிப்பிடுகிறது. அவ்வகையில் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

தகவல் சுரங்கம்
பல்லுயிர் பாதுகாப்பு தினம்

ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்துள்ளோம். பல்லுயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. 'நிலையான வளர்ச்சி, இயற்கையுடன் நல்லிணக்கம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


 

Dhivisha dhivi

unread,
May 22, 2025, 9:30:12 PMMay 22
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


வருகிறது பறக்கும் கார்

உலகில் முதன்முறையாக அதிகளவிலான பறக்கும் கார் விற்பனை அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவை சேர்ந்த 'கெலைன் விசன்' நிறுவனம் 'ஏர் கார்' என்ற பெயரில் இதை தயாரித்து வருகிறது. இதில் நான்கு சக்கரம், இரண்டு இறக்கைகள் உள்ளன. இரண்டு பேர் அமரலாம். இரண்டு நிமிடத்தில் சாலையில் இருந்து, பறக்க தயாராகி விடும். இதன் விலை ரூ. 6.86 கோடி. இந்த கார் தரையில் மணிக்கு 200 கி.மீ., வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 250 கி.மீ., வேகத்திலும் செல்லும். 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். பெட்ரோலில் இயங்கும்.



தகவல் சுரங்கம்



உலக ஆமைகள் தினம்

கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன. இவற்றின் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பை முக்கிய காரணம். அழிந்து வரும் ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை உட்பட 300 வகைகள் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்தவை. 50 -200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.


  

Dhivisha dhivi

unread,
May 23, 2025, 8:56:18 PMMay 23
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

வெப்பநிலை கட்டுப்பாடு

பனிப்பாறை உருகுதலினால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வை தடுக்க வேண்டுமெனில், உலகில் சராசரி வெப்பநிலை உயர்வை 1 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என பிரிட்டனின் துர்காம் பல்கலை விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக சராசரி வெப்பநிலை உயர்வை தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையில் (1850 - 1900 சராசரி வெப்பநிலை) இருந்து, கூடுதலாக 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 2015ல் உலக நாடுகளின் பாரீஸ் உடன்படிக்கையில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது இந்த அளவு அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

சகோதரர்கள் தினம்

சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் உலக சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டாலும் பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சகோதரர்களுக்குள் சண்டைகள், மனக்கசப்பு இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். நண்பர்களை போல இருக்கும் சகோதரர்களும் உள்ளனர். சிலருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், உறவினர், நண்பர்களிடம் இருந்து சிலர் சகோதரர்கள் போல இருப்பார்கள்.

Dhivisha dhivi

unread,
May 24, 2025, 11:02:43 PMMay 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம்


இழந்த பற்களை மீட்க முடியுமா...

உணவு மெல்லுதல், பேசுவதற்கு பற்கள் அவசியம். நிரந்தர பற்களை இழந்து விட்டால், செயற்கையாக பல் கட்டலாம். இல்லையெனில் அப்படியே விடுவதை தவிர வழியில்லை. இந்நிலையில் இழந்த பற்களை மீண்டும் வளர வைப்பதற்கு, ஜப்பான் விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துள்ளனர். இதை விலங்குகளிடம் நடத்திய சோதனையில் எந்த பக்க விளைவும் இல்லை. தற்போது 30 - 64 வயதுக்குட்பட்ட 30 பேரிடம், மருந்து பாதுகாப்பானதா என 11 மாதமாக சோதனை நடக்கிறது. இம்முயற்சி வெற்றி பெற்றால் 2030ல் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


 

 தகவல் சுரங்கம்
 
கால்பந்து, தைராய்டு தினம்

* உலகளவில் பிரபலமான கால்பந்து விளையாட்டை சிறப்பிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 25ல் உலக கால்பந்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1924 மே 25ல் நடைபெற்றது. இதன் நுாற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக 2024ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

* தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. இது கழுத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும். உடலின் வளர்சிதை மாற்றங்களை தைராய்டு சுரப்பி கட்டுப்படுத்துகிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.







Dhivisha dhivi

unread,
May 25, 2025, 8:58:06 PMMay 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


உலகின் அதிவேக ஏவுகணை

உலகின் சக்தி வாய்ந்த, அதிவேக ஏவுகணை ரஷ்யாவிடம் உள்ளது. இதன் பெயர் 'அவங்கார்டு'. இது 'ஹைபர்சானிக் கிளைட் வெகிக்கிள்' வகையை சேர்ந்தது. 2019ல் அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதன் நீளம் 18 அடி. எடை 2000 கிலோ. இது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 5 நிமிடத்தில் சென்று விடும். இது மணிக்கு 34 ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும். இது அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும். இது எதிரிகளின் ஏவுகணை தடுப்பு அமைப்பில் இருந்து தப்பிக்கும் விதமாக, வானிலேயே இதன் திசையையும், உயரத்தையும் மாற்றி, இலக்குகளை துல்லியமாக தாக்கும்.



 
  தகவல் சுரங்கம்


 

இளம் முதல்வர் யார்

இந்தியாவில் 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசத்தில் மூன்று (டில்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர்) என மொத்தம் 31 முதல்வர்கள் உள்ளனர். இதில் இரண்டு பேர் (டில்லி, மேற்கு வங்கம்) மட்டுமே பெண்கள். தற்போதைய முதல்வர்களில் தொடர்ந்து அதிகநாட்கள் (14 ஆண்டுகள்) பதவி வகிப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இளம் முதல்வராக இருப்பவர் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு 45. அதிக வயதுடைய முதல்வர் கேரளாவின் பினராயி விஜயன் 79. தற்போதைய முதல்வர்களில் அதிக முறை பதவியேற்றவர் பீஹாரின் நிதிஷ் குமார் (ஒன்பது முறை).

Dhivisha dhivi

unread,
May 26, 2025, 9:29:55 PMMay 26
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
பிரமாண்ட வியாழன்

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் பெரியது வியாழன். இது மற்ற ஏழு கோள்களையும் ஒன்றாக சேர்த்தும், 2.5 மடங்கு பெரியது. இந்நிலையில் வியாழன், இதற்கு முன் இன்று இருப்பதை விட பெரிய அளவில் இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழனின் நிலவுகளில் அமல்தியா, திபெ ஆகிய

இரண்டு நிலவுகளை அமெரிக்காவின் மெக்சிகன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வியாழன் இன்றைய அளவை விட 2.5 மடங்கு பெரியதாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்
 
அசைவத்துக்கு தடை விதித்த நகரம்

காய்கறி, தானியங்கள் அடங்கிய சைவ உணவை பின்பற்றுவோர் அதிகமுள்ள நாடு இந்தியா. அதே போல அசைவம் சாப்பிடுவோரும் அதிகளவில் உள்ளனர். குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள பாலிதானா, அசைவ உணவுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என அழைக்கப்படுகிறது. இது ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. 2014ல் ஜெயின் சமூகத்தினர் 200 பேர், அசைவ உணவை தடை செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனைத்து வித இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

 
 

Dhivisha dhivi

unread,
May 28, 2025, 11:33:29 PMMay 28
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

குளிர்விக்கும் பென்குயின்

அண்டார்டிகா பனி பிரதேசத்தில் லட்சக்கணக்கான பென்குயின் பறவைகள் வாழ்கின்றன. இந்நிலையில் இப்பறவைகள் அண்டார்டிகா காலநிலையை

குளிர்விக்கும் பென்குயின்

அண்டார்டிகா பனி பிரதேசத்தில் லட்சக்கணக்கான பென்குயின் பறவைகள் வாழ்கின்றன. இந்நிலையில் இப்பறவைகள் அண்டார்டிகா காலநிலையை

குளுமையாக வைத்திருக்க பங்களிப்பு வழங்குகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பென்குயின் பறவைகளின் எச்சத்தில் இருந்து வெளியாகும் அம்மோனியா வாயு, கடல் நீரில் வளரும் நுண்ணுயிர்களான பைட்டோபிளாங்டனில் இருந்து வரும் கந்தக

சேர்மத்துடன் இணைந்து, பனி போன்ற நீர்துளிகளை உருவாக்குகிறது. இது சூரிய ஒளியுடன் பிரதிபலித்து தாழ்வான மேகங்களை உருவாக்குகிறது.

தகவல் சுரங்கம்
தகவல் சுரங்கம்

ஐ.நா., அமைதிப்படை தினம்


 


உலகில் போர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சூழல்களில் அமைதியை நிலை நாட்ட ஐ.நா., அமைதிப்படை 1945ல் உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உட்பட 120 நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மே 29ல் ஐ.நா., அமைதிப் படைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதிப்பணியின் எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 80 ஆண்டுகளில் 20 லட்சம் வீரர்கள் இப்படையில் பணியாற்றி உள்ளனர். இதில் 4400

வீரர்கள் பலியாகின

Dhivisha dhivi

unread,
May 29, 2025, 8:47:50 PMMay 29
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


புற்றுநோயை உருவாக்குகிறதா வெப்பம்

அதிகரிக்கும் வெப்பநிலை பூமியின் சுற்றுச்சூழலை மட்டும் பாதிப்பதில்லை. மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்காவை சேர்ந்த கத்தார், பஹ்ரின், சிரியா, எகிப்து, சவுதி, யு.ஏ.இ., ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளில் குறிப்பாக பெண்களிடம் மார்பக, வாய், கருப்பை, கழுத்து உள்ளிட்ட புற்றுநோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நாடுகளில் 1998 - 2009ல் புற்றுநோய் விவரத்தை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கும், ஒரு லட்சம் பெண்களில் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 173ல் இருந்து 280 ஆக அதிகரிக்கிறது என கண்டறிந்தனர்.

தகவல் சுரங்கம்
க்கிழங்கு தினம்

பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. 16ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவுக்கும், பின் உலகளவில் பரவியது. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்துகின்றனர். 2030ல் இதன் உற்பத்தி 75 கோடி டன் என்ற இலக்கை தொடும். இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மே 30ல் சர்வதேச உருளைக்கிழங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வரலாற்றை வடிவமைத்தல்; எதிர்காலத்துக்கு உணவளித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


 

Dhivisha dhivi

unread,
May 31, 2025, 8:27:53 PMMay 31
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்
மின்னல் வேக விமானம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு 55 நிமிடத்துக்குள் செல்லும் திறனுடைய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தை, அமெரிக்காவின் வீனஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான செலவு ரூ. 282 கோடி. தற்போதைய பயணிகள் விமானங்கள் இந்த துாரத்தை கடப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகும். இது 2030ல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் பயணிக்கலாம். இது 1.10 லட்சம் அடி உயரத்தில் (சாதாரண விமானம் 50 ஆயிரம் அடி) பறக்கும். இது ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் (மணிக்கு 4950 கி.மீ.,) செல்லும்.



 
தகவல் சுரங்கம்

 உலக பால் தினம்

* இந்தியாவில் பால், பால் பொருட்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் குஜராத்தின் வர்கீஸ் குரியன். பாலில் உள்ள 'வைட்டமின் ஏ', நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது. பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


 


* குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள். வயதான காலத்தில் அவர்களை புறக்கணித்து விடாமல் அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பெற்றோர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Jun 1, 2025, 9:00:17 PMJun 1
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

பூமியை வளமாக்கிய விண்கல்

பிரபஞ்சத்தில் 326 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மீது மோதிய விண்கல்லால் பல நன்மைகள் கிடைத்தது என அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் நிறுவன ஆய்வு தெரிவித்து உள்ளது. பொதுவாக விண்கல் பூமி மீது மோதினால் பாதிப்பு தான் ஏற்படும். ஆனால் இந்த விண்கல் பூமியில் மோதியதால் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் பூமிக்கு கிடைத்தது. இவை அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது. இது 18 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் டைனோசர் இனங்கள் அழிய காரணமாக இருந்த விண்கல்லை விட 50 - 200 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.



 
தகவல் சுரங்கம்

சிகரத்தில் சாதனை

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் (29,031 அடி). இதில் அதிகமுறை (31) ஏறி உலக சாதனை படைத்தவர் நேபாளத்தின் காமி ரீட்டா. 1970ல் பிறந்த இவர் ஷெர்பா இனத்தை சேர்ந்தவர். 55 வயதில் சமீபத்தில் 31வது முறையாக எவரெஸ்டில் ஏறி தன் சொந்த சாதனையை முறியடித்தார். 1994ல் தன் 24 வயதில் முதன்முறை எவரெஸ்டில் ஏறினார். 2018ல் உலகில் அதிகமுறை (22) எவரெஸ்டில் ஏறியவர் என்ற சாதனை படைத்தார். அப்போது இவர், 'ஓய்வுபெறுவதற்கு முன் 25 முறை ஏறுவதற்கு திட்டமிட்டுள்ளேன்' என்றார். ஆனால் 31 முறை என்ற சாதனையை படைத்துள்ளார்.



 

 

Dhivisha dhivi

unread,
Jun 2, 2025, 9:01:35 PMJun 2
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

உருகும் இமயமலை

உலகில் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த பூமியின் சாரசரி வெப்பநிலையை விட, 2 டிகிரி செல்சியஸ்அதிகரித்தால் 2100ம் ஆண்டுக்குள் இமயமலையின் ஹிந்துகுஷ் பகுதி பனிமலையில் 75 சதவீதம் உருகும் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாடுகளில் 200 கோடி பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். அதே நேரத்தில் உலக சராசரி வெப்பநிலையை 'பாரிஸ்' ஒப்பந்தப்படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் கட்டுப்படுத்தினால், ஹிந்துகுஷ் பனிமலையில் 40 - 45 சதவீதம் மட்டுமே உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
தகவல் சுரங்கம்

உலக சைக்கிள் தினம்

சைக்கிள் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 3ல் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் நடை, ஓட்டம், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் என ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. இதிலும் நடை, சைக்கிள் பயிற்சி இதய பாதிப்பு, பக்கவாதம், கேன்சர், நீரிழிவு போன்ற பாதிப்புகளை


 
 
தடுக்கிறது. சைக்கிளுக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால் செலவு இல்லை. முக்கியமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.

Dhivisha dhivi

unread,
Jun 3, 2025, 8:54:03 PMJun 3
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

அதிகரிக்கும் விண்வெளி குப்பை

உலகில் பல்வேறு நாடுகள், பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இந்நிலையில் 2024ன் கணக்கின் படி விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள் /விண்கலம் எண்ணிக்கை 2900, விண்வெளி குப்பைகளின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்து உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த 2024ல் 261 செயற்கைக்கோள் / விண்கலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இதில் 254 வெற்றி பெற்றது. இதையடுத்து விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்/விண்கலம் எண்ணிக்கை 29௦௦ஆக உயர்ந்தது.

தகவல் சுரங்கம்


குழந்தைகள் பாதுகாப்பு

அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது துவக்கத்தில் 1982ல்லெபனான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய மோசமான பாதிப்புகள் உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம்.

 

 

Dhivisha dhivi

unread,
Jun 4, 2025, 8:36:07 PMJun 4
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


ago-btn
ஆபத்தாகும் உடல் பருமன்

உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது உலகளவில் உடல்பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலை விஞ்ஞானிகள் எலிகளிடம் நடத்திய ஆய்வில் உணவுமுறையால் ஏற்படும் உடல்பருமன் என்பது, மனக்கவலை, மூளையின் சிக்னல்களில் மாற்றம், குடல் நுண்ணியிர்களில் ஏற்படும் மாற்றத்தால் மூளை செயல்பாடுகளில் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர நீரிழிவு, இதய பிரச்னைக்கும் வழிவகுக்கிறது.

தகவல் சுரங்கம்



உலக சுற்றுச்சூழல் தினம்

பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2040ல் இரு மடங்காக அதிகரிக்கும். இதில் பாதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுபவை. இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஏரி, ஆறு, கடலில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது. இதனால் பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


Dhivisha dhivi

unread,
Jun 5, 2025, 8:27:42 PMJun 5
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

சிறிய கோள் எது

சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன். இது சிறிய கோள் என அழைக்கப்படுகிறது. இது 87.97 நாட்களில் சூரியனை சுற்றி விடுகிறது. பூமியிலிருந்து சூரியனை பார்ப்பதை விட, இங்கிருந்து பார்க்கும் போது ௩ மடங்கு பெரியதாகவும், அதேபோல சூரிய ஒளி, பூமியில்இருப்பதை விட ஏழு மடங்கு அதிகமாகவும் இருக்கும். இதனால் இதன் வெப்பநிலை அதிகபட்சமாக 430 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதுதான் வெப்பமான கோள். ஆனால் புதனில் சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் இரவில் வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் ஆக மாறிவிடும்.



D
 தகவல் சுரங்கம்


 

பணக்கார கிராமம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர், இந்தியாவின் பணக்கார கிராமம் என அழைக்கப்படுகிறது. இதன் மக்கள்தொகை 25 ஆயிரம். இவர்கள் வங்கிகளில் சேமித்துள்ள வைப்புத்தொகை ரூ. 7000 கோடி. 17 வங்கிகளின் கிளைகள் இங்கு உள்ளன. இதற்கு காரணம் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர். இப்பணத்தின் மூலம் இங்கு சாலை, மருத்துவமனை, பள்ளி, கோயில், ஏரி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Dhivisha dhivi

unread,
Jun 6, 2025, 9:21:49 PMJun 6
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

விண்வெளி ஆய்வில் பொன்விழா

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (இ.எஸ்.ஏ.,) பொன்விழா கண்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 23 ஐரோப்பிய நாடுகள் இணைந்து 1962ல் ராக்கெட் தயாரிக்க ஐரோப்பிய வளர்ச்சி கழகம், விண்கலம் தயாரிக்க ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தொடங்கின. பின் இரண்டையும் இணைத்து 1975 மே 30ல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தொடங்கப்பட்டது. தலைமையகம் பிரான்சின் பாரிஸ். 2547 பேர் பணியாற்றுகின்றனர். பல்வேறு செயற்கைக்கோள், விண்கலங்களை விண்ணில் செலுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலும் இதன் பங்களிப்பு உள்ளது.

தகவல் சுரங்கம்



உணவு பாதுகாப்பு தினம்

பாதுகாப்பற்ற உணவுகளால் உலகில் ஆண்டுக்கு 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனப் பொருட்கள் கொண்ட பாதுகாப்பற்ற உணவு பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 7ல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பாதுகாப்பான உணவு : செயல்பாட்டில் அறிவியல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.



 
 

 

Dhivisha dhivi

unread,
Jun 7, 2025, 8:51:13 PMJun 7
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்



உணவு டெலிவரியில் ட்ரோன்

அயர்லாந்தின் டெலிவரூ நிறுவனம் ட்ரோன் வழியாக உணவு டெலிவரியை தொடங்கியுள்ளது. இதனால் கடினமான இடங்களிலும் உணவு டெலிவரி சாத்தியமாகும் என தெரிவித்துள்ளது. மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லும். ஆர்டர் செய்த மூன்று நிமிடத்தில் உணவை, வாடிக்கையாளர் வீட்டின் மேல்தளம், தோட்டம் உள்ளிட்ட சமதள இடங்களில் வைத்து விட்டு, திரும்பி சென்று விடும். முதல்கட்டமாக மூன்று கி.மீ., சுற்றளவில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஆறு மாதத்தில் மளிகை பொருட்கள் டெலிவரியும் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்



பூமியில் 70 சதவீதம் கடல் தான் உள்ளது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

* மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக்கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Jun 9, 2025, 8:59:12 PMJun 9
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

இரண்டாவது இந்தியர்

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. பஞ்சாபை சேர்ந்த இவர் இந்திய விமானப்படை பைலட் ஆக பணியாற்றினார். தன் 35 வயதில் 1984 ஏப். 3ல் ரஷ்யா சார்பாக, அந்நாட்டின் 'சோயுஷ் டி-11' விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். 7 நாள், 21 மணி, 40 நிமிடம் விண்வெளியில் தங்கியிருந்தார். 41 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது வீரராக சுபான்ஷூ சுக்லா 39, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல உள்ளார். உ.பி., யை சேர்ந்த இவர் இந்திய விமானப்படையில் 'பிளையிங் ஆபிசர்' பதவி வகிக்கிறார்.

தகவல் சுரங்கம்

அமைதிக்கு தீர்வு எது

உலகில் பல்வேறு நாகரிகங்கள், வாழ்க்கை முறை உள்ளன. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி. இவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 10ல் உலக நாகரிகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தினம் முதன்முறையாக கடைபிடிக்கப்படுகிறது. 2024ல் ரஷ்யா முன்மொழிந்த இந்த தீர்மானத்தை 80 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா., ஏற்றுக்கொண்டது. பல்வேறு விஷயங்களில் நாடுகளிடையே பிரச்னைகள் உருவாகலாம். இதற்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம். இது அமைதி, நல்வாழ்வு, வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.

 
 
 

Dhivisha dhivi

unread,
Jun 10, 2025, 8:56:57 PMJun 10
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


 

பனிப்பிரதேசத்தில் டைனோசர்

பூமியில் வாழ்ந்த டைனோசர் இனங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததில் முற்றிலும் அழிந்தன. முன்னதாக இவை அழிவதற்கு முன் குளிர், பனிப்பிரதேசம் உட்பட உலகின் அனைத்து காலநிலை பகுதிகளிலும் வாழ்ந்தன. இதன்படி லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆஸி., யின் விக்டோரியா பகுதி, தற்போதைய அண்டார்டிகாவை போல பனிப்பாறையாக இருந்தது. ஏனெனில் இரண்டும் ஒரே துருவப்பகுதியில் இணைந்திருந்தன. இந்நிலையில் டைனோசர்கள், விக்டோரியாவில் நிலவிய பனிப்பாறை சூழலையும் சமாளித்து வாழ்ந்தன என ஆய்வு தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்


 
ago-btn
சர்வதேச விளையாட்டு தினம்

விளையாட்டு மகிழ்ச்சியை தருகிறது என உலகின் 71 சதவீத குழந்தைகள் தெரிவிக்கின்றனர். விளையாட்டு மூலமே குழந்தைகள் சிறப்பாக கற்றுக்கொள்கின்றனர். கற்பனை, சிந்தனை திறன், தலைமைப்பண்பு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர, விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பாக உள்ளது. உலகில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 11ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'விளையாட்டை தேர்ந்தெடு; ஒவ்வொரு நாளும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Dhivisha dhivi

unread,
Jun 11, 2025, 8:44:40 PMJun 11
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


செவ்வாயில் உயரமான எரிமலை

செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


D
 தகவல் சுரங்கம்


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

உலகில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். உலகில் 10ல் ஒரு குழந்தை, தொழிலாளியாக உள்ளது. இதில் 7.2 கோடியுடன் ஆப்ரிக்கா முதலிடத்திலும், 6.2 கோடியுடன் ஆசியா பசிபிக் இரண்டாவது இடத்திலும் உள்ளது. குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'முன்னேற்றம் தெளிவாக உள்ளது, ஆனால் இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது: முயற்சிகளை விரைவுபடுத்துவோம்.' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

 

Dhivisha dhivi

unread,
Jun 12, 2025, 8:37:57 PMJun 12
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


 

நிலவை நோக்கி விண்கல்...

'2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல் 2032 டிச.22ல் பூமி மீது மோதும் வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் 'நாசா', 2024 இறுதியில் கண்டுபிடித்தது. துவக்கத்தில் இதற்கான வாய்ப்பு 1% இருந்தது. பின் 2.1%, 3.1% என அதிகரித்தது. ஆனால் அடுத்தடுத்த ஆய்வுகளில் 0.004% என குறைந்துவிட்டது. பின் இது நிலவு பக்கம் திரும்பியது. 2032 டிச. 22ல் இந்த விண்கல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு துவக்கத்தில் 1.7% (மார்ச்) என இருந்தது. பின் ஏப்ரலில் 3.8% உயர்ந்தது. தற்போது 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் அகலம் 200 அடி.

தகவல் சுரங்கம்



சர்வதேச அல்பினிசம் தினம்

'அல்பினிசம்' (வெண்தோல் குறைபாடு) என்பது ஒரு நபரின் முடி, தோல், கண்களில் மெலனின் நிறமி குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும் போது ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. இதனால் இவர்களால் சூரிய ஒளி, பிரகாசமான ஒளியை எதிர்கொள்ள முடிவதில்லை. தோற்றத்தால் சமூகத்தில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 13ல் சர்வதேச அல்பினிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 20 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இப்பாதிப்பு உள்ளது.

 

 

Dhivisha dhivi

unread,
Jun 13, 2025, 9:19:39 PMJun 13
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


 

முடியை விட சிறிய வயலின்

உலகின் சிறிய வயலின் இசைக்கருவியை இங்கிலாந்தின் லப்பரோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது மனித முடியின் தடிமனை விட சிறியது. இதன் நீளம் 35 மைக்ரான். அகலம் 13 மைக்ரான். ஒரு மைக்ரான் அல்லது மைக்ரோமீட்டர் என்பது 10 லட்சம் மீட்டரில் ஒன்று. மனித முடியின் அகலம் 17 - 180 மைக்ரான் இருக்கும். ஆனால் இந்த வயலினில் வாசிக்க முடியாது. தொழில்நுட்பம் எந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்
உலக ரத்த தான தினம்

ரத்த தானம் அளிப்பதால் விபத்து, ஆப்பரேஷன் உள்ளிட்ட சூழலில் பாதிக்கப்படுபவர் காப்பாற்றப்படுகின்றனர். ரத்த தான அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ரத்தம் வழங்கு, நம்பிக்கை கொடு: நாம் இணைந்து உயிர்களை காப்போம்' என்பது இந்தாண்டு மையகருத்து. 18 --65 வயதுடையவர்ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 45 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கலாம். 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.




 

Dhivisha dhivi

unread,
Jun 15, 2025, 1:12:02 AMJun 15
to valluvanpaarvai, brailleacl, inaiathendral

அறிவியல் ஆயிரம்

உப்பு கூடினால் தப்பா...

இந்தியர்கள் தினமும் 9 - 11 கிராம் அளவுக்கு உப்பு எடுத்துக்கொள்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட இரு மடங்கு அதிகம் என ஆய்வு தெரிவித்துள்ளது. உப்பு அதிகம் பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 1.75 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 22 கோடி பேர் இதய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கும் வழி வகுத்துள்ளது. உப்பு பயன்பாட்டை குறைப்பது, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தகவல் சுரங்கம் : தந்தையர், காற்று தினம்

* தன்னலம் பார்க்காமல் குடும்பத்துக்காக உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 15) உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

* அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்று அவசியம். காற்றுமாசுவை தடுக்க வலியுறுத்தி ஜூன் 15ல் உலக காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* முதியோரை அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Jun 15, 2025, 8:48:03 PMJun 15
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்



துருப்பிடிக்காத இரும்பின் வரலாறு

இந்தியாவில் துருப்பிடிக்காத இரும்பின் தேவை ஆண்டுக்கு 7 - 8 சதவீதம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளின் கதவு, ஜன்னல், சமையல் பாத்திரம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு துருப்பிடிக்காத இரும்பு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பயன்படுத்தப் படுகிறது. இது தனி உலோகம் இல்லை. இரும்பு, குரோமியத்தை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. பிரிட்டனின் ஹாரி பிரியர்லி 1913ல் கண்டுபிடித்தார். இவர் பீரங்கிக் குழாய் துருப்பிடிப்பதை தடுக்க பல உலோகங்களை உருக்கிக் கலந்து தொடர்ந்து ஆய்வு செய்ததில் இதை உருவாக்கினார்.

தகவல் சுரங்கம்


 
துணை சபாநாயகர்

லோக்சபாவில் சபாநாயகருக்கு அடுத்து துணை சபாநாயகர் பதவி 1952ல் இருந்து பின்பற்றப்படுகிறது. பொதுவாக இப்பதவி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவருக்கு அளிப்பது வழக்கம். முதல் துணை சபாநாயகராக ஆந்திராவை சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் 1952 - 1956 வரை பதவி வகித்தார். தமிழகத்தில் இருந்து முதன்முதலாக 1980 - 1984 வரை லட்சுமணன் (தி.மு.க.,) இப்பதவியை வகித்தார். பின் 1984 - 1989ல் தம்பிதுரை (அ.தி.மு.க.,) இருந்தார். கடைசியாக 2014 - 2019லும் இப்பதவி வகித்தார். 2019 முதல் இப்பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.

Dhivisha dhivi

unread,
Jun 16, 2025, 9:30:21 PMJun 16
to brailleacl, inaiathendral, valluvanpaarvai
அறிவியல் ஆயிரம்

விமானம் பறப்பது எப்படி

ஒரு வாயு / திரவத்தின் திசைவேகம் அதிகரிக்கும்போது அதன் அழுத்தம் குறையும். இதுதான் பெர்னவுலி தத்துவம்.இதனடிப்படையில் தான் விமானம் பறக்கிறது. அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1903 டிச.17ல் விமானத்தை பறக்கசெய்து சாதித்தனர். விமான இறக்கையின் மேல்பகுதி வளைந்தும், கீழே தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக மேல்

செல்லும் காற்று வேகமாகச் செல்லும். எனவே அழுத்தம்குறையும். கீழ் செல்லும் காற்று வேகம் குறையும். இதனால் அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்த வேறுபாடு தான் விமானத்தை மேலே துாக்குகிறது.


தகவல் சுரங்கம்
வறட்சி ஒழிப்பு தினம்

ஒவ்வொரு விநாடிக்கும் நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு, வளமான நிலப்பகுதி பாதிப்படைகிறது. உலகில் ஏற்கனவே 40 சதவீத நிலங்கள் பசுமையை இழந்து விட்டன. இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலத்தை மீட்டெடுங்கள்; வாய்ப்புகளை உருவாக்குங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 230 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ளனர். வறட்சி காரணமாக 1900 முதல் 2019 வரை 270 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

 
v

Dhivisha dhivi

unread,
Jun 17, 2025, 9:06:54 PMJun 17
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்
வயதான பெண் விஞ்ஞானி

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவுக்கு தலைமை வகிப்பவர் அமெரிக்க பெண் விஞ்ஞானி பெஜ்ஜி விட்சன் 65. நாசாவின் தலைமை வானியல் விஞ்ஞானியாக இருந்து 2018ல் ஓய்வு பெற்றார். தற்போது 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' நிறுவனத்தின் ஆலோசகராக இருக்கிறார். 2002ல் தன் சர்வதேச விண்வெளி மைய பணியை தொடங்கினார். இதுவரை மொத்தம் 675 நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றியுள்ளார். இதில் 10 முறை மொத்தம் 60 மணி நேரம் 21 நிமிடம், விண்வெளியில் நடந்துள்ளார். விண்வெளிக்கு செல்லும் வயதான பெண் இவரே.

தகவல் சுரங்கம்
உலக 'பிக்னிக்' தினம்
பரபரப்பான வாழ்க்கையிலிருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு 'பிக்னிக்' செல்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் உலக பிக்னிக்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல்தான் நினைவுக்கு வரும்.


 


* பேச்சு, எழுத்து, உடல்மொழி என எவ்வகையிலும் வெறுப்பு பேச்சு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Dhivisha dhivi

unread,
Jun 18, 2025, 9:06:37 PMJun 18
to inaiathendral, valluvanpaarvai, brailleacl

அறிவியல் ஆயிரம்



அணுகுண்டு செயல்படும் விதம்

அணு என்பது சிறியது. கண்களால் பார்க்க முடியாது. அணுக்கரு அதைவிட சிறியது. இதில் புரோட்டான், நியூட்ரான் துகள்கள் உள்ளன. இதை சுற்றி எலக்ட்ரான்உள்ளது. உலகில் முதலில் அணுக்கோட்பாட்டை கண்டறிந்தவர் பிரிட்டனின் ஜான் டால்டன். அணு எடை குறித்த பட்டியலை வெளியிட்டவர். அணு குண்டை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் ராபர்ட் ஓபன்ஹைமர். இரண்டாம் உலகப்போரின் போது, இவரது தலைமையிலானகுழு இதை உருவாக்கியது. அணுக்கரு இணைவு, அணுக்கரு வெடிப்பு என இரு விதங்களில் அணுகுண்டு செயல்படுகிறது. இதற்கான மூலப்பொருள் யுரேனியம்.

 
தகவல் சுரங்கம்
பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்

போர் உள்ளிட்ட சூழல்களில் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு போர்க்குற்றம், இது மனித குலத்திற்கு எதிரானது. சர்வதேச சட்டத்தின் கீழ் இன படுகொலையின் ஒரு அங்கமாகும், இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர், சண்டையை உலகம் தற்போது சந்தித்து உள்ளது. 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்துஉள்ளனர். இதில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ஈரான், சூடான், சிரியா உள்நாட்டு போர் உள்ளிட்டவை அடங்கும். போர் சூழலில் பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

 

Dhivisha dhivi

unread,
Jun 19, 2025, 8:54:59 PMJun 19
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம்


 
்தும் வருவாய் துறை அதிகாரி!


செவ்வாயில் 'மஷ்ரூம்'

செவ்வாய் கோளில் ஆய்வில் ஈடுபட்டுள்ள நாசாவின் 'கியூரியாசிட்டி' ரோவர், செவ்வாய் தரைப்பரப்பில் 'மஷ்ரூம்' வளர்வது போன்ற புகைப்படத்தை எடுத்துள்ளது. இது அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை வெளிப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புகைப்படம் 2023 செப். 19ல் எடுக்கப்பட்டது. 'கியூரியாசிட்டி' விண்கலம் 2011ல் இருந்து செவ்வாயில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதுவரை செவ்வாயில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்படவில்லை. ஆனால் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


தகவல் சுரங்கம்

உலக அகதிகள் தினம்

உலகில் 2024 மே கணக்கின்படி, 12 கோடி பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். இதில் 4.40 கோடி அகதிகள் என ஐ.நா., தெரிவிக்கிறது. அகதிகள் எண்ணிக்கையில் வெனிசுலா, சிரியா, ஆப்கன், உக்ரைன், தெற்கு சூடான் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. போர், பயங்கரவாதம், வறுமை உட்பட பல சூழல்களில் மக்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அகதிகளாக உருவாக்கப்படுகின்றனர். அகதிகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அகதிகளுடன் ஒற்றுமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

 

Dhivisha dhivi

unread,
Jun 20, 2025, 8:58:03 PMJun 20
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்



பூமி 23.45 டிகிரி சாய்வான அச்சில் சூரியனை சுற்றுகிறது. ஆண்டுக்கு இருமுறை (மார்ச் 21, செப். 21) நிலநடுக்கோட்டை சூரியன் கடந்து செல்கிறது. இந்த இரு நாள் மட்டும் உலகில் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீண்ட பகல் பொழுது ஜூன் 21ல், குறுகிய பகல் பொழுது டிச. 22ல் நிகழ்கிறது. ஜூன் 21ல் சூரியனின் பக்கம் பூமி அதிகமாக திரும்பி இருக்கும். இது 'கோடைகால திருப்புநிலை' எனப்படும். அன்று வடக்கு அரைக்கோளத்தில் சூரியன் இருப்பதால், நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும். இதனால் பூமியில் பகல் பொழுது அதிகமாக இருக்கும்.

 
தகவல் சுரங்கம்


* தினமும் யோகாசனம் செய்தால் உடலும், மனதும் இளமையாகவே இருக்கும். யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 21ல் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2014ல் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா., சபை இத்தினத்தை அங்கீகரித்தது.

* இசைக்கு மயங்காதோர் எவருமில்லை எனலாம். இசையில் பல வகைகள் உள்ளன. வருங்கால தலைமுறையினரிடம் இசையின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஜூன் 21ல் உலக இசை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 


Dhivisha dhivi

unread,
Jun 21, 2025, 11:23:38 PMJun 21
to inaiathendral, valluvanpaarvai, brailleacl

அறிவியல் ஆயிரம்

 

செயற்கைக்கோளுக்கு பாதிப்பு

நிலவின் மீது மோதும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ள '2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல், ஒருவேளை நிலவில் மோதினால் அதிலிருந்து 10 கோடி கிலோ எடையிலான துகள்கள் குப்பையாக வெளிப்படும். இதனால் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் சில செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2032 டிச. 22ல் இந்த விண்கல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு மார்ச்சில் 1.7% என இருந்தது. பின் ஏப்ரலில் 3.8% உயர்ந்தது. தற்போது 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் அகலம் 200 அடி.

தகவல் சுரங்கம்

உலக மழைக்காடுகள் தினம்

மழைக்காடுகள் என்பது பெருமளவு மழைப்பொழிவு உள்ள வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அடர்ந்த காடு. இவையே பூமியின் பழமையான காடுகள். பூமியில் 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாயகமாக இவை அமைந்துள்ளன. உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 30 சதவீதத்தை இவை உறிஞ்சுகின்றன. இயற்கை மருத்துவத்துக்கான பல மூலிகைகள் இங்குதான் கிடைக்கின்றன. பூமியின் பாதுகாவலாக விளங்கும் இக்காடுகளை, அழிவில் இருந்து காக்க வலியுறுத்தி ஜூன் 22ல் உலக மழைக்காடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலகின் பெரிய மழைக்காடு அமேசான்.


Dhivisha dhivi

unread,
Jun 22, 2025, 8:57:02 PMJun 22
to brailleacl, inaiathendral, valluvanpaarvai

அறிவியல் ஆயிரம்
தண்ணீர் ஏன் பொங்குவதில்லை

பால் கொதித்தால் பொங்குகிறது. ஆனால் தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும்.


 
தகவல் சுரங்கம்

மழைக்காடுகள் தினம்
தகவல் சுரங்கம்

* பல காரணங்களால் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள் மறு வாழ்வுக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் உலக விதவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி பேர் விதவைகள். இதில் பத்தில் ஒருவர் வறுமையில் உள்ளார்.

* நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் உள்ளன. உலகளவில் இப்போட்டி நடப்பதால் இதில் பதக்கம் வெல்வது வீரர்களின் கனவாக உள்ளது. ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.



Dhivisha dhivi

unread,
Jun 23, 2025, 9:10:11 PMJun 23
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

யுரேனியம் செறிவூட்டல்

 
யுரேனியம் தனிமத்தின் அணு எண் 92. குறியீடு'U'.சில வகைகள் உள்ளன. இயற்கையான நிலையில் கிடைப்பவை 'யுரேனியம் - 238'. இதிலிருந்து செறிவூட்டம்செய்து 'யுரேனியம் - 235'ஐ பிரித்து எடுக்க வேண்டும். இதுதான் அணுமின், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள். 'யுரேனியம் -235'ன் சக்தியில் 0.7% தான்
ி


'யுரேனியம்- 238'. அணுமின் நிலையங்களில் 25%க்கு குறைவான 'யுரேனியம் -235' பயன்படுத்தப்படுகிறது. 25% க்கு அதிகமான 'யுரேனியம் - 235, அணு ஆயுதத்துக்கு

பயன் படுத்தப்படுகிறது. ஆனால் பொதுவாக 90%க்கு மேல் செறிவூட்டப்படுகிறது.



தகவல் சுரங்கம்

பெண் அதிகாரிகள் தினம்

அதிபர், பிரதமர், அமைச்சர், எம்.பி., துாதர், சிவில் சர்வீஸ் என அரசின் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் அமைச்சர்களாக, எம்.பி.,க்களாக இருக்கும் போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 193 நாடுகள் ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளாக உள்ளன. 2025 ஜன. நிலவரப்படி 25 நாடுகளில் மட்டுமே பெண் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.

 
Powered by:

Dhivisha dhivi

unread,
Jun 24, 2025, 9:04:52 PMJun 24
to inaiathendral, valluvanpaarvai, brailleacl

அறிவியல் ஆயிரம்

 

புலி தப்புவது எப்படி...

மனிதர்களைப்போல விலங்குகளுக்கு நிறங்கள் துல்லியமாக தெரியாது. பெரும்பாலான விலங்குகளுக்கு கருப்பு வெள்ளையாகத்தான் காட்சி புலப்படும். இந்நிலையில் புலி, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகள் தங்களது உடலில் உள்ள கோடுகளை வைத்து, எதிரிகளிடம் இருந்து தப்புகின்றன. அதாவது புலிகளின் கோடுகள் மூலம் அவற்றின் உருவம் முழுமையாகத் தென்படாது. அதனால் புலியை விரைவில் காணமுடியாது. புலிகள் புல்வெளியில் நடந்து செல்லும்போது அதன் கோடுகள், எதிரி விலங்குகளுக்கு புற்களின் நிழல் போன்ற தோற்றம் தரும். இதனால் புலி எளிதில் தப்பி விடுகிறது.

 
தகவல் சுரங்கம்
உலக மாலுமி தினம்

கடல் பயணம் என்பது பல்வேறு இயற்கை சவால்களை கடந்தது. இத்தகைய கடல் போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ள உதவும் கப்பல் மாலுமிகளின் பணியை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் 2010 முதல் ஜூன் 25ல் உலக மாலுமிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் கடல் வழியே தான் நடைபெறுகிறது. இதிலிருந்து கப்பல் மாலுமிகளின் பணி எந்தளவுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது. 'என் துன்புறுத்தல் இல்லாத கப்பல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.



Mohan

unread,
Jun 25, 2025, 9:27:55 PMJun 25
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்

   அரசே யோசி
நீலகிரி

அழியும் பறவைகள்...

பருவநிலை மாற்றத்தின் காரணமாக 500 வகை பறவை இனங்கள் தங்களின் வாழ்விடங்கள்
பாதிக்கப்படுவதால், அடுத்த 100 ஆண்டுகளில் அழியும் ஆபத்தில் உள்ளன என
ரீடிங் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. ஐ.யு.சி.என்., எனும்
சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில்
இருந்த 10 ஆயிரம் பறவையினங்களை ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இவற்றை
பாதுகாக்க வேண்டுமெனில் அவற்றுக்கான இனப்பெருக்கம், வாழ்விட மறுசீரமைப்பு
உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்


போதைப்பொருள் ஒழிப்பு தினம்

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, சட்டவிரோத
போதைப் பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு
போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. போதைப்பொருள்
கடத்தலை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ல் சர்வதேச போதைப்பொருள், சட்டவிரோத
கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருளால் புற்றுநோய்
உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. 'இணைப்பை துண்டித்தல்:
அனைவருக்கும் தடுப்பு, சிகிச்சை, மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.



