minnambalam

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 26, 2026, 8:50:08 PM (8 days ago) Mar 26
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் போரால் சுற்றுச்சூழல் பாதிப்பு

 மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா) நடைபெறும் போரால் உலகின் காலநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய பிப். 28 முதல் மார்ச் 14 வரை, முதல் இரண்டு வாரத்தில்

மட்டும் 50 லட்சம் டன் கார்பன் வெளியிடப்பட்டுள்ளது. போரில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், வெடிகுண்டு, போர் விமானம் உள்ளிட்டவை கார்பன் வெளியீடு அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது என அமெரிக்காவின் காலநிலை, சமூக நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.
 தகவல் சுரங்கம் : உலக திரையரங்கு தினம்
 
 ஐ.நா.,வின் யுனெஸ்கோ முயற்சியால் 1948ல் சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் சார்பில் 1960 முதல் மார்ச் 27ல் உலக திரையரங்கு தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் தியேட்டர் 1895ல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர் நிகெலோடியான். இந்தியாவின் முதல் தியேட்டர் 1907ல் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் 'எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்' பெயரில் உருவாக்கப்பட்டது. 1913ல் சென்னையில் கட்டப்பட்ட 'எலக்ட்ரிக் தியேட்டர்' தான் தமிழகத்தின் முதல் திரையரங்கு.
 
Reply all
Reply to author
Forward
0 new messages