அறிவியல் ஆயிரம் : மாலை நேர பொழுது...
PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM
மாலை நேர பொழுது...
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், மதிய நேரத்தில் செங்குத்தாகவும் விழுகின்றன. பூமியில் செங்குத்தாக விழும் சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத்தருகின்றன. அதனால் மதிய நேரத்தில் வெப்பம் அதிமாகவும், காலை,மாலை நேரங்களில் குறைவாகவும் உள்ளது. அதே போல சூரிய உதயமாகும் காலை, மறையும் மாலை நேரத்தில் அதிக வளிமண்டலம் இருக்கும். ஆனால் மதிய நேரத்தில் வளிமண்டலத்தில் ஒரு அடுக்கு தான் இருக்கும். இதனால் காலை, மாலை நேரத்தில் வெப்பம் குறைவாகவும், மதியம் அதிகமாகவும் இருக்கும்.
தகவல் சுரங்கம் : விண்வெளி பயணம்
PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM
விண்வெளி வளர்ச்சியின் துவக்கமாக 1957 அக்.4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' விண்ணில் செலுத்தப்பட்டது. உலகில் 1961 ஏப்.12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின். இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தியும் ஏப்.12ல் மனிதர்களின்விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நிலவு, செவ்வாய் கோள்களில்மனிதன் வசிப்பதற்கான சூழல் பற்றி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு விண்வெளி வளர்ச்சி பெற்றுள்ளது.