Dhivisha dhivi

unread,
Jun 26, 2025, 8:57:47 PMJun 26
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்


சீனாவில் புதிய வைரஸ்

உலகை அச்சுறுத்திய கொரோனா, சார்ஸ், மெர்ஸ், எபோலா உள்ளிட்ட வைரஸ்களுக்கும், வவ்வால்களுக்கும் தொடர்பு உள்ளது. சீனாவில் வவ்வால்களிடம் இருந்து இரண்டு புதிய வைரசை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மனிதர்களுக்கு பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. இது கடுமையான மூளை வீக்கம், சுவாச தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வவ்வால்களின் கிட்னியை ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இந்த இரண்டும், நிபா, ஹெந்ரா வைரசுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


 தகவல் சுரங்கம்

 உலகில் 2030க்குள் 60 கோடி வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. உலகில் 10ல் 7 பணியிடங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் தான் உள்ளன. இவற்றை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 27ல் உலக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* அமெரிக்காவின் ஹெலன் கெல்லர், பிறவியிலேயே காது கேளாமை, பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் பல சாதனைகளை படைத்தவர். இவரது பிறந்தநாளான ஜூன் 27ல் உலக காதுகேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

Dhivisha dhivi

unread,
Jun 27, 2025, 9:08:59 PMJun 27
to brailleacl, valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்

அலைபேசி ஆபத்து

'டாய்லெட்டில்' அலைபேசி பயன்படுத்துவதால் அதிலுள்ள பாக்டீரியா, கிருமிகள், அலைபேசியில் ஒட்டிக் கொள்ளும். பின் அதை பயன்படுத்துபவருக்கு வயிற்றுபோக்கு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. டாய்லெட்டில் உள்ள கிருமிகள் எட்டு விநாடிகளில் 5 அடி பரவும். டாய்லெட் பயன்படுத்திவிட்டு 'சோப்' மூலம் கைகளை சுத்தம் செய்தாலும், மீண்டும் அலைபேசியை தொடும்போது 'கை'யில் பரவும். எனவே டாய்லெட்டில் அலைபேசி பயன்பாட்டை கைவிடுவதே சிறந்தது என பரிந்துரைக்கின்றனர்.


 
தகவல் சுரங்கம்
நீண்ட காலம் தூங்கும் உயிரினம்

நத்தைகள் நிலம், கடல், நன்னீர்களில் வாழும். இதில் பல வகைகள் உள்ளன. நிலப்பரப்பில் வாழும் நத்தைகள் எப்போதும் ஈரப்பதமான சூழலையே விரும்பும். வெப்பம், வறட்சியான சூழலில் இருந்து தப்பிக்க நீண்டகாலம் (மூன்றாண்டு வரை) துாங்கும் பழக்கத்தை கொண்டது. இதற்கு முதுகெலும்பு இல்லை. ஆயுட்காலம் 3 ஆண்டுகள். சில 10 ஆண்டுகள் வாழும். நீளம் 30 செ.மீ., வரை வளரும். விநாடிக்கு 0.5 - 0.8 இன்ச் வேகத்தில் மெதுவாக நகரும். இது நிற்காமல் சென்றால் ஒரு கி.மீ., துாரம் செல்ல ஒரு வாரம் ஆகும். தன் உடல் எடையை விட, 10 மடங்கு எடையை துாக்கும் திறன் பெற்றவை.

 


 

Dhivisha dhivi

unread,
Jun 28, 2025, 9:14:46 PMJun 28
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

பறக்கும் ரோபோ

பல்வேறு வகை ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்நிலையில் உலகின் முதல் பறக்கும் ரோபோ இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்கட்டமாக தரையில் இருந்து 50 செ.மீ., உயரம் பறக்க வைத்து விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். இத்தாலியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், இரண்டாண்டு முயற்சியில்இதை உருவாக்கியது. இதன் பெயர் 'ஐரான்கப்3'.இதில் பறப்பதற்காக நான்கு ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 70 கிலோ. எதிர்காலத்தில் மனிதர்கள் செய்ய முடியாத வேலைக்கு இதை பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
 தகவல் சுரங்கம்

 தேசிய புள்ளியியல் தினம்

இந்திய புள்ளியியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் புள்ளியியல் அறிஞர் பிரசந்த சந்திர மகிலனோபிஸ், 1893 ஜூன் 29ல் கோல்கட்டாவில்பிறந்தார். 1931ல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை தொடங்கினார். இது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைக்க, கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்கிறது. புள்ளி விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மகிலனோபிஸ் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 29 தேசிய புள்ளியியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 

Dhivisha dhivi

unread,
Jun 29, 2025, 9:14:22 PMJun 29
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் அதிக நாள்

பூமியில் இருந்து சராசரியாக 400 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் (ஐ.எஸ்.எஸ்.,) சுற்றுகிறது. நீளம் 358 அடி. அகலம் 239 அடி. வேகம் மணிக்கு 27,600 கி.மீ., 2024 ஜூன் படி 25 நாடுகளை சேர்ந்த 280 விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். சமீபத்தில் இந்தியாவின் சுபான்ஷூ உள்ளிட்ட 4 வீரர்கள் சென்றனர். அங்கு அதிகம் (1110 நாட்கள்) தங்கி ஆய்வில் ஈடுபட்டவர் ரஷ்ய வீரர் கொனென்கோ. இவரை தொடர்ந்து 'டாப் - 8' இடங்களிலும் ரஷ்ய வீரர்களே உள்ளனர். 9வது இடத்தில் அமெரிக்காவின் பெஜ்ஜி விட்சன் (678 நாட்கள்) உள்ளார். இவர் தற்போது அங்குதான் உள்ளார்


 

 தகவல் சுரங்கம்
சர்வதேச சிறுகோள் தினம்

சூரியனை சுற்றிவரும் பூமி, செவ்வாய் போன்ற கோள்களைப்போல 'அஸ்ட்ராய்டு' எனும் சிறுகோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை கோள்களை விட சிறியது. 1908 ஜூன் 30ல் ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் விழுந்தது. 2150 சதுர கி.மீ., சுற்றளவில் இருந்த 8 கோடி மரங்கள் தரைமட்டமாகின. இந்நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 30ல் சர்வதேச சிறுகோள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கம். விண்வெளியில் 10 லட்சம் சிறுகோள்கள் சுற்றுகின்றன.




Dhivisha dhivi

unread,
Jun 30, 2025, 9:23:19 PMJun 30
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்

தடுப்பூசி செலுத்துவதில் தயக்கமா...

குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைந்து வருகிறது என 1980 - 2023 வரை, 204 நாடுகளின் தடுப்பூசி தரவுகளை ஆய்வு செய்து, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் 'தட்டம்மை' தடுப்பூசி பயன்பாடு அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 100 நாடுகளில் குறைந்துள்ளது. கொரோனா பரவல், தடுப்பூசி குறித்த தவறான தகவல் உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம். உலகில் தடுப்பூசியால் ஆண்டுக்கு 15 கோடி குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.



 
 
 
 



e


கர்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு! தடுக்க ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்
கர்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு! தடுக்க ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்  தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்
சிய டாக்டர்கள் தினம்

உயிர்களை காப்பாற்றும் டாக்டர்களின் பணி உன்னதமானது. இவர்களது சேவையை போற்றும் வகையிலும், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மருத்துவருமான பி.சி.ராய் பிறந்த தினமான ஜூலை 1, தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்தார். 'சுதந்திரம் எனும் கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை' என்றார். ஏழைகளுக்காக, பல மருத்துவமனைகளை தொடங்கினார்.

'மனசையும் உடலையும் நேசிக்க கத்துக்கோங்க! '

 

Dhivisha dhivi

unread,
Jul 1, 2025, 9:13:40 PMJul 1
to inaiathendral, valluvanpaarvai, brailleacl
அறிவியல் ஆயிரம்
காற்றின் சிறப்பம்சம்

வாயுக்களின் கலவையே காற்று. பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78%, ஆக்சிஜன் 21% உள்ளது. மீதி ஒரு சதவீதத்தில் கார்பன் டை ஆக்சைடு, நியான், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்டவை உள்ளன. காற்றை பார்க்க முடியாது. சுவை கிடையாது. மணமற்றது. சில மாசுக்களுடன் சேரும் போது வாசனை தருகிறது. காற்றுக்கு எடை உண்டு. மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கையில் தாவரங்கள், கார்பனை எடுத்து, ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஈரப்பதம் மூலம் காற்று, தண்ணீரை பிடித்திருக்கும்.

விளையாட்டு பத்திரிகையாளர் தினம்

உலகை ஒருங்கிணைப்பது விளையாட்டு. உலகில் நடக்கும் பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது 1924 ஜூலை 2ல் சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் 70வது ஆண்டு நினைவாக 1994 ஜூலை 2ல் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் தொடங்கப்பட்டது. இவர்களது பணியை பாராட்டுவதே இத்தினத்தின் நோக்கம்.






 
 

 

Dhivisha dhivi

unread,
Jul 2, 2025, 9:17:26 PMJul 2
to brailleacl, valluvanpaarvai, inaiathendral
அறிவியல் ஆயிரம்


தொலைவில் சூரியன்

பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. பூமி, சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்), தொலைவிலும் (அப்ஹீலியன்) கடக்கும் வானியல் நிகழ்வு நடக்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 365.25 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் (2025ல் ஜூலை 3) பூமி, சூரியனுக்கு தொலைவில் (15.2 கோடி கி.மீ., துாரம்) இருக்கும். இன்றைய தினம் சூரியன், பூமியில் இருந்து பார்க்க வழக்கத்தை விட சற்று சிறியதாக தெரியும். ஜனவரியில் சூரியனுக்கு அருகில் (14.7 கோடி கி.மீ., துாரம்) கடந்து சென்றதஉ

தகவல் சுரங்கம்


இந்தியாவின் உளவு அமைப்பு

உள்நாட்டுக்குள் 'ஐ.பி.,' எனும் உளவுத்துறை இருப்பது போல, வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பாக, 'ரா' எனும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு பிரிவு செயல்படுகிறது. இது 1968 செப். 21ல் தொடங்கப் பட்டது. தலைமையகம் டில்லி. இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகளின் சதித்திட்டம் உள்ளிட்ட உளவு தகவல்களை சேகரித்தல், பயங்கரவாத எதிர்ப்பு, இந்திய அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் 'ரா' ஏஜன்ட்டுகள் ஈடுபடுகின்றனர். முதல் தலைவராக ரமேஷ்வர் நாத் கவ் (௧968 - 1977) இருந்தார். இதுவரை 25 பேர் இப்பதவியில் இருந்துள்ளனர்.




 

Dhivisha dhivi

unread,
Jul 3, 2025, 8:44:55 PMJul 3
to brailleacl, inaiathendral, valluvanpaarvai
அறிவியல் ஆயிரம்



வேகமாக சுற்றும் பூமி

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் (86,400 வினாடிகள்) ஆகிறது. இந்நிலையில் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பதால், வரும் வாரங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாததாக 'குறுகிய நாள்' ஏற்படும் என லண்டன் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. இதன்படி ஜூலை 9, ஜூலை 22 அல்லது ஆகஸ்ட் 5 தேதிகளில் மொத்த நேரத்தில் முறையே 1.30, 1.38, 1.51 மில்லி வினாடிகள் குறையும். ஒரு மில்லி வினாடி என்பது 0.001 வினாடி. இதன் காரணமாக செயற்கைக்கோள் அமைப்பு, ஜி.பி.எஸ்., துல்லியம் போன்றவற்றில் பாதிப்பு வரலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகவல் சுரங்கம்

நீளமான இயற்கை குகைகளில் ஒன்று போரா. இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் உள்ளது. ஆழம் 260, நீளம் 660 அடி. லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் கோஸ்தனி ஆறு உருவாகிய போது இக்குகை தோன்றியது. குகைக்குள் சிவன், பார்வதி, காளான், முதலை, கோயில் உட்பட இயற்கையில் உருவான வடிவங்கள் உள்ளன. குகைக்குள் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ். அருகிலுள்ள (80 கி.மீ.,) விசாகபட்டினத்தில் விமான, ரயில் நிலையம் உள்ளன.

 

Dhivisha dhivi

unread,
Jul 4, 2025, 8:52:07 PMJul 4
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 


பூமிக்கு அருகில் விண்கல்

அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் பூமியை தாக்கும், அருகில் கடக்கும் வாய்ப்புள்ள விண்கற்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 11ல் '2025 விO5' என்ற விண்கல் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது என 'நாசா' தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பூமியில் இருந்து 60.86 லட்சம் கி.மீ., துாரத்தில் விண்கல் கடந்து செல்லும். இது மணிக்கு 51,732 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. இதன் விட்டம் 660 மீட்டர். இந்த விண்கல் இதற்குமுன் 1988 ஜூலை 1ல் பூமிக்கு அருகில் கடந்து சென்றது. இதற்குபின் 2062ல் பூமிக்கு அருகே கடந்து செல்லும் என தெரிவித்துள்ளது.


 தகவல் சுரங்கம்


 
சர்வதேச கூட்டுறவு தினம்




நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் 28 கோடி பேருக்கு வேலை அளிக்கிறது. 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. உலக மக்கள்தொகையில் 12% பேர் இதில் உள்ளனர். ஐ.நா., சார்பில் ஜூலை முதல் சனி (ஜூலை 5ல்) சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப் படுகிறது.

'கூட்டுறவு: சிறந்த உலகத்துக்கான உள்ளடக்கிய, நிலையான தீர்வுகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1761ல் ஸ்காட்லாந்தில் அறிமுகமானது. 1844ல் இங்கிலாந்தில் பருத்தி மில்லில் பணியாற்றிய 28 பேர் இணைந்து, முதல் நவீன கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.

