அறிவியல் ஆயிரம்:
செவ்வாயில் நீர் அமைப்பு
இந்தியாவின் கங்கை நதியை போல, கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் செவ்வாய் கோளில் பெரிய நதி அமைப்பு இருந்ததாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் தரைப்பரப்பில் பள்ளத்தாக்கு, நீரோடை, ஏரி, வண்டல் படிவு உள்ளிட்ட 16 முக்கிய அமைப்புகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது என கண்டறிந்தனர். இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
* மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி கிடைக்க ஒருங்கிணைந்த சுகாதார வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 12ல் உலக சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதிகரிக்கும் மருத்துவ செலவுகளால் உலகில் 150 கோடி பேர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
* உலகில் நாடுகளுக்கு இடையே அமைதி, நல்லுறவைப் பேணுவதில் நடுநிலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் உலக நடுநிலைமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.