11-03-2021 தினமலர் நாளிதழில் வந்த செய்தி.அனைத்து ப்ராம்ஹண சொந்தங்களுக்கும் பகிர்வோம்

7 views
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Mar 11, 2021, 6:08:39 AM3/11/21
to உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS!, Tamil Brahmins Community, Raamakrishnan Sambasivam, vrgraji gopalakrishnan, THAMBRAS Regd, brahmi...@googlegroups.com




'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே

 Updated : மார் 11, 2021  01:56  Added : மார் 11, 2021  01:54  கருத்துகள் (56)
Advertisement
11-03-2021  தினமலர் நாளிதழில் வந்த செய்தி.அனைத்து ப்ராம்ஹண சொந்தங்களுக்கும் பகிர்வோம் 


கடந்த சில தசாப்தங்களாக பிராமணர் சமுதாயம் ஒரு சிலரால் திட்டமிட்டு அமைப்பு ரீதியான கருத்தியல் வெறுப்பு தாக்குதல்களுக்கு உள்ளாகி அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

பிராமணர்கள் மீது வெறுப்பை உருவாக்கும் விதமான கற்பனைக் கதைகளை பொய்யுரைகளைப் பரப்புவதை சிலர் வழக்கமாகவும் வறட்டுக் கொள்கையாகவும் கொண்டிருக்கின்றனர்.இதன் மூலம் ஒரு சமூகத்துக்கு எதிரான தாக்குதல் அமைப்பு ரீதியாக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகளால் ஒரு சமூகத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதும் வாழ்க்கை முறையை மூர்க்கத்தனமாக சித்தரித்து கேலி செய்வதும் சட்ட ரீதியாக தடுக்கப்பட வேண்டியதாகும்.






பிராமணர்கள் பழங்காலம் தொட்டே இறை பக்தியுடன் வேதம் பயின்று வேதம் ஓதுவதை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர்.எப்போதும் சமாதானத்தை விரும்பும் சட்டத்தை மதிக்கும் பிராமணர் சமூகம் சிலரால் தற்போது அனைத்து விதமான அவமானம் குரோதம் சமூகப் பாகுபாடு மற்றும் தாக்குதல் அட்டூழியங்களுக்கும் ஆளாக்கப்படுகிறது.

குறிப்பாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பிராமணர்கள் குறித்து மிகவும் மோசமாக விமர்சிக்கப் படுகிறது. பிராமணர் தொழில் இழிவுபடுத்தப்படுகிறது. வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் கேலி செய்யவும் நிகழ்ச்சிகளில் ஊக்குவிக்கப்படுகிறது. 'பிராமண எதிர்ப்பு' என்ற பெயரில் வெறுப்பு அரசியலும் பிரசாரங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் இருக்கும் இந்த சிறுபான்மை சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் தடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இதை சீர்குலைக்கும் விதமாக சிலர் ஜாதிய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு பிராமணர்களுக்கு எதிரான அவதுாறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்; ஊடகங்களின் வாயிலாக 'பார்ப்பான், பாப்பாத்தி' என ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக ஜாதிய பாகுபாட்டுடன் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்.

பிராமணர்கள் பலர் படித்த பின்னணியை கொண்டவர்கள் என்றாலும் கிராமப்புற மற்றும் சில நகர்ப்புறங்களில் மிகவும் மோசமான வறுமையை இந்த சமூகத்தினர் அனுபவித்து வருகின்றனர்.ஊடகங்களில் ஜாதியின் பெயரால் இவர்கள் 'பார்ப்பான் பாப்பாத்தி' போன்ற அவதுாறு வார்த்தைகளால் வசை பாடப்படுகின்றனர். இது சமூகத்தில் ஜாதி ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயல். இதுபோன்ற துவேஷங்களுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தப்பவில்லை. சமீபத்தில் சமூக ஆர்வலர் பங்கஜ் மேஷ்ரம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றம் 'தலித்' என்ற
வார்த்தையை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இதைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு 'இந்திய பத்திரிகை கவுன்சில்' வாயிலாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து ஊடகங்களுக்கும் அறிவுரை வழங்கியது. முன்னதாக 2007ம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மாநில அரசின் ஆவணங்களில் 'தலித்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து கேரள அரசு அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