Dhivisha dhivi

unread,
Jul 5, 2025, 9:38:02 PMJul 5
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


 
 நீண்டநேர சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப். 7ல் நிகழ்கிறது. இது 82 நிமிடங்கள் நீடிக்கும். இது 2022க்குப்பின் நிகழும் நீண்டநேர முழு சந்திர கிரகணம். பவுர்ணமி தினத்தில் சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியன் - நிலவு இடையே பூமி வரும். இதனால் சூரிய ஒளியை பூமி மறைக்கிறது. அதன் நிழல்தான் நிலவில் விழும். இதுதான் சந்திர கிரகணம். இது ஆசியா, மேற்கு ஆஸி., ஐரோப்பா, ஆப்ரிக்காவில் தெரியும். உலக மக்கள்தொகையில் 77 சதவீதம் பேர் இதை பார்க்கும் வாய்ப்புள்ளது. அடுத்த சந்திர கிரகணம் 2026 மார்ச் 3ல் நிகழும்.
 தகவல் சுரங்கம்
 


உலக ஊரக வளர்ச்சி தினம்

கிராமப்புற மக்களுக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 6ல் உலக ஊரக வளர்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 80 சதவீத ஏழை மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் தினசரி சம்பளம் ரூ. 183க்கு குறைவாக உள்ளது. 100 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இதில் பாதி பேர் குழந்தைகள். கிராமப்புற மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுகாதார வசதி கிடைப்பதில்லை. 2024ல் நகர்பகுதிகளில் 83% பேர் இணைய வசதி பயன்படுத்துகின்றனர். இது ஊரக பகுதியில் 50%க்கும் குறைவாக இருந்தது.



Dhivisha dhivi

unread,
Jul 7, 2025, 9:33:59 PMJul 7
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 அதிக நேரம் வேலையா...

நீண்ட நேரம் பணியாற்றுவோருக்கு மூளை செயல் திறன் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இது அவர்களது உணர்ச்சி கட்டுப்பாடு, ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும் என தென் கொரிய ஆய்வு தெரிவித்துள்ளது. வாரத்துக்கு 52 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் 32 பேர், சரியான நேரம் பணியாற்றும் 78 பேரிடமும் மூளை செயல்பாடு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதை தவிர்க்க போதுமான ஓய்வு, துாக்கம், உடற்பயிற்சி அவசியம் என தெரிவித்துள்ளனர்.

 போலீசாருக்கு இரண்டு ஷிப்ட்டுக்கு பதிலாக... 3 ஷிப்ட் முறை! பணிச்சுமையை குறைக்க மாநில அரசு முடிவு
போலீசாருக்கு இரண்டு ஷிப்ட்டுக்கு பதிலாக... 3 ஷிப்ட் முறை! பணிச்சுமையை குறைக்க மாநில அரசு முடிவு

Mohan

unread,
Jul 8, 2025, 8:58:31 PMJul 8
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம்

 )

விண்கல் விலை ரூ. 34 கோடி

'என்.டபிள்யு.ஏ.' என்ற செவ்வாய் விண்கல் மதிப்பு ரூ. 34 கோடி இருக்கலாம் என
நிபுணர்கள் கணித்துள்ளனர். இது 2023ல் ஆப்ரிக்காவின் நைஜரில்
கண்டெடுக்கப்பட்டது. பின் சீனாவின் ஷாங்காய் ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி
செய்யப்பட்டது. இது செவ்வாய் கோளின் மீது விண்கல் மோதலால், அதன் பாறை துகள்
வெளியேறி, 22 கோடி கி.மீ., துாரம் பயணித்து பூமியில் விழுந்திருக்கலாம் என
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் எடை 24.67 கிலோ. இதுதான் எடைமிக்க
செவ்வாய் விண்கல். இதற்கு முன் 2021ல் 14.52 கிலோ எடையுள்ள 'தயோடெனி 002'
விண்கல் கண்டெடுக்கப்பட்டது.





 தகவல் சுரங்கம்

பெரிய மின் நிலையம்

மத்திய பிரதேசத்தில் உள்ள விந்த்யாச்சல் அனல் மின் நிலையம், இந்தியாவின்
பெரிய மின் உற்பத்தி மையம் என அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப்பணி 1982ல்
தொடங்கி 1987ல் மின் உற்பத்தி தொடங்கியது. உலகளவில் 9வது இடத்தில் உள்ளது.
இங்கு 4783 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நிலக்கரி
மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய அனல்மின் நிலையம் இதை
நடத்துகிறது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் ம.பி., குஜராத், மஹாராஷ்டிரா,
கோவா, சத்தீஸ்கர், டாமன் டையூ, தாதர் நகர் ஹவேலிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.




Dhivisha dhivi

unread,
Jul 10, 2025, 8:57:56 PMJul 10
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


வெடிக்கும் எரிமலை

உலகில் சுமார் 1350 எரிமலைகள் செயலில் உள்ளன. இந்நிலையில் உலகளவில் நுாற்றுக்கணக்கான செயலற்ற எரிமலைகள் விரைவில் வெடிக்கக்கூடும். அவை இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்தவை என அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றம், வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகுதலே இதற்கு முக்கிய காரணம். சமீபத்தில் இத்தாலி, இந்தோனேஷியாவில் பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. வட அமெரிக்கா, நியூசிலாந்து, ரஷ்யா பகுதி களில் இவை அதிகம் நிகழும் என தெரிவித்துள்ளனர்.

 தகவல் சுரங்கம்

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது. 1950ல் 253 கோடியாக இருந்த மக்கள் தொகை 2021ல் 790 கோடியானது. 2050ல் 970 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 * விளையாட்டு, தொழில்துறையில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது.



 

P

Dhivisha dhivi

unread,
Jul 11, 2025, 8:54:02 PMJul 11
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

விண்வெளியில் உயிரினங்கள்

இன்று விண்வெளிக்கு விஞ்ஞானிகள் பலர் சென்று வருகின்றனர். ஆனால் விண்வெளி பயணத்தின் துவக்க காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களுக்கு பதிலாக பூச்சி, குரங்கு, நாய், ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் தான் அனுப்பப்பட்டன. அதன்படி 1957ல் சோவியத் யூனியன் (ரஷ்யா) சார்பில் அனுப்பிய 'லைகா' நாய், விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினம். ஆனால் இப்பயணத்தில் தன் உயிரை இழந்தது. அதுபோல 1960 ஆக. 19ல் ரஷ்யா அனுப்பிய 'பெல்கா', 'ஸ்டெர்ல்கா' ஆகிய இரு நாய்களும், விண்வெளிக்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பிய முதல் உயிரினங்கள்.

 
 காகித பை, எளிமை தினம்



 


* உலகில் ஆண்டுக்கு 40 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த மக்காத பாலிதீன் பைக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹென்றி டேவிட் பிறந்த தினம் தேசிய எளிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


  தகவல் சுரங்கம்

Dhivisha dhivi

unread,
Jul 13, 2025, 8:55:05 PMJul 13
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்



 அறிவியல் ஆயிரம் : செவ்வாயில்
பல்லியின் ரகசியம்

உலகில் 7000 வகை பல்லி இனங்கள் உள்ளன. இவை சில செ.மீ., நீளம் முதல் 10 அடி நீளம் வரை உள்ளது. பல்லிகள் மட்டும் சுவரில் கீழே விழாமல் ஊர்ந்து செல்வதுண்டு. இதற்கென சிறப்பு ரோமங்கள் அதனிடம் உள்ளது. பல்லியின் பாதம், விரல்களில் செதில்கள் போன்ற சிறிய ரோமங்கள் உள்ளன. இவை சுவரிலோ, மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன. இதனால் பல்லி மேற்கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது. பூமியில் பூ
தகவல் சுரங்கம்

 வடகிழக்கின் சிறப்பு

இந்தியாவின் வடகிழக்கில் அருணாச்சல், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம்,நாகாலாந்து, திரிபுரா என ஏழு மாநிலங்கள் உள்ளன. இவற்றுக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்தியாவில் முதல் சூரிய உதயம் தெரியும் மாநிலம் அருணாச்சல். உலகிலேயே அதிக மழைபொழியும் இடமான மாசின்ராம் மேகாலயாவிலும், பெரிய ஆற்றுத்தீவு (மசூலி) அசாமிலும், பெண்கள் (6000 பேர்) மட்டுமே நடத்தும் பெரிய மார்க்கெட் (இமா) மணிப்பூரில் உள்ளது. மேலும் உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா மணிப்பூரில் உள்ளது. ஏழு மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் மலைப்பகுதிகள்.


Dhivisha dhivi

unread,
Jul 14, 2025, 9:01:17 PMJul 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 வெள்ளை நிறத்துாள்

சோடியம் பைகார்பனேட் என்பது ஒரு வேதியியல் கலவை. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு NaHCO3. இதில் சோடியம், ஹைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன் உள்ளன. மேலும் இதில் ஒரு சோடியம் அயனி , ஒரு பைகார்பனேட் அயனியும் உள்ளன, இது சோடியம் பைகார்பனேட்டை, உப்பாக மாற்றுகிறது. இது பொதுவாக பேக்கிங் சோடா என அழைக்கப்படுகிறது. இது ஒரு வெள்ளை நிறத்துாள். சமையல், வீட்டு உபயோகங்கள், மருத்துவ துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ரொட்டி, கேக் போன்றவற்றை தயாரிக்க ஒரு புளிப்பு காரணியாக பயன்படுகிறது.


 
 தகவல் சுரங்கம்

 கல்வி வளர்ச்சி தினம்

தமிழக முதல்வராக மூன்று முறை இருந்த காமராஜரின் பிறந்த தினம், கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1903 ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்யாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1954 ஏப்.13ல் தமிழக முதல்வரானார். இவரது ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்களை தொடங்கினார். பல அணைகள் கட்டப்பட்டன.


 

Dhivisha dhivi

unread,
Jul 15, 2025, 8:48:59 PMJul 15
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


ஆக்சிஜனை பிரித்தெடுப்பது எப்படி

நாம் சுவாசிக்கும் போது வாயுக்களின் கலவை காற்றுதான் நுரையீரலுக்குள் செல்கிறது. இவை 'ஆல்வியோலி' எனும் மூச்சுச் சிற்றறைகளுக்குள் புகும். அந்த நுண்ணறைகளின் உட்சுவரில் சிறுசிறு ரத்த நுண் குழாய்கள் இருக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளை, ரத்தத்தில் கலக்கச் செய்யும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனைக் கவர்ந்து பற்றிக்கொள்ளும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, நுரையீரலுக்குள் வந்துவிடும். இவ்வாறு தான் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நுரையீரல் பிரித்தெடுத்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.


 

  தகவல் சுரங்கம்
 உலக பாம்புகள் தினம்

உலகில் 3500 வகை பாம்புகள் உள்ளன. இவை சுற்றுச் சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்விடம் அழிதல், பருவநிலை மாற்றம் காரணமாக இவை அழிவை சந்திக்கின்றன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் நீளமான விஷப்பாம்பு 'கிங் கோப்ரா'. பாம்புக்கு வெளிப்புற காது கிடையாது. அதன் தாடையில் உள்ள எலும்புகள் ஒலியை உணரச்செய்கிறது. அதேபோல நாக்கின் மூலம் தண்ணீர், காற்று, நிலத்தில் உள்ள வாசனையை உணர்கிறது. இதனால் தான் எப்போதும் நாக்கை வெளியே நீட்டியவாறு உள்ளது.




 

Dhivisha dhivi

unread,
Jul 16, 2025, 9:25:01 PMJul 16
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


புதிய 'சூப்பர்' பூமி

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கோள்கள் உள்ளனவா என்பது பற்றி அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா' ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 'நாசா' அனுப்பியுள்ள 'டெஸ்' செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. இந்நிலையில் இது புதிய சூப்பர் பூமியை (டி.ஓ.ஐ., 1846) கண்டறிந்துள்ளது. இது நமது பூமியை விட 4.4 மடங்கு பெரியது. மேலும் இதில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியையும் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் இருந்து 154 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு) உள்ளது.



 தகவல் சுரங்கம்

 சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்


* சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 17ல் சர்வதேச நீதி தினம் கடைபிடிக்கப் படுகிறது. 123 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.

* நேருக்கு நேர் பேசும் போது முகபாவனையை அறிய முடியும். அதுபோல இணையத்தில் 'சாட்டிங்' செய்யும் போது உணர்வு, தகவல், தேவை, துன்பம், மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக 'எமோஜி' குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 17ல் உலக 'எமோஜி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

Dhivisha dhivi

unread,
Jul 17, 2025, 9:04:15 PMJul 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

'நிறை - எடை' வித்தியாசம்

இயற்பியலில் நிறை - எடை இடையே வேறுபாடு உண்டு. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே நிறை. அதே நேரத்தில் அப்பொருள் புவியீர்ப்பு சக்தியில் கவரப்படும் அளவே அதன் எடை. பூமியில் எடை பார்க்கும் கருவியில் காட்டப்படும் நம் எடை, அதே எடைக் கருவி மூலம் நிலவில் நின்று எடை பார்த்தால், பூமியில் உள்ளதைப் போல ஆறில் ஒரு பங்குதான் இருக்கும். எங்கும் நம் நிறையில் வேறுபாடு இல்லை; நம் உடலில் அதே அளவுதான் அணுக்கள், பருப்பொருட்கள் உள்ளன. ஆனால் ஆங்காங்கே உள்ள ஈர்ப்பு விசையின் வலிமைக்கு ஏற்ப எடை மாறுகிறது.

 


   தகவல் சுரங்கம்

 நெல்சன் மண்டேலா தினம்

தென்னாப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த நெல்சன் மண்டேலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (1918, ஜூலை 18), ஐ.நா. சார்பில் உலக நெல்சன் மண்டேலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்க அரசுக்கு எதிராக இவரது தலைமையில் போராட்டங்கள் நடந்தன. இதனால் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்ய உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. 1990 பிப்., 11ல் விடுதலையானார். 1994 மே 10ல் அந்நாட்டின் அதிபரானார்.



