minnambalam

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jan 28, 2026, 8:02:08 PMJan 28
to valluvanpaarvai, brailleacl, inaiathendral

 TET தேர்வு- தகுதி மதிப்பெண்கள் குறைப்பு- தமிழக அரசு அரசாணை!

Published On: 28 Jan 2026, 10:55 PM

| By Mathi

TET exam

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் SC/ST/BC/MBC பிரிவ்னருக்கான தகுதி மதிப்பெண்களை அதிரடியாகக் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், “ தமிழ்நாடு முதலமைச்சர்

ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக, பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிட மாடல் அரசின் மகிழ்ச்சி! என தெரிவித்துள்ளார்.

minnambalam

Mohan

unread,
Feb 6, 2026, 7:27:32 PMFeb 6
to valluva...@googlegroups.com, brailleacl, inaiat...@googlegroups.com
விஜய் தொண்டர்கள்… கொந்தளிக்கும் பனையூர் மக்கள் !
Published On: 6 Feb 2026, 5:34 PM
| By Pandeeswari Gurusamy

 தவெகவின் பனையூர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் இன்று (பிப்ரவரி 6)
அக்கட்சி தொண்டர்கள் குவிந்த நிலையில், இதுக்கா இவ்வளவு காசு கொடுத்து
அமைதியாக இருக்க நினைத்து ஈசிஆர்-ல் வீடு வாங்கினோம் என அப்பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான பனையூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்
கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,
பனையூர் அலுவலகத்திலும் தேர்தல் பணிகள் களைகட்டியுள்ளன. தவெக தலைமை
அறிவிப்பின்படி, இன்று (பிப்ரவரி 6) முதல் 14ஆம் தேதி வரை சட்டமன்றத்
தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. தினமும் காலை 10
மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என அக்கட்சித் தலைமை
அறிவித்திருந்தது.
 இதையடுத்து, இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் பனையூர் அலுவலகத்திற்கு வந்து
குவிந்தனர். காலை முதலே கார்கள், பைக், வேன்கள் எனப் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலுவலக வளாகத்திற்கு வெளியே திரண்ட கூட்டம், சாலைகளை அடைத்து, ஹாரன்
சத்தம், கூச்சல் ஆகியவற்றால் பகுதி முழுவதும் அமைதியிழந்தது. இதனால்,
அப்பகுதி மக்கள் சாலைகளைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால்
அவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
 இது குறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவினர்
செய்யும் அராஜகத்தைத் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் சும்மா இருக்க
மாட்டோம். போலீஸிடம் கேட்டால், ‘நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை’ என்று
சொல்கிறார்கள். அமைதியாக வாழ்வதற்காகத்தான் விலை அதிகம் கொடுத்து
ஈசிஆர்(கிழக்கு கடற்கரைச் சாலை) பகுதியில் வீடு வாங்கி வந்தோம்.. ‘மேடம்,
நாங்கள் உங்க காரை மட்டும் அனுமதிக்கிறோம்’ என்கிறார்கள். எங்களை அனுமதிக்க
நீங்கள் யாரு? இது எங்க இடம்… வரி நாங்க கட்டுகிறோம்” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், “11ஆவது அவென்யூ வரை பிளாக் செய்திருக்கிறார்கள். வேலைக்காரர்களைக்
கூட உள்ளே வர விட மாட்டேன் என்கிறார்கள். அந்த ஓனர் வந்து இவர்களிடம்
கெஞ்சி, வேலைக்காரர்களை உள்ளே கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லா
இடங்களிலும் தடுப்புகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு
நாள் இல்லை… மாதக்கணக்கில் பார்த்துட்டுத்தான் நாங்கள் இப்போது வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம்.
 எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவர்கள் இன்னும் அரசியலுக்கு வரவே
இல்லை… அதற்குள்ளேயே எங்களுக்கு இவ்வளவு பிரச்சினை. வேற இடம் இல்லையா? 3
நாளைக்கு முன்னாடிதான் ஒரு மீட்டிங் நடந்தது. சாப்பிட்டு குப்பையைப்
போட்டுவிட்டுப் போறாங்க… அதை கிளீன் பண்ண மாட்டேங்கிறாங்க. ஏதாவது சொன்னா
சண்டை போடுறாங்க” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.
minnambalam

Dhivisha dhivi

unread,
Feb 14, 2026, 7:35:23 PM (6 days ago) Feb 14
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அமித்ஷா கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் கேமரா- காரைக்காலில் பரபரப்பு
Published On: 15 Feb 2026, 2:54 AM
| By Mathi
 Amit SHah
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற காரைக்கால் பொதுக்கூட்டத்தில் பறந்த டிரோன் கேமரா சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 ஆனால் பிப்ரவரி 14-ந் தேதி நேற்று காரைக்காலில் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, தடையை மீறி ஒரு டிரோன் கேமரா பறந்து வந்தது. இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) வீரர்கள் உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டிரோனை இயக்கியவர் திருநள்ளாறைச் சேர்ந்த லோகேஷ் என தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து காரைக்கால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
minnambalam
Reply all
Reply to author
Forward
0 new messages