Fwd: [New post] இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

2 views
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Aug 7, 2020, 5:45:21 AM8/7/20
to உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS!, brahmi...@googlegroups.com

---------- Forwarded message ---------
From: இந்துமுன்னணி <donot...@wordpress.com>
Date: Fri 7 Aug, 2020, 12:09 PM
Subject: [New post] இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
To: <sitar...@gmail.com>


Admin posted: "07.08.2020 தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கத"

New post on இந்துமுன்னணி

இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

by Admin

07.08.2020

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது.

இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக்கூடாது.

எனவே நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாக பேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

9 ம் தேதி (ஞாயிறு) அன்று களமிறங்குவோம். நமது பலத்தை காட்டுவோம்.

அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும். மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)

நமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல்படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.

நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக.

வணக்கம்

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Comment    See all comments

Unsubscribe to no longer receive posts from இந்துமுன்னணி.
Change your email settings at Manage Subscriptions.

Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://hindumunnani.org.in/news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8b/


Reply all
Reply to author
Forward
0 new messages