Mohan
unread,Jun 23, 2026, 8:49:17 PM (8 days ago) Jun 23Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl
அறிவியல் ஆயிரம் : 'ஷாக்' அடிக்கும் மீன்
'எலெக்ட்ரிக் ஈல்' எனும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட,
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும். இதற்கு
'மின் விலாங்கு' மீன் என பெயர். எடை 20 கிலோ. நீந்தும் வேகம் மணிக்கு 8
கி.மீ., வாழ்நாள் 22 ஆண்டுகள். நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும். உடலின்
மேற்புறம் கறும் சாம்பல், அடி வயிற்றுப் பகுதி மஞ்சள், வெள்ளை நிறத்தில்
காணப்படும். நன்னீர்வாழ் மீனான இது, சேற்றுக்கு அடியிலேயே வாழும். இதன்
உடம்பில் 650 வோல்ட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. உடலிலுள்ள
'எலெக்ட்ரோசைட்ஸ்' இதை உருவாக்குகிறது.
தகவல் சுரங்கம் : உலக பெண் அதிகாரிகள் தினம்
பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா.,
'தலைமையில் சமத்துவம், முன்னேற்றம் மற்றும் அமைதியை நாடுதல்' என்பது
சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். 193 ஐ.நா.,
அதிபர், பிரதமர், அமைச்சர், எம்.பி., துாதர், சிவில் சர்வீஸ் என அரசின்
உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி
ஐ.நா., சார்பில் ஜூன் 24ல் சர்வதேச பெண் அதிகாரிகள் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. 'தலைமையில் சமத்துவம், முன்னேற்றம் மற்றும் அமைதியை
நாடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உயர் பதவிகளில் பெண்கள்
இருக்கும்போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற
சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். 193 ஐ.நா., உறுப்பு நாடுகளில் 28 நாடுகளில்
தான் பெண்கள், தலைவர்களாக உள்ளனர்.
Facebook share
Twitter share
W