Dhivisha dhivi

unread,
Jul 18, 2025, 8:21:13 PMJul 18
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


ரயில் தண்டவாளத்தின் சிறப்பு

பொதுவாக இரும்பு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் துருப்பிடிக்கும். இந்நிலையில் ரயில்கள் ஓடும் தண்டவாளங்கள் துருப்பிடிப்பதில்லை. ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தப்படுவது வெறும் இரும்பு அல்ல. அதனுடன் பல சிறப்பு உலோகங்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் இது அதிக உறுதித்தன்மையுடன் இருக்கிறது. மேலும் தண்டவாளத்தில் ரயில் சக்கரங்கள் தொடர்ந்து உரசி செல்வதால் துருப்பிடிப்பதில்லை. பக்கவாட்டில் இருக்கும் இரும்பின் மீது உராய்வு ஏற்படாவிட்டாலும் அதன் தரம் காரணமாக அந்த இரும்பும் துருபிடிப்பதில்லை.


உயரமான விமான நிலையம்


தகவல் சுரங்கம்

 

 

உயரமான விமான நிலையம்

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் 'குசோக் பகூலா ரிம்போச்செ' விமான நிலையம் உள்ளது. 1985ல் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் உயரமான விமான நிலையம் என அழைக்கப்படுகிறது. இது சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 10,682 அடி உயரத்தில் உள்ளது. இந்திய விமானப்படையின் விமான தளம், உள்நாட்டு விமான நிலையமாகவும் செயல்படுகிறது. 9028 அடி நீளமுள்ள ஓடுதளம் உள்ளது. இங்கிருந்து டில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகருக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. புதிய டெர்மினல் அமைக்கும் பணி 2019ல் தொடங்கி நடந்து வருகிறது.

 


 

Dhivisha dhivi

unread,
Jul 20, 2025, 9:06:03 PMJul 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நிலவு மண்ணில் தண்ணீர்

நிலவு குறித்து பல்வேறு நாடுகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நிலவின் மண்ணில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்து, அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை உருவாக்கவும், ஹைட்ரஜன் உள்ளிட்ட எரிபொருள் தொடர்பான ரசாயனங்களாக மாற்றவும் முடியும் என சீன விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு நீர், ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளிட்ட வளங்களுக்கு பூமியை மட்டும் சார்ந்திருப்பதை குறைக்க வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.

 


  தகவல் சுரங்கம்


பல்லுயிரினங்களின் மையம்



இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. இது 8.8 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்தது. பலவகை தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் இங்கு வாழ்வதால் இது 'பல்லுயிரினங்களின் மையம்' என அழைக்கப்படுகிறது. இது உலகின் இரண்டாவது பெரிய தீவு நாடு. பரப்பளவு 5,92,800 சதுர கி.மீ. 1960 ஜூன் 26ல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மக்கள்தொகை 2.48 கோடி. உலகில் அதிகமாக கிராம்பு, நவரத்தினங்கள் இங்கு கிடைக்

Dhivisha dhivi

unread,
Jul 21, 2025, 8:53:30 PMJul 21
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 சூரிய ஒளி மின்சாரம் எப்படி

சூரிய ஒளி பேனல்களில் 'போட்டோ வோல்டிக்' செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மீது சூரிய ஒளி படும்போது எலக்ட்ரான்கள் வெளிப்பட்டு மின்சாரம் உருவாகிறது. இந்த செல்கள் மழைநீர் பட்டால் நாளடைவில் செயல்திறன் குறையக்கூடும். தவிர பறவை எச்சம், இலை என பலவும் விழும். இதைத் தடுக்க, அந்த செல் மீது கண்ணாடியை பதிக்கின்றனர். இந்த கண்ணாடி மீது படியும் துாசியை அவ்வப்போது துடைக்காவிட்டால் சூரிய ஒளி படும் அளவு குறையும். இதனால் மின்சார உற்பத்தியும் குறையும். இதை தவிர்க்க சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம்.

 

தகவல் சுரங்கம்

 தேசிய மாம்பழ தினம்

முக்கனிகளில் ஒன்று மாம்பழம். இந்தியாவில் 5000 ஆண்டுக்கு முன் பயிரிடப்பட்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல வகைகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் இருந்து மாம்பழம், உலகிற்கு பரவியது. இந்தியா உட்பட சில நாடுகளில் இது பழம் மட்டுமல்ல. கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, டி சத்துகள் உள்ளன. இதன் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த

 

ஜூலை 22ல் தேசிய மாம்பழ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை ஜூஸ், கேக், ஐஸ்கிரீம் என பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.




 

Dhivisha dhivi

unread,
Jul 22, 2025, 9:14:13 PMJul 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


பூமியை கடக்கும் விண்கல்

பூமிக்கு அருகில் கடந்து செல்லும் விண்கல்லை 'நாசா' விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் '2025 எம்.இ.92' என்ற விண்கல் வரும் ஜூலை 31ல் பூமியை கடந்து செல்ல உள்ளது. இதன் விட்டம் 98 அடி. இதன் வேகம் மணிக்கு 17,702 கி.மீ. இது பூமியை 31 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்து கடந்து செல்கிறது. பூமியில் இருந்து 74 லட்சம் கி.மீ., துாரத்துக்குள் வருவதும், குறைந்தது 280 அடி விட்டம் கொண்ட விண்கல்லை, ஆபத்தானவை என்ற பட்டியலில் 'நாசா' சேர்த்துள்ளது. இதன்படி இந்த விண்கல்லால் பூமிக்கு பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 தகவல் சுரங்கம்

 

துணை ஜனாதிபதி தேர்தல்
 ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததால், மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 66, துணை ஜனாதிபதி தேர்தல் பற்றி விவரிக்கிறது. துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் (நியமன எம்.பி.,க்கள் உட்பட) இத்தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். இதில் போட்டியிடுபவர் 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். டெபாசிட் தொகை ரூ. 15 ஆயிரம். அரசு பதவிகளில் இருக்கக்கூடாது. ராஜ்யசபா எம்.பி.,க் கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். துணை ஜனாதிபதி ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகிப்பார்

Dhivisha dhivi

unread,
Jul 23, 2025, 8:42:55 PMJul 23
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 பூமிக்கு ஆறு நிலவுகள்

விண்கல், சிறுகோள் உள்ளிட்டவை பூமிக்கு அருகே வரும் போது அதை தற்காலிக சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம். இந்நிலையில் எந்த நேரத்திலும் பூமி ஆறு 'சிறிய நிலவுகளை' தற்காலிகமாக வைத்திருக்கலாம். இது அளவில் (6.5 அடி நீளம்) சிறியதாக இருப்பதால் பார்க்க முடியாது என ஹவாய் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. '2024 பி.டி.5' விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, 2024 செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் தற்காலிக நிலவாக சுற்றி வந்து, பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி அதன் சுற்றுப்பாதையில் சென்றது.

 
 


 

Dhivisha dhivi

unread,
Jul 24, 2025, 9:04:44 PMJul 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 

 கண்ணை பாதிக்கும் விண்வெளி

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி வீரர்கள், பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்.,) சென்று தங்கி ஆய்வு செய்து பூமிக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் புவிஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஐந்து மாதத்துக்கு மேல் தங்குபவர்களுக்கு வாசிக்க சிரமப்படும் அளவுக்கு கண் பாதிப்பு அபாயம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவித்துள்ளது. நீண்டகாலம் தங்கி பூமி திரும்பிய விண்வெளி வீரர்களில், 70 சதவீதம் பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

 தகவல் சுரங்கம்

 

 நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்பு

உலகில் ஆண்டுதோறும் 2.36 லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் உயிரிழப்பில் 'டாப் - 10' காரணங்களில் நீரில் மூழ்கி இறப்பதும் ஒன்று. நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் ஆறு, ஏரி, கிணறு, வீடுகளில் உள்ள நீர் பிடிப்பு தொட்டிகள் போன்றவற்றில் தான் 90 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன. நீச்சல், நீர் பாதுகாப்பு, நீர்நிலைகளில் இருந்து மீட்கும் பணி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கப்பல், படகுகளில் செல்லும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

  

Dhivisha dhivi

unread,
Jul 25, 2025, 8:20:47 PMJul 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 
 அச்சுறுத்தும் 'நானோ' பிளாஸ்டிக்

வடக்கு அட்லாண்டிக் கடலில் 2.7 கோடி டன் 'நானோ' பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடல் உணவுச்சங்கிலியை பாதித்து கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் திறன் கொண்டது. மேலும் மனித உடல் உறுப்புக்குள் ஊடுருவும் ஆபத்து மிக்கது என ராயல் நெதர்லாந்து கடல் ஆராய்ச்சி நிறுவனம், யுட்ரெட்ச் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு மைக்ரோமீட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் துகள், நானோ துகள் எனப்படுகிறது. இதை கண்ணால் பார்க்க முடியாது. பெரிய பிளாஸ்டிக் உடைவதில் இருந்து இந்த நானோ பிளாஸ்டிக் துகள் உருவாகிறது.


 தகவல் சுரங்கம்

 கார்கில் வெற்றி தினம்

இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கார்கிலில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் இருக்கும். 1999 ஏப்ரலில் பாக்., ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 'ஆப்பரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி கண்டது.



 
 

Dhivisha dhivi

unread,
Jul 26, 2025, 8:46:16 PMJul 26
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 மின்னல் ஏற்படுவது எப்படி

மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. மின்னலில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தளவு வெப்பம் கொண்ட மின்னல், மரத்தின் மீது பாயும் போது, மரத்தின் உட்பகுதியில் உள்ள நீர் முதலான பொருட்கள் ஆவியாகி விரிவடைந்து வெடிப்பது போன்ற வினை ஏற்படும். மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
 தகவல் சுரங்கம்

 


கலாம் நினைவு தினம்

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் 2015 ஜூலை 27ல் மறைந்தார். உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார். 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தார். ராக்கெட், ஏவுகணைகளை உருவாக்கினார். அணு ஆயுத நாடாக மாற்றுவதற்கு பாடுபட்டார். நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். தன் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

Dhivisha dhivi

unread,
Jul 27, 2025, 8:52:01 PMJul 27
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

செவ்வாயில் ஹெலிகாப்டர்

எதிர்காலத்தில் செவ்வாய் கோளில் மனிதர்கள் தரையிறங்குவது சாத்தியம். இதற்காக பல நாடுகளும் திட்டங்களை செயல்படுத்துகின்றன. 2011ல் பெர்சிவ்ரன்ஸ் விண்கலத்தில் அனுப்பிய இன்ஜுனிட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க வைத்து 'நாசா' சாதனை படைத்தது. இந்நிலையில் செவ்வாயில் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவின் 'ஏரோவிரான்மென்ட்' நிறுவனம், நாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது எதிர்காலத்தில் மனிதர்கள் தரையிறங்க உதவும் என தெரிவித்துள்ளனர்.



  தகவல் சுரங்கம்

 




உலக ஹெபடைடிஸ் தினம்

ஹெபடைடிஸ் (கல்லீரல் அலற்சி) 'பி', 'சி' வைரசால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் வலி, பசியின்மை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறுதல், கண் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறி. 'ஹெபடைடிஸ் பி' வைரசை கண்டறிந்து, அதற்கு தடுப்பூசியும் கண்டுபிடித்தார் அமெரிக்க விஞ்ஞானி பரூச் பிளம்பர்க். இதற்காக நோபல் பரிசும் பெற்றார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினமான ஜூலை 28ல் உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

Dhivisha dhivi

unread,
Jul 28, 2025, 8:58:23 PMJul 28
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 மரங்களை அழிக்கும் மின்னல்

உலகில் மின்னல், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் அழிகின்றன. இது 8 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவுக்கு சமம். இதில் மின்னலால் ஏற்பட்ட காட்டுத்தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. கனடா, அமெரிக்கா, ரஷ்யாவில் பாதிப்பு அதிகம் என ஜெர்மனியின் முனீச் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மின்னல் சில வினாடி நிகழும் வானியல் நிகழ்வு. ஆனால் காடுகளில் இது கண்ணுக்கு தெரியாத வேட்டையாடும் விலங்கை போல உள்ளது. மின்னலால் மரங்களின் உள்பகுதியும் சேதமடைந்து நாளடைவில் அழிகிறது.

தகவல் சுரங்கம்

 இயற்கையை பாதுகாக்கும் புலிகள்

அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, சீனா, தைவான், லாவோஸ், ரஷ்யா என 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது, காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. உலகில் வாழும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன

 

Dhivisha dhivi

unread,
Jul 31, 2025, 9:09:55 PMJul 31
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம்


அடுத்து இரண்டு கிரகணம்

இந்தாண்டு (2025) தலா இரண்டு சந்திர, சூரிய என மொத்தம் நான்கு கிரகண நிகழ்வுகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 14ல் முழு சந்திர கிரகணம், மார்ச் 29ல் பகுதி சூரிய கிரகணம் என இரண்டு நிகழ்வுகள் முடிந்து விட்டன. அடுத்ததாக வரும் செப். 7ல் முழு சந்திர கிரகணம், செப். 21ல் பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சூரிய கிரகணம், அமாவாசை தினத்திலும், சந்திர கிரகணம் பவுர்ணமியிலும் நிகழும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி, நிலவு வரும்போது நடுவில் உள்ள நிலவு சூரிய ஒளியை மறைத்தால் சூரிய கிரகணம். பூமி நடுவே வந்து சூரிய ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம்.

 
 
 தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம், நுரையீரல் புற்றுநோய் தினம்




குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஐ.நா., சார்பில் உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது.

