aஅறிவியல் ஆயிரம் : புதிய கண்டம்
புதிய கண்டம்
உலகில் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என ஏழு கண்டங்கள் உள்ளன. இந்நிலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், கிரீன்லாந்து - கனடா இடையே சிறிய கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது 19 - 24 கி.மீ., தடிமன் கொண்டது. இது 650 கி.மீ., அகலம் கொண்டது. உலகின் நிலப்பரப்புகள் நிலையானது போல தோன்றலாம். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. தற்போதைய கடல் பகுதி மறைந்து, புவி தட்டுகள் இணைந்து புதிய கண்டங்கள் உருவாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தகவல் சுரங்கம்: உலக வடிவமைப்பு தினம்
உலக வடிவமைப்பு தினம்
தினசரி வாழ்க்கையில் வடிவமைப்புகள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது நம் வாழ்க்கையை மிக அழகாக மாற்றுகிறது. ஓவியம், ஆடைகள், வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், நாற்காலி என ஒவ்வொரு பொருளுக்கும் வடிவமைப்பு முக்கியம். இதில் பல வகைகள் உள்ளன. உலக வடிவமைப்பு கவுன்சில் 1963 ஏப். 27ல் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஏப். 27ல் உலக வடிவமைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வடிவமைப்புகளின் பயன்கள், வடிவமைப்பாளர்களின் பங்களிப்பை கவுரவிப்பதே இதன் நோக்கம்.