பாரதீய ஜனதாவின் மிகப்பெரும் பலவீனம்.......
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில்,, திரு நரேந்திர மோதி அவர்கள் புரிந்துள்ள சாதனைகள் ...உலக அளவில், தேசீய அளவில், ஒவ்வொன்றும் நக்ஷத்திர அந்தஸ்து பெறக்கூடியவை. மனசாட்சியுள்ள, பாரதத்தினை எதிரியாக கருதாத அனைத்து நாடுகளும் புகழ்கின்றன. இது மறுக்க இயலாத உண்மை.
ஆனால் உள்நாட்டில், எதிர்க்கட்சிகள் என்றால் என்ன..? என்று இரண்டே வார்த்தைகளில் கூறிவிடலாம். எதுவுமே கொள்கை ரீதியாக அல்ல.....மோதி எதிர்ப்பு .....மோதி அவர்கள் எதனை செய்தாலும் எதிர்ப்பு. எதிர்ப்பு...எதிர்ப்பு.....அறிவு பூர்வமான சிந்தனைகள் இல்லை. இல்லை....இல்லவே இல்லை. இந்த நிலைமைக்கு என்ன காரணம். எதிர்க்கா விட்டால் கொள்ளையடிக்க இயலாது....கொழுத்த பணக்காரர்களாக ஆக இயலாது. மக்களின் நலனுக்கும் அமைதிக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பாரதீய ஜனதாவின் மிகப்பெரும் பலவீனம்.......
பேராசிரியர் கல்கி அவர்கள் " பொன்னியின் செல்வன்" என்று ஒரு புகழ் மிக்க சரித்திர நாவல் படைத்திருந்தார். அதில் ஒரு கட்டத்தில், ஒரு உவமைதனை கூறுவார் . அது இங்கே மிக மிக பொருத்தமாக உள்ளது. கதாநாயகி ஒரு பெண். சதிகாரியாக ஒரு பெண். இருவரது சக்திகளையும் மதிப்பிடுவார். கதாநாயகியாக இருக்கும் பெண்ணின் சக்தி..." நரகத்தை விடுத்து, சுவர்க்கம் எது என்று காட்ட முயற்சிகள் மேற்கொள்வது ". சதிகாரியாக இருக்கும் பெண்ணின் சக்தியோ ..." கதாநாயகியின் சக்திக்கு, ஒரு படி மேல் என்றே கூடலாம்...."நரகத்தையே ஸ்வர்க்கம் என்று சாதித்து, மக்கள் அதனை நம்பும்படி செய்து, தாமாகவே விரும்பி அதில் குதித்து விடும் படி செய்வது..".....இதுதான் மோதியினை எதிர்க்கும் கட்சிகளின் சக்தி.
மோதி எதிர்ப்பாளர்கள் தங்களது சக்தியை பெருக்க, கோடி கோடி கோடியாக செலவு செய்கிறார்கள் ..தங்களால் வெறுக்கப்பட்ட பிராமணர்களை தேடி ஓடுகிறார்கள். பாஜகவோ யாரைத்தேடி ஓடுவதும் இல்லை. "உருப்படியான சக்திகள் எதையும் பயன்படுத்திக்கொள்வதே இல்லை." பாஜக தலைமை விரும்பினால் உருப்படியான சக்திகள்....பல.....கோடிகள் இல்லாமலே உதவ தயாராக இருக்கின்றன. இதைத்தான் செய்தோம் என்று "அடிமட்டம் வரை தம்பட்டம் அடிக்க ஒரு விளம்பர யுக்தி" அவசியம் தேவை. அது இவர்களிடம் இல்லை. தேடிப்பிடித்தாவது அந்த சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா ? செய்வார்களா ?......... "செய்வதைச் சொன்னோம்...சொன்னதைச் செய்தோம் "....என்று முழங்கி விட்டு, "செய்யாதவற்றினை சொல்லி .....சொல்லியவற்றினை பற்றி மக்களை நினைக்காமல் முழு மடையர்களாக்கி "விடுவது .....இது போன்ற சக்தி மாபெரும் சக்தி அல்லவா ? சிந்தி க்க வேண்டும் பாஜக தலைவர்கள். ஆழமாக சிந்திக்க வேண்டும். அடி மட்டம் வரை சந்திக்க வேண்டும்."..செய்வார்களா ? பாமர மக்கள் உணர்வார்களா...? பாரதம் வளருமா ? பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------