அறிவியல் ஆயிரம் : 'எல் நினோ' எப்போது
'சூப்பர் எல் நினோ' ஏற்படுவது உறுதி என அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா' தெரிவித்துள்ளது. 1877ல் நிகழ்ந்த 'எல் நினோ' பாதிப்புடன் இது ஒப்பிடப்படுகிறது. 'எல் நினோ' என்பது மத்திய, கிழக்கு பசிபிக் கடல்பகுதியில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்து, அது உலகின் பருவமழையில் பாதித்து உலக சராசரி வெப்பநிலையை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் காலநிலை நிகழ்வு ஆகும். வெப்பநிலை அதிகரிப்பதுடன், சில இடங்களில் அதீத மழைப் பொழிவால் வெள்ளமும் ஏற்படும். ஜூன் - ஆகஸ்டில் 'எல் - நினோ' ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம் : உணவு பாதுகாப்பு தினம்
உணவு பாதுகாப்பு தினம்
பாதுகாப்பற்ற உணவுகளால் உலகில் ஆண்டுக்கு 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனப் பொருட்கள் கொண்ட பாதுகாப்பற்ற உணவு பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 7ல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சுமையிலிருந்து தீர்வு - எங்கும் பாதுகாப்பான உணவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.