அறிவியல் ஆயிரம் : நன்னீர் எங்கு அதிகம்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 7, 2026, 9:05:31 PM (3 days ago) Jun 7
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : நன்னீர் எங்கு அதிகம்
 



நன்னீர் எங்கு அதிகம்

பூமியின் மூன்றில் இரண்டு பங்கு (68 சதவீதம்) நன்னீர், ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதை மனிதர்களால் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது என ஆய்வு தெரிவித்துள்ளது. இவை அண்டார்டிகா, கிரீன்லாந்து பனிப்படலத்துக்கு கீழே, உறைந்த நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் தடிமன் கி.மீ., அளவில் இருக்கும். 1.40 கோடி சதுர கி.மீ., பரப்பளவில், 3 கோடி கன கி.மீ., பனிக்கட்டி உள்ளது. அப்படியிருந்தும் இது உலகில் இன்று குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளது.
 தகவல் சுரங்கம் : பெருங்கடல், மூளைக் கட்டி தினம்

* பூமியில் 70 சதவீதம் கடல் தான் உள்ளது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக் கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக் கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages