அறிவியல் ஆயிரம் : பாட்டிலில் ஒட்டாத பசை
அறிவியல் ஆயிரம் : வண்ணங்களில் வானம்
பாட்டிலில் ஒட்டாத பசை
காகிதம், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் என ஒவ்வொரு பொருளையும் ஒட்டுவதற்கு, வெவ்வேறு விதமான பசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் ஒட்டும் பசை, அதன் பாட்டிலில் மட்டும் ஓட்டுவதில்லை. இதற்கு காரணம் காற்று. எதையாவது ஒட்டுவதற்குப் பசையைப் பயன்படுத்தும் போது அது எளிதில் காய்ந்து, இறுக்கமாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பசை இறுக வேண்டுமானால் காற்று பட வேண்டும். பாட்டிலுக்குள் பசை இருப்பதால் எளிதில் காயாமல், நெகிழும் தன்மையுடன் இருக்கிறது. மூடியைக் கழற்றி வைத்துவிட்டால், பாட்டிலில் இருக்கும் பசையும் காய்ந்து ஒட்டிக்கொள்ளும்.
தகவல் சுரங்கம் : அறிவுசார் சொத்துரிமை தினம்
அறிவுசார் சொத்துரிமை தினம்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்., 26ல் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரின் அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.