பி.எஸ்.எல்.வி.,யின் வெற்றிநடை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 1993 செப். 20ல் 'பி.எஸ்.எல்.வி., -சி 1' ராக்கெட்டை அறிமுகப்படுத்தியது. முதல் முயற்சி தோல்வியடைந்தது. அடுத்து 1994 அக். 15ல் 2வது ராக்கெட் (பி.எஸ்.எல்.வி., - சி2) வெற்றி பெற்றது. 2017 அக். 31 வரை
(பி.எஸ்.எல்.வி., - சி39., தோல்வி) அனைத்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளும் வெற்றி. தற்போது கடைசி இரண்டு (2025 மே 18ல் பி.எஸ்.எல்.வி., - சி61, 2026 ஜன. 12ல் பி.எஸ்.எல்.வி., சி62) ராக்கெட் பயணம் தோல்வியடைந்தது. இதுவரை அனுப்பிய மொத்தம்
63 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்களில் 59 வெற்றியடைந்தன.