எங்களின் பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்களிடம் இந்த கோரிக்கையை சேர்ப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
V SITARAMEN
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கல்வி" என்பது தமிழ்நாட்டில் குரங்கு கையில் கொடுக்கப்பட்ட பூமாலையாக ஆகி விட்டது.
அனைத்து பெற்றோர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.....
அனைத்து பெற்றோர்களும் இந்த வேண்டுகோளை, உடனடியாக, பாஜக தலைவர் திரு. அண்ணாமலை, மற்றும் தமிழகத்தின் கண்ணியமான கலாச்சாரத்தில் அக்கறை கொண்டுள்ள அனைத்து தலைவர்களுக்கும் "உடனடியாக" தங்களால் முடிந்த ஊடகங்களின் வழியாக அசுரர் வேகத்தில் எடுத்துச்செல்ல வேண்டும்.....!
ஆரம்பமாகி விட்டது, கலாச்சார துரோகிகளின் காட்டு தர்பார்.....!
திரு லியோனி அவர்கள் பாடநூல் திட்டத்தலைவராக பொறுப்பேற்று விட்டாராம். அவருடைய முதல் ஆணை. பாடப்புத்தகங்களில் கருணாநிதியின் சாகசங்களை விளக்கமாக பதிவிட வேண்டும் என்பதே. செக்கிழுத்தது, சிறை சென்றது, சுதந்திரம் வாங்கித்தந்தது, காணாமல் போய் இருந்த தமிழை கண்டுபிடித்து, தமிழர்களுக்கு வழங்கியது அனைத்துமே கருணாநிதி என்று இடம் பெறும் பாடப்புத்தகங்களை படிக்கவிருக்கும் அடுத்த இளையதலைமுறையை .....அராஜகமான பொய்களுக்கு பலி கொடுக்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு அனைத்து பெற்றோர்களும் தள்ளப்பட்டுவிட்டார்கள். திமுகவிற்கு வாக்களித்த மக்களின் வாரிசுகளுக்கும் இதே நிலைதான். இதனை முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக ஒன்றிய முதல்வர் இதைப்பற்றியும் துளியும் சிந்தனை இல்லாமல் லியோனியைப்பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளார்.
அரசு, அரசு சார்புள்ள பள்ளிகளை மொத்தமாக புறக்கணித்து, சிறந்த தனியார் நிலையங்களில் மட்டுமே தரமான கலாச்சாரம் கொண்ட கல்வியை இனி மேற்கொள்ள வேண்டிய நிலை வரும்.
பெற்றோர்கள் அனைவரும் இதன் கொடுமையான விளைவை கருத்தில் கொண்டு இந்த நிலையை தகர்த்திட உடனே ஆவன செய்ய வேண்டும். இதை செய்யத்தவறினால் பாதிப்புக்கு உள்ளாவது நமது மாணவச்செல்வங்களே..!