அறிவியல் ஆயிரம்:விமானங்களுக்கு புதிய ஆபத்து
உலகின் வான்வழிப் போக்குவரத்து ஆண்டுக்கு 2.4 சதவீதம் அதிகரிக்கிறது. ஏனெனில் விமானங்களை போல செயற்கைக்கோள்களும் அதிகரித்துள்ளன. இதனால் விண்வெளி குப்பையும் (ஆய்வுக்காலம் முடிந்த செயற்கைக்கோள், விண்கல உடைந்த பாகம்) அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் விமான தமாதத்துக்கு மோசமான வானிலை, தொழில்நுட்ப பிரச்னையுடன் இதுவும் சேரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனில் விமானங்கள் மீது நேரடியாக விழும் என அர்த்தமில்லை. குறிப்பிட்ட வான்வழி பாதையில் விழும் வாய்ப்பிருந்தால், அப்பயணம் ரத்தாகும் என்பதை குறிக்கிறது.
தகவல் சுரங்கம்:காதலர் தினம்
காதலர் தினம் இன்று (பிப். 14) கொண்டாடப்படுகிறது. இது உருவான கதை சுவாரஸ்யமானது. 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார்.
இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது