அறிவியல் ஆயிரம்: மின்மினி ஒளிர்வது எப்படி

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Dec 31, 2025, 8:24:42 PM12/31/25
to valluvanpaarvai, brailleacl, inaiathendral

அறிவியல் ஆயிரம்: மின்மினி ஒளிர்வது எப்படி

மின்மினி ஒளிர்வது எப்படி

இரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை.

சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுாசிபெரின்' என்ற பொருள் 'லுாசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.

தகவல் சுரங்கம்:ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு

ரோமானிய காலண்டரில் ஜன., பிப்., மார்ச், ஏப்., மே, ஜூன், செப்., அக்., நவ., டிச., என 10 மாதம் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

தொடக்க நாளாக மார்ச் 1, இறுதி நாளாக ஏப்., 31 இருந்தது. பொ.யு.மு. 45ல் ஜூலியஸ் சீசரின் 'ஜூலியன் காலண்டர்' அறிமுகமானது. 12 மாதம் இடம்பெற்றன. ஜன., 1 ஆங்கில புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. பின் 'ஜூலியன் காலண்டரில்' உள்ள 'லீப் இயர்' கணக்கீடு சரி செய்து 1582ல் 'கிரிகோரியன்' காலண்டரை அறிமுகப்படுத்தினார் போப் கிரிகோரி. இதில் ஜூலை, ஆக., சேர்க்கப்பட்டு 12 மாதம், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது. ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

Reply all
Reply to author
Forward
0 new messages