அறிவியல் ஆயிரம்: சேவல் கூவுவது ஏன்
அதிகாலை நேரத்தை குறிப்பிடும் விதமாக தான், சேவல் கூவுகிறது என்பது தவறானது. சேவலின் உடலில் இயல்பாக இருக்கும் 'உயிர்க் கடிகாரம்' தான், புறச்சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கூவச் செய்கிறது. அதற்கு பகல், இரவு என்ற நேரமில்லை. இரவு முழுவதும் வெளிச்சத்தில் வைத்திருந்தாலும், அதற்குரிய நேரத்தில் அது கூவுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தன் எல்லையை குறிப்பிட, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சேவல் கூவுகிறது. சேவல் கூவும் ஒலி அளவு 100 -140 டெசிபல் இருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.