'பேப்பர் டெல்ஸ்' எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை புனேயில் 1940 ஆக. 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆக. 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுப்பது, சிகிச்சை முறை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக. 1ல் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


W




 

Dhivisha dhivi

unread,
Aug 1, 2025, 8:23:51 PMAug 1
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 



அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்

உடலில் நச்சுக்களை நீக்குதல், சீரான ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கல்லீரலின் பணி. இந்நிலையில் உலகில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை, தற்போதைய நிலையில் நீடித்தால் 2050ல் இரட்டிப்பாகும் என 'தி லான்செட்' ஆய்வு எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் 9 லட்சம் - 15 லட்சம் பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் எண்ணிக்கையில், 60 சதவீதம் தடுக்க முடியும். கல்லீரல் பாதிப்புக்கு 21% மது அருந்துதல் காரணமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் சுரங்கம்

 \




மிதக்கும் நகரம்

இத்தாலி தலைநகர் வெனிஸ், 'மிதக்கும் நகரம்' என அழைக்கப்படுகிறது. இங்கு 118 சிறிய தீவுகள் உள்ளன. இதற்கிடையே 177 கால்வாய் ஓடுகின்றன. இதை கடந்து செல்ல 438 சிறிய பாலங்கள் உள்ளன. படகு தான் பிரதான போக்குவரத்து. மக்கள்தொகை 2.50 லட்சம். பரப்பளவு 414.57 சதுர கி.மீ. கேரளாவின் ஆலப்புழா 'கிழக்கின் வெனிஸ்' என அழைக்கப்படுகிறது. ஆலப்புழாவிலும் படகு போக்குவரத்து அதிகம். கடற்கரையை ஒட்டிய இந்நகரில் கால்வாய், காயல், பீச் உள்ளன. படகு வீடுகள் பயணிகளை ஈர்க்கிறது. ஆண்டுதோறும் படகு போட்டி நடக்கிறது. கலங்கரை விளக்கமும் உள்ளது.


  

Dhivisha dhivi

unread,
Aug 3, 2025, 7:46:45 AMAug 3
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 

நீண்டதுார மின்னல்

மின்னல் என்பது மழை மேகங்களுக்குள் அல்லது மேகத்திற்கும் தரைக்கும் இடையே ஏற்படும் ஒரு மின்சார வெளியேற்றம். இது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்நிலையில் உலக வரலாற்றில் நீண்டதுார மின்னல் நிகழ்வை செயற்கைக்கோள் படங்கள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2017ல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உருவாகிய மின்னல், அங்கிருந்து 828 கி.மீ., துாரமுள்ள கன்சாஸ் வரை பதிவாகியது. இதற்கு முன் உலகில் பதிவான நீண்டதுார மின்னல் 767 கி.மீ., இதுவும் அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






 தகவல் சுரங்கம்

 



உலகின் முதல் தேசியப்பூங்கா

அமெரிக்காவின் மொன்டானா, இடாகோ மாகாணங்களில் அமைந்துள்ளது 'எல்லோஸ்டோன் தேசியப்பூங்கா'. இது அந்நாட்டின் முதல் தேசியப்பூங்கா. உலகின் முதல் தேசியப்பூங்காவும் இதுதான். பரப்பளவு 2200 ஏக்கர். இப்பூங்கா ஏரி, ஆறு, பள்ளத்தாக்கு, மலைகளை உள்ளடக்கி உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 2219 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பாலுாட்டிகள், பறவைகள், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இது 1978ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.

Dhivisha dhivi

unread,
Aug 3, 2025, 8:47:18 PMAug 3
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 


நிலத்தடி நீரின் சிறப்பு

பூமிக்கு கீழ்தான் என்றாலும் ஒவ்வொரு இடத்துக்கும் நிலத்தடி நீரின் தன்மை மாறுகிறது. குறிப்பிட்ட இடத்தில் ஆழ் துளை போர்வெல், கிணற்றில் இருந்து நிலத்தடி நீரை எடுக்கும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரையே எடுக்கிறோம். மண்ணில் எளிதில் கரையக் கூடிய பொருள்கள் எல்லாம் கரைந்து அந்தத் தண்ணீர் கலவையாகவே இருக்கும். அந்தத் தாதுப் பொருள்கள் தான் நீருக்குச் சுவையைத் தருகின்றன. உலகில் எல்லா இடங்களிலும் மண் அமைப்பு ஒரேவிதமாக இல்லை. எனவே தாதுப் பொருள்களுக்கு ஏற்ப அதன் சுவை மாறும்.




 தகவல் சுரங்கம்

பெரிய செயற்கை ஏரி

உலகில் பரப்பளவு அடிப்படையில் பெரியது சுப்பீரியர் ஏரி. இதன் பரப்பளவு 82,100 சதுர கி.மீ., இது அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ளது. பரப்பளவில் உலகின் செயற்கையான பெரிய ஏரி 'வோல்டா'. இது மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8502 சதுர கி.மீ. 'வோல்டா' நதியில் இருந்து இதற்கு நீர்வரத்து கிடைக்கிறது. இதன் சராசரி ஆழம் 61 அடி. 1915ல் அகோசோம்பா அணையால் இந்த ஏரி மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இந்த அணை பகுதியில் அனல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 912 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 



R
 

Dhivisha dhivi

unread,
Aug 5, 2025, 8:40:02 PMAug 5
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 'ராக்கெட்' செயல்படும் விதம்

விண்வெளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த ராக்கெட் பயன்படுகிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதிதான், ராக்கெட் தத்துவத்தின் அடிப்படை. எனவே ராக்கெட் கொதிகலனில் எரிபொருள் எரிந்து அதன் நாசி எனும் வெளிப்போக்குக் குழாய் வழி வெளியேறும்போது அதற்கு எதிர்திசையில் ராக்கெட் மீது உந்தம் ஏற்பட்டு எழும்பி செல்கிறது. இது நேராக மேல்நோக்கிச் செலுத்துவது போல தோன்றும். ஆனால் வளைவான பாதையில் செலுத்தினால்தான் செயற்கை கோளை பூமியை சுற்றும்படி நிலைநிறுத்த முடியும்.

 
 தகவல் சுரங்கம்

 



ஹிரோஷிமா தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது 1945 ஆக., 6ல், அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'போயிங் பி-29 சூப்பர்போர்ட்ரெஸ்' என்ற அமெரிக்க போர் விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 1.5 சதுர கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆக., 9ல் நாகசாகி நகரம் மீது அடுத்த அணுகுண்டை வீசியது.


 
 
 

Dhivisha dhivi

unread,
Aug 6, 2025, 9:09:34 PMAug 6
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம்

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்

உலகில் ஆண்டுக்கு 46 கோடி டன் பிளாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது. இதில் 35 கோடி டன் பயன்படுத்தப்பட்டு குப்பையாக நிலம், ஆகாயம், நீர்நிலைகளில் சேர்கிறது. இது 2060ல் மூன்று மடங்காக அதிகரிக்கும். இவை மக்குவதில்லை என்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதை எப்படி மேலாண்மை செய்வது, பயன்பாட்டை குறைப்பது, மறுசுழற்சி பற்றி விவாதிக்க 170 நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் ஆக. 5 - 14ல் ஜெனிவாவில் நடக்கிறது. உலகில் கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டில் பிளாஸ்டிக்கின் பங்கு 3.4 சதவீதமாக உள்ளது.

 
தகவல் சுரங்கம்

 

 

தேசிய கைத்தறி தினம்

சுதந்திர போராட்ட காலத்தில் 1905 ஆக. 7ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது. இதை நினைவுப்படுத்தும் விதமாக ஆக. 7ல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாக கைத்தறி திகழ்கிறது. இது கிராமம், சிறு நகரப் பகுதிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெசவு தொழிலில் 70 சதவீதம் பேர் பெண்கள். இயற்கையை மையமாக கொண்ட இத்துறை உற்பத்தி நடைமுறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

Dhivisha dhivi

unread,
Aug 7, 2025, 9:17:35 PMAug 7
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 


 ிபத்துக்கள்


சூரியனின் வெப்பநிலை

சூரியன் 450 கோடி ஆண்டுகள் பழமையானது. இதன் விட்டம் 14 லட்சம் சதுர கி.மீ., துாரம் உடையது. இது ஹைட்ரஜன், ஹீலியத்தால் ஆன ஒளிரும் நட்சத்திரம். பூமியில் இருந்து 15 கோடி கி.மீ., தொலைவில் உள்ளது. சூரிய ஒளி இல்லாமல் பூமியில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை. இது பூமியை விட 100 மடங்கும், பெரிய கோளான வியாழனை விட 10 மடங்கும் அகலமானது. எட்டு கோள்கள், விண்கல், வால்நட்சத்திரம் உள்ளிட்டவை சூரியனையே சுற்றி வருகின்றன. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியஸ். சூரியனுக்கு பூமியை போல திடமான மேற்பரப்பு, நிலவு கிடையாது.

 
தகவல் சுரங்கம்

 


வெள்ளையனே வெளியேறு தினம்

மும்பையில் 1942 ஆக. 8ல் 'செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மகாத்மா காந்தி துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர். இனியும் இந்தியாவை ஆள முடியாது என்ற எச்சரிக்கையை இது ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தியது.


Dhivisha dhivi

unread,
Aug 8, 2025, 8:20:29 PMAug 8
to valluvanpaarvai, inaiathendral, brailleacl

அறிவியல் ஆயிரம்

 
 
னை 4.31 சதவிகிதம் சரிவு
பொது
ago-btn
கார்பனை குறைக்கும் இயந்திரம்

பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு உள்ளது. இதை குறைக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. கார்பன் வாயுவை உள்ளிழுக்கும் பெரிய இயந்திரம் 2024ல் ஐஸ்லாந்தில் நிறுவப்பட்டது. இது ஆண்டுக்கு 36 ஆயிரம் டன் கார்பனை ஈர்த்துள்ளது. இது பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தப்படுகிறது. இது 8000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இது நிரந்தர தீர்வல்ல எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன   தகவல் சுரங்கம்


சர்வதேச பழங்குடியினர் தினம்

பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆக., 9ல் சர்வதேச பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பழங்குடியினர் 6 சதவீதமாக உள்ளனர். 4000 மொழிகளை பேசுகின்றனர். இதில் 2016 ஐ.நா., கணக்கின் படி 2680 பழங்குடியின மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன. வேலைபார்க்கும் பழங்குடியின மக்களில் 47 சதவிகிதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 'பழங்குடியினர், செயற்கை நுண்ணறிவு : உரிமையை பாதுகாத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

 

Dhivisha dhivi

unread,
Aug 10, 2025, 10:53:18 PMAug 10
to brailleacl

அறிவியல் ஆயிரம்
ago-btn
கார்பனை குறைக்கும் இயந்திரம்

பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு உள்ளது. இதை குறைக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. கார்பன் வாயுவை உள்ளிழுக்கும் பெரிய இயந்திரம் 2024ல் ஐஸ்லாந்தில் நிறுவப்பட்டது. இது ஆண்டுக்கு 36 ஆயிரம் டன் கார்பனை ஈர்த்துள்ளது. இது பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தப்படுகிறது. இது 8000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இது நிரந்தர தீர்வல்ல எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்
 
 
 தகவல் சுரங்கம்



உலகின் ஏழு மலைகள்

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான மலைகள்/ சிகரங்கள் ஒன்றாக 'ஏழு மலைகள்' என அழைக்கப்படுகிறது. இப்பட்டியலில் எவரெஸ்ட் (29,032 அடி, ஆசியா), எல்பிரஸ் (18,510, ஐரோப்பா), பன்காக் ஜெயா (16,024, ஆஸ்திரேலியா), கோஸ்கியூஸ்கோ (7310, ஆஸ்திரேலியா), கிளிமஞ்சாரோ (19,341, ஆப்ரிக்கா), பிளான்க் (15,781, ஐரோப்பா), மெக்கின்லே (20,184, வட அமெரிக்கா), அக்கோன்காகுவா (22,838, தென் அமெரிக்கா), வின்சன் மாசிப் (16,050, அண்
 
 
 

 

 

Dhivisha dhivi

unread,
Aug 13, 2025, 9:05:23 PMAug 13
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 தொலைநோக்கியின் வரலாறு

இத்தாலி விஞ்ஞானி கலீலியோ. இவரது காலத்தில் கண்ணாடி உற்பத்தியாளர்கள், துாரத்தில் இருக்கும் பொருட்களைக் காண உட்குவிந்த ஆடிகளைத் தயாரித்தார்கள். இவற்றால் கவரப்பட்ட கலீலியோ தொடர்சியாக ஆராய்ச்சி செய்து, ஒரு நீண்ட உருளையை உருவாக்கி அதன் முன் பகுதியில் குவி ஆடி, பின் பகுதியில் குழி ஆடியை பொருத்தி தொலைநோக்கியை கண்டுபிடித்தார். இது நிலவு, சூரியன் உள்ளிட்ட கோள்களை பெரிதுபடுத்திக் காட்டின. 1609ல் வெனிஸ் நகரில் தன் தொலைநோக்கியின் செயல்பாட்டை உலகுக்கு விளக்கினார்.

தகவல் சுரங்கம்
 பிரிவினையின் நினைவு தினம்

இந்தியாவில் இருந்து 1947 ஆக.14ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இரு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆக.14ல் பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


 
 
 
S
 
 
 

Dhivisha dhivi

unread,
Aug 14, 2025, 9:19:11 PMAug 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


செவ்வாயில் பவளப்பாறை

செவ்வாய் கோளில் பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகளின் வடிவத்தில், செவ்வாயில் பாறை இருப்பதை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 'கியூரியாசிட்டி' ரோவர் 'கறுப்பு வெள்ளை'யில் படம் பிடித்துள்ளது. இதன் அகலம் 2.5 செ.மீ. இது நுாறு ஆண்டுகள் பழமையானது. செவ்வாயின் தரைப்பரப்பில் ஏதாவது ஒரு இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்ய 'கியூரியாசிட்டி' ரோவர் 2012ல் செவ்வாயில் தரையிறக்கப்பட்டது. இதுவரை 35 கி.மீ., பயணம் செய்து, பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்கிறது.


 
  தகவல் சுரங்கம்

பெரிய ரயில் நிலையம்

மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் உள்ளது ஹவுரா ரயில் நிலையம், இது நாட்டிலேயே பெரியது, பிசியானது. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இங்கு 1854 ஆக. 15ல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பரப்பளவு 70 ஏக்கர். தற்போது தினமும் 600 ரயில்கள் (நீண்டதுார, புறநகர் பயணிகள், சரக்கு ரயில் உட்பட), இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 24 பிளாட்பார்ம்கள் உள்ளன. இங்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தும் உள்ளது. இதனருகே 2006ல் ரயில் மியூசியம் திறக்கப்பட்டது.


 

Dhivisha dhivi

unread,
Aug 15, 2025, 8:22:04 PMAug 15
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

லித்தியத்தின் முக்கியத்துவம்

பேட்டரியில் இயங்கும் மின்னணு சாதனங்கள், வாகனங்கள் அதிகரித்துள்ளன. 'லித்தியம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அணு எண் 3. குறியீடு 'எல்.ஐ.,'. இது மென்மையான, வெள்ளி போன்ற தோற்றம் கொண்டது. சாதாரண நிலையில் எடை குறைந்ததாக இருக்கும். இதை 1817ல் சுவிட்சர்லாந்து விஞ்ஞானி ஜோஹன் ஆர்ப்வெட்சன் கண்டுபிடித்தார். அலைபேசி, லேப்டாப், எலக்ட்ரிக் பைக், கார்களில் 'லித்தியம் அயன் பேட்டரி' பயன்படுத்தப்படுகிறது. விமான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.

 
 தகவல் சுரங்கம்

 
 


இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஆக. 21ல் முடிகிறது. தேர்தல் செப். 9ல் நடக்கவுள்ளது. லோக்சபா, ராஜ்யசபா (நியமன எம்.பி., உட்பட) எம்.பி.,க்கள் ஓட்டளித்து தேர்வு செய்கின்றனர். இதில் போட்டியிடுபவர் இந்திய குடிமகன், 35 வயது பூர்த்தியாகி இருத்தல், ராஜ்யசபா எம்.பி.,க்கான தகுதி உள்ளிட்டவற்றை பெற்றிருக்க வேண்டும். அரசு பதவிகள், பணியாளர்கள் போட்டியிட முடியாது. வேட்பாளர் டெபாசிட் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் ஓட்டளிக்க முடியாது. துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டு.

Dhivisha dhivi

unread,
Aug 17, 2025, 11:39:46 AMAug 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 சென்னை

கல்லீரலை பாதுகாப்போம்

தோல்களுக்கு அடுத்து மனித உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு 'கல்லீரல்'. உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானம், ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது உள்ளிட்டவை இதன் பணி. அதிகரிக்கும் மது, ஜங்க், இனிப்பு உணவு, உடலுழைப்பின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவையால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகின்றன. இவை கல்லீரல், இதயம், நுரையீரல், கிட்னி, புற்றுநோயை உருவாக்குகிறது. இதை தடுக்க உடற்பயிற்சி, சரிவிகித உணவு அடங்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்


உலகின் பெரிய 'டெல்டா'

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தவாறு, கங்கை டெல்டாவை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி டான் பெட்டிட் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். உலகில் பெரியது கங்கை டெல்டா. இது இந்தியாவின் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் பரவியுள்ளது. பொதுவாக 'ஆற்று டெல்டா' என்பது ஆறு, கடலில் சேரும் சமவெளி பகுதி. 'டெல்டா' என்ற கிரேக்க வார்த்தைக்கு 'முக்கோணம்' என பொருள். முதலில் 'டெல்டா' வார்த்தை, முக்கோண வடிவம் கொண்ட நைல் ஆற்று சமவெளியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து ஆற்று டெல்டாவும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.


Dhivisha dhivi

unread,
Aug 17, 2025, 10:35:01 PMAug 17
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


இலைக்கு நிறம் வந்தது எப்படி

இலைகளின் நிறத்துக்கு காரணம் அதன் நிறமிகள். பெரும்பாலான தாவர இலைகள், பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இதற்கு காரணம் இலையில் உள்ள 'குளோரோபில்'. இது பல்வேறு நிறங்கள் கொண்ட சூரிய ஒளியை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை செய்து தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இவை பச்சையை தவிர மற்ற நிறங்களை ஈர்த்து விடுகிறது. கருமை நிறம் எனில் அனைத்து நிறத்தையும் ஈர்த்துவிடுகிறது என பொருள். அதே போல வெண்மை நிறத்தில் பிரகாசிக்கிறது எனில், அங்கு எந்த நிறத்தையும் உறிஞ்சவில்லை என பொருள்.

   தகவல் சுரங்கம்
 உலக வர்த்தக அமைப்பு

 
உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகம் நடைபெற ஒழுங்குமுறை, வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக வர்த்தக அமைப்பு 1995 ஜன. 1ல் தொடங்கப்பட்டது. 630 பேர் பணியாற்றுகின்றனர். தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா. இதில் இந்தியா உட்பட 166 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இது உலகின் பெரிய சர்வதேச பொருளாதார அமைப்பு. இயக்குநர் ஜெனரல் தலைமையில் செயல்படுகிறது. உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தக கட்டணம் உள்ளிட்ட வணிக பிரச்னைகளுக்கு, ஒப்பந்தம் அடிப்படையில் இந்த அமைப்பு தீர்வு காண வழிவகுக்கிறது.

Dhivisha dhivi

unread,
Aug 19, 2025, 8:49:33 PMAug 19
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 
 
 
 கொரோனாவை விட பெரிய வைரஸ்

பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவு அருகே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரோனாவை விட பெரிய வைரசை கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் 'பெல்வி - 1'. கடலின் மேற்பரப்பில் இருந்து 85 அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். இதில் 'பிளாங்டன்' எனும் கடலில் மிதக்கும் நுண்ணிய உயிரினங்களில் இவை பாதிப்பை ஏற்படுத்து வதையும், மேலும் இதன் வாலின் நீளம் 2.3 மைக்ரோமீட்டர் இருப்பதையும் கண்டறிந்தனர். இது கொரோனா வைரசை விட 19 மடங்கு பெரியது. இதன் அகலம் 200 நானோமீட்டர். இது 467 மரபணுக்களை கொண்டுள்ளது.

 தகவல் சுரங்கம்

 
 கொசு ஒழிப்பு தினம்

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். 'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணி 'அனாபெலஸ்' பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இந்நாள் 'உலக கொசு ஒழிப்பு தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. இவரது இந்த கண்டுபிடிப்புக்காக 1902ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Dhivisha dhivi

unread,
Aug 20, 2025, 9:14:11 PMAug 20
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 
பூமியை தாக்குமா விண்கல்

'99942 அபோபிஸ்' விண்கல் 2029 ஏப். 13ல் பூமிக்கு அருகில் (32,000 கி.மீ., துாரம்) கடந்து செல்ல உள்ளது. இதன் விட்டம் 1115 அடி. இது 2004 ஜூன் 19ல் கண்டறியப்பட்டது. இது பூமியை தாக்குவதற்கு 3% வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த விண்கல் பூமியின் நிலப்பகுதியில் விழுந்தால் 5 கி.மீ.,சுற்றளவுக்கு பள்ளம், நிலநடுக்கம் ஏற்படும். அதேநேரம் கடலில் விழுந்தால் 1312 அடி உயரத்துக்கு சுனாமி அலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஒருவேளை நிலம், கடலில் இல்லாமல் வளிமண்டத்தில் வெடித்து சிதறினால் மேக வெடிப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தகவல் சுரங்கம்





பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு

உள்நாடு, சர்வதேசம் என பயங்கரவாதம் எங்கு, எந்த வடிவில் வந்தாலும் ஆபத்தானது. பயங்கரவாதத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகின்றனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஐ.நா., சார்பில் ஆக. 21ல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வெறுப்புணர்வை மறந்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் எனஇத்தினம் வலியுறுத்துகிறது.


  

Dhivisha dhivi

unread,
Aug 21, 2025, 8:49:00 PMAug 21
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 

குறையும் புதனின் ஆரம்

சூரிய குடும்பத்தில் சிறிய கோள் புதன். சூரியனில் இருந்து 5.8 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. 4.5 லட்சம் கோடி ஆண்டுக்கு முன் உருவானது. 88 நாளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகிறது. வேகம் விநாடிக்கு 47 கி.மீ. அதிகபட்ச வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி. இதன் ஆரம் 2440 கி.மீ. இதற்கு நிலவுகள், வளையங்கள் இல்லை. இந்நிலையில் புதனின் உள்பகுதியில் (கோர்) மற்ற கோள்களை விட, குளிர் அதிகரித்து வருவதால் அதன் ஆரம் துாரம் குறைந்து வருகிறது. இதுவரை தோராயமாக 11 கி.மீ., துாரம் குறைந்துள்ளது.

 
  தகவல் சுரங்கம்

கங்கையின் துணை நதி

கங்கை ஆற்றின் துணை நதிகளில் ஒன்று யமுனை. இது உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 14,800 அடி உயர யமுனோத்ரி சிகரத்தில் இருந்து உற்பத்தியாகிறது. உத்தராகண்ட், ஹரியானா, டில்லி, உபி.,யில் 1376 கி.மீ., துாரம் பாய்ந்து 'கும்பமேளா' நடக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் கங்கை ஆற்றுடன் இணைகிறது. 5.7 கோடி பேர் இந்த ஆற்றை நம்பி உள்ளனர். டில்லியின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆக்ராவில் இந்த நதிக்கரையில் தான் 'தாஜ்மஹால்' அமைந்துள்ளது. இதற்கு பல துணை நதிகள் உள்ளன.


 
 
 

Dhivisha dhivi

unread,
Aug 22, 2025, 8:19:01 PMAug 22
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

யுரேனஸ்க்கு புதிய நிலவு

சூரிய குடும்பத்தில் ஏழாவது கோள் யுரேனஸ். இது பூமியில் இருந்து 260 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 29 நிலவுகள் உள்ளன. இந்நிலையில் யுரேனஸ் கோளில் புதிய நிலவை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இது சிறிய நிலவாக உள்ளது. இதன் அகலம் 10 கி.மீ., இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது யுரேனஸின் மையப்பகுதியில் இருந்து 56 ஆயிரம் கி.மீ., துாரத்தில் உள்ளது. மற்ற எந்த கோளுக்கும் இதுபோன்ற சிறிய நிலவுகள் இல்லை.

தகவல் சுரங்கம்

 


தேசிய விண்வெளி தினம்

இந்தியாவின் 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர், 2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியது. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின் நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் (ஆக.23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி 2023ல் அறிவித்தார்.

 
 
 
 

Dhivisha dhivi

unread,
Aug 23, 2025, 9:03:51 PMAug 23
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்
 ்

உருகும் பனி; உயரும் கடல்

முழுவதும் பனியால் சூழப்பட்டது அண்டார்டிகா. இதனால் உயிரினங்கள் வாழ முடியாது. பூமியின் மொத்த நன்னீரில் 70 சதவீதம் இதன் பனிப்பாறையில் உள்ளது. இவை முழுவதும் உருகினால் கடல்நீர்மட்டம் 183 அடி உயரும். இந்நிலையில் மேற்கு அண்டார்டிகா பனிப்படலம் ஒரு பேரழிவின் விளிம்பில் உள்ளது. இது உலக கடல்நீர்மட்டத்தை 9.8 அடி உயர்த்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது தவிர உருகும் நீர் உலகின் கடல் சுழற்சியைக் குறைக்கும், காற்று மண்டலங்களை மாற்றி தெற்கு அரைக்கோளத்தின் காலநிலையைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


 

Dhivisha dhivi

unread,
Aug 24, 2025, 8:59:30 PMAug 24
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்


அரிதாகும் வானவில்...

மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில் தோன்றுகிறது. இந்தியாவில் வானவில் நிகழ்வு குறையலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் சராசரியாக ஆண்டுக்கு 117 நாட்கள் வானவில் பார்க்கும் சூழல் உள்ளது. இது 2100ல் 5% அதிகரிக்கலாம். உலகில் 21 - 34% பகுதிகள் வானவில் நாட்களை இழக்கலாம். மாறாக 66 - 79% பகுதிகளில் அதிகரிக்கலாம். இவை இமயமலை, ஆர்க்டிக் உள்ளிட்ட மக்கள்தொகை குறைந்த குளிர், மலை பிரதேச பகுதிகள். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் வானவில் நாட்கள் குறையலாம்.

 
  தகவல் சுரங்கம்


சிரிக்கும் பறவை

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வாழ்கிறது 'கூகாபாரா' பறவை. இதன் ஆண், பெண் இனம் ஒரே மாதிரி இருக்கும். இதன் நீளம் 41 - 47 செ.மீ. உயரம் 43 செ.மீ., வெள்ளை, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் இவை காடுகளில் வாழும். புழு, பூச்சிகளோடு, கொடிய விஷமுள்ள பாம்புகளையும் உண்ணும். அதிகாலை, மாலையில் சூரிய மறைவுக்குப் பின் இவை ஒலி எழுப்பும். இவ்வொலி மனிதர்கள் சிரிப்பது போல் இருக்கும் என்பதால் இவை 'சிரிக்கும் கூகாபாரா' என அழைக்கப்படுகிறது. ஆண் பறவையின் சராசரி எடை 307 கிராம், பெண் பறவையின் சராசரி எடை 352 கிராம்.

 

 

Dhivisha dhivi

unread,
Aug 25, 2025, 9:12:40 PMAug 25
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்

 பூமியை தாக்குமா மர்மப்பொருள்

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் தட்டுக்கள், அடையாளம் அறிய முடியாத மர்ம வான்பொருட்கள் உள்ளிட்ட செய்திகள் ஏலியன்கள் பற்றிய ஆவலை ஏற்படுத்தும். இருப்பினும் அறிவியல் ரீதியாக ஏலியன்கள் இருப்பது நிரூபிக்கப்படவில்லை.
 நிலையில் 2025 நவம்பரில் விண்ணில் இருந்து மர்ம பொருள் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது. இது ஏலியன்களின் விண்கலமாக இருக்கலாம். அகலம் 10 - 20 கி.மீ., இதன் வேகம் விநாடிக்கு 60 கி.மீ. இதன் பெயர் '3ஐ/அட்லஸ்' என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 தகவல் சுரங்கம்

உலக நாய்கள் தினம்

வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும். இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க

வலியுறுத்தி ஆக.26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன.

தற்போது வெளிநாட்டு வகை நாய்களும் வளர்க்கப்படுகிறது. நாய் வளர்ப்பவர்கள், அதற்கு தடுப்பூசி உள்பட முறையாக பராமரிப்பது அவசியம்.
It is loading more messages.
0 new messages