Fwd: Why DMK DK oppose new education policy. SHOCKING FACTS...!!

1 view
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Jul 30, 2020, 9:59:33 AM7/30/20
to brahmi...@googlegroups.com, Tamil Brahmins Community, rsspraba...@gmail.com


---------- Forwarded message ---------
From: sitaramen varadharajan <sitar...@gmail.com>
Date: Thu, Jul 30, 2020 at 3:32 PM
Subject: Fwd: Why DMK DK oppose new education policy. SHOCKING FACTS...!!
To: உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS! <iyers...@groups.facebook.com>



---------- Forwarded message ---------
From: sitaramen varadharajan <sitar...@gmail.com>
Date: Thu 30 Jul, 2020, 3:30 PM
Subject: Why DMK DK oppose new education policy. SHOCKING FACTS...!!
To: <sitar...@gmail.com>


How DMK DK DRAVIDIAN LEADERS CHEAT US... EVERY TAMILIAN SHOULD KNOW THESE "FACTS".. PLEASE SPEND SOME TIME.....

✅✅✅✅✅✅✅✅✅✅✅🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
ஓ....ஹோ..... இதுக்காகத்தான் திராவிடாஸ்ரமப் போராளிகள் எல்லாம் இந்தக் கதறு கதறுதா?

பதிவை ஆழ்ந்து படித்து உள்வாங்குங்கள்//

புதிய கல்விக் கொள்கையும், 
திராவிட  வர்ணாசிரமும்:

      🙏  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. 

        மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றனரே தவிர திட்டத்தையே கொண்டு வரக்கூடாது என  எவரும் எதிர்க்கவில்லை. 

        ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....?   

        அங்கு தான் இருக்கிறது திராவிட வர்ணாஸ்ரம தர்மம். 

       வர்ணாஸ்ரமம் தெரியும். அது என்ன திராவிட வர்ணாஸ்ரமம்....? அதை இந்தப் பதிவின் இறுதியில் சொல்கிறேன். அப்போது தான் புரியும். 

       புதிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் திரு மோடி டீ குடித்துக் கொண்டே பத்து நிமிடத்தில் எழுதித் தயாரித்த ஒன்று அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

       கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் 2015 ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. 

           கடைநிலை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைக் கொடுப்பதற்காகவும் அதில் மக்களையும், செல்வந்தர்களையும் பங்குதாரராக்கி அவர்களையும் அதில் பங்கு பெறுவதற்கான கருத்துக் கேட்புகள் இணையதளத்திலும், நேரில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியும் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டது. 

     இதன் பின் 2015 மே மாதம் அமைச்சரவை செயலாளர் டி எஸ் ஆர் சுப்பிரமணியன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 

              இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, "தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்" என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால்  2017 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. 

      இவ்வளவு நீண்ட கால ஆய்வுகள், தரவுகள், ஆலோசனைகள் பரிந்துரைகளை எல்லாம் தாண்டி சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க என்ன காரணம்.....? 

      இங்கு தான் திருட்டு திராவிடத்திற்கு புதிய கல்விக் கொள்கை தலையில் சராமாரியாக இடியை இறக்குகின்றது. 

       முழுமையான வரைவு இன்னும் வரவில்லை. வரைவின் சுருக்கம் தான் வந்துள்ளது அதற்கே இந்த கதறல். 

      வரைவு X1 : தேசியக் கல்வி ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராகப் பிரதமர் இருப்பார். 

       மேற்கண்ட பரிந்துரை அமலாக்கப்பட்டால் பணத்திற்காகப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர் பதவிகளைக் கோடிகளில் விற்க முடியாது. இது திராவிடக் கட்சிகளுக்கு விழுந்த முதல் அடி. 

          பரிந்துரை 1V : இது தொழிற்கல்விக்கானது.  அனைத்து தொழிற்கல்வியும் உயர் கல்வி அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். தனித்து இயங்கும் சட்ட, மருத்துவ, பொறியியல், வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படும். 

            மறுபடியும் ஒரு முறை நன்றாக மேலே உள்ளதைப் படித்து பார்க்கவும். புரிகிறதா....? 

      அனைத்துத் தனியார் தொழிற்கல்வி அமைப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அரசின் கட்டுப்பாட்டில் வராத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படும். 

     தன்னாட்சிக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரி, தனியார்ப்  பல்கலைக்கழகம் என்று லட்சங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு  தரமற்ற மாணவர்களைச் சேர்ப்பது, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைத்து அவர்களைத் தேர்வு பெற வைத்து அனுப்புவது........

           மொத்தமாக எல்லாமே ஸ்வாகா...! இந்த வரைவால்  இதை விட ஒரு பெரிய விடிவும் தமிழகத்திற்குக் கிடைக்கும். புறம்போக்கு அரசியல் வாதிகளுக்கும், கூத்தாடிகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது. 

         தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் திருட்டு திராவிட அரசியல் வாதிகளுக்கும், அவர்களின் பினாமியாக உள்ள கல்வித் தந்தைகளுக்கும் சொந்தம். 

