அறிவியல் ஆயிரம் : சிறிய பேட்டரி
சிறிய பேட்டரி
சீனாவின் 'பீட்டாவோல்ட்' நிறுவனம் ரீசார்ஜ் தேவையில்லாத 'பிவி100' என்ற பேட்டரியை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது நாணயத்தை விட சிறியது. 'நிக்கல்-63' எனும் கதிரியக்க ஐசோடோப்பிலிருந்து இதற்கான எரிசக்தியை பெறுகிறது, இது மெதுவாக சிதைவடையும் போது ஆற்றல் வெளிப்படுகிறது. இது ரீசார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் செயல்படும். பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. இதை பாதுகாப்பு கண்காணிப்புக்கான 'டிரோன்கள்', நிலவு ஆராய்ச்சி தொடர்பான விண்வெளி திட்டங்களில் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : உலக சூரை மீன் தினம்
உலக சூரை மீன் தினம்
கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சம் (20 சதவீதம்) சூரை மீன் எனும் 'டுனா' மீன்கள் தான். மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் நீந்தும். இது 11 ஆயிரம் கி.மீ., துாரம் இடம் பெயர்கிறது. உலகில் விற்பனை செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8 சதவீதம் இதுதான் இடம் பெறுகிறது. இந்த மீனில் ஒமேகா-3, மினரல்ஸ், புரோட்டின், வைட்டமின் பி12 உள்ளன. உணவு, பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி என முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரை மீனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 2ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.