திருட்டு திராவிசமி அரசியலுக்குக் காமதேனுவாக இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட காலியாகி விடும். பென்ஸ் காரில் வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் கல்வி தந்தைகளும், திராவிசமிக் கொள்ளையர்களும் தானாக பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள். 

பரிந்துரை 3 : இது ஆசிரியர் கல்விக்கானது. 
 
         ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். உயிர்த் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும். வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டு ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்விப் பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும். தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும். 

         புரிஞ்சதா....? இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று நாலு குட்டிச்சுவரை வைத்து நடத்த முடியாது. பாடத்திட்டம் சல்லடையாகச் சலித்து எடுத்தவர்களைத்தான் ஆசிரியராக்கும். 

        தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து லட்சங்களையும், கோடிகளையும் அள்ளுவது யாரென்று பாருங்கள்..... திருட்டு திராவிசத்தின் கல்வித் தந்தைகள் பல் இளிப்பார்கள். 

பரிந்துரை 1. f : 

      ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.  குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி மதிப்பீடு செய்யப்படும். கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும், ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும் அவர்களுக்கு வழி ஏற்படுத்தித் தரப்படும். 

         இந்த பரிந்துரையும் இதற்கு முன் நீங்கள் பார்த்த எண் 3 பரிந்துரையும் தான் கல்வித்தந்தைகள், ஆசிரியர் சங்கக் கும்பல் இரண்டையும் சேர்த்து கதற வைக்கிறது. 

        முதலாவது இந்த பரிந்துரைகள் படி இனி தனியார் பள்ளிகளில் பத்தாவது படித்த கோமளவல்லிகளை டீச்சராகப் போட்டு மாதம் ஐந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் பப்பு வேகாது. 

          சரியான கல்வித் தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும்.  முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்கப் பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தைக் கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள். பத்தாங்கிளாஸ் கோமளவல்லிகளை வேலைக்கு வைத்தால் அரசே அந்தப் பள்ளியை மூடி விடும். 

       இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர்  நினைத்துக் கொண்டிருக்க முடியாது . குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை  அவர்களின் வேலையைப் பணி மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனைத் தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும். 

        இதனால் தான் சில சங்கங்கள் திருட்டு  திராவிசக் கல்வித் தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பரிந்துரை 4.J : 
   
2020 ம் ஆண்டிற்குள் தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். இந்தப் பாடத்திட்டம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும். 

             இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான கல்வியாளர்களைக் கொண்ட குழுவிடம்  பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது திருட்டு திராவிடத்தின் வரலாற்றுப் பொய்களைக் குழந்தைப் பருவத்திலேயே திணிக்க முடியாது. 

       புரியும்படியாகச் சொன்னால்....  வைக்கோல் வீரர், யுனெஸ்கோ விருது,  .......அவர் சாதியை ஒழித்தார்,...... இந்திரன் சந்திரன் என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்டார்,....,.. மக்களால்....... என்று அழைக்கப்பட்டார்...  இப்படியெல்லாம் எதிர்காலத்தில் பாடம் எழுதித் தமிழனை ஏமாற்ற முடியாது. 

            இது திருட்டு திராவிசத்திற்கு விழுந்த சம்மட்டி அடி.   

பரிந்துரை 8.a to l

         ( Note : இது நீண்ட பகுதியாக இருப்பதால் அதன் சாராம்சத்தின் அடிப்படையில் எழுதுகிறேன் ) 

       இது அரசு, மற்றும் தனியார் பள்ளிகளை ஆரம்பிப்பதில் அனுமதி வழங்குவது முதல்  அதைத் தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வுகள் செய்தும் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்துவதற்குத் தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. 

         வீட்டு மொட்டை மாடியில் பள்ளி நடத்துவது, பத்தாவது பாஸ் கோமளவல்லி டீச்சர், விளையாட்டு மைதானம் இல்லை, கழிப்பறை இல்லை, குடி தண்ணீர் இல்லை, விளையாட்டு ஆசிரியர் இல்லை.....   அவ்வளவு ஏன் குட்டிச்சுவர் கூட இல்லாத பள்ளிகள்...   அத்தனைக்கும் இந்த பிரிவு ரிவிட் அடிக்கிறது. 

            தனியார் பள்ளி முதலாளிகளும்,  அந்த பள்ளிகளில் டீச்சராக இருக்கும் பத்தாங் கிளாஸ்  கோமளவல்லிகளும் ஏன் கதறுகின்றனர் எனப் புரிகிறதா...? 

      ஒட்டு மொத்தக் கல்வி வியாபாரிகளுக்கும் விழுந்த மரண அடிதான் புதிய கல்விக் கொள்கை -2019.

          இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, பெரியார் மண்.... எக்சட்ரா... எக்சட்ரா.... என பேய்ட் ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களைத் திசை திருப்புகின்றனர். 

           திருட்டு திராவிசமிகள் கல்வியை வியாபாரப் பொருளாக்கி, அதை விற்க வேண்டும் என்பதற்காகவே தரமற்ற கல்விப் பாடத்திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தனர். 

        அரசுப் பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும், தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டனர். 

         அந்தத் தரமான கல்வியைக் கொடுக்கும் தனியார் கல்வி வள்ளல்கள் யார்...? திருட்டு திராவிசமிகள் தான். 

       சரி, திருட்டு திராவிசமிகள் மட்டும் எப்படித் தரமான கல்வியைக் கொடுக்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்கள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாட திட்டத்தினைக் கற்பிக்கின்றனர். 

        என்ன ஒரு கொடுமையான விசயம் பாருங்கள்.   மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் இலவசக் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்குப் பணத்திற்கு விற்கிறார்கள். 

          அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி உண்டு. ஆனால் அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி இல்லை. 

      இது அனைத்தையும் கோர்வையாக்கிப் பாருங்கள். ஒரு விசயம் மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரியும். 

           இலவசமாக நமது குழந்தைகளுக்கு  கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மூன்றாவது மொழியறிவைத் தடுத்து அதைப் பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்கி வைத்துள்ளனர்.

         மூன்றாவது மொழியைக் கற்கும் அளவிற்கு நமது குழந்தைகள் இல்லை என்று ஒரு அல்பத்தனமான  காரணத்தை முன்வைக்கின்றனர்.

          இதை விட சுத்தப் பைத்தியக்காரத்தனமான வாதம் வேறு எதுவும் கிடையாது. நடிகர் சூர்யாவின் குழந்தை மூன்று மொழி படிக்கும் போது குப்பன், சுப்பன்  வீட்டு குழந்தை படிக்காதா...? 
பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா...? 

        தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் கடுமையாக எதிர்க்கின்றனர் இந்த நாசகாரர்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது. 

        கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல....? இவர்கள் கொண்டு வந்த  கல்வித் திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஏன் இப்படி சுற்றி வளைத்து சொல்ல வேண்டும்...? இப்போதைய கல்வி என்பது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவாத கல்விக் கொள்கை என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு....? 

            2019 - 20 பட்ஜெட்டில் தமிழக  பள்ளிக்கல்வித் துறைக்கு  ஒதுக்கப்பட்ட தொகை ரூ.28,757.62 கோடி.  

       இதை ஒரு புரிதலுக்காக 28,000 கோடிகள் என வைத்துக்கொள்ளலாம். 

        தமிழகப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்தது. 2015 புள்ளி விபரப்படி இது நாற்பத்தி ஐந்து லட்சமாக குறைந்து விட்டது.  பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நிராகரித்து விட்டனர். 

         இது இப்போது மேலும் குறைந்திருக்கும். ஒரு கணக்கீட்டிற்காக 45,00,000 மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மாணவனுக்கு ஆகும் செலவைக் கணக்கிடுங்கள். 

      280,000,000,000 ÷ 45,00,000 

                   = 62,222

        அதாவது என்னதான் குருட்டுக் கணக்காகப் பார்த்தாலும் ஒரு மாணவனுக்கு வருடம் ஒன்றிற்கு அரசு செலவிடும் தொகை அறுபதாயிரம். 

        ஒரு மாணவனுக்கு அறுபதாயிரம் அரசு செலவு செய்தும் அவன் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத ஒரு கல்வியைத்தான் கொடுக்க முடிகிறது என்றால் பிறகு எதற்கு கல்வி முறை..? 

    ஒரு விசயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.  கல்வியை மக்களுக்கு கொடுப்பதில் தோற்று விட்டது. கல்வித்துறையை நிர்வகிக்கும் தகுதியையும்,  தார்மீக உரிமையையும் திராவிசக் கட்சிகள் இழந்து விட்டது.  

             இதற்குப் பேசாமல் கல்வித்துறையையே திருட்டு திராவிசத்தின் கல்வி மாபியாக்களிடம்  ஒப்படைத்து விட்டு போய்விடலாம். 

     சரி இறுதிப் பகுதிக்கு வருகிறேன். இந்து வர்ணாஸ்ரமத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே திருட்டு திராவிசத்தின் உதவியுடன் கல்வித்துறையில் திராவிச வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கியுள்ளனர். 

           அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி   மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டு. 

          வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தினர் மெட்ரிகுலேசன் மூலம்  தரமான கல்வியை ஆங்கில வழியில் பெறலாம்.

          குப்பன் சுப்பன் குடும்பத்தினர்  சமச்சீர் கல்வியைத் தமிழ் வழியில் படித்து மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல்  தலைமுறை தலைமுறையாக அரசியல் வாதிகளுக்கு கொடி பிடித்தும், அரசின் இலவசங்களைப் பெற்றும் பிழைக்க வேண்டும். 

     இது திராவிட சித்தாந்தத்தால் உருவான மூன்று வகை வர்ணங்கள். 

     இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழனை மடையனாக்கி வைத்திருப்பார்கள் என்பதையும் பார்ப்போம்.

Reply all
Reply to author
Forward
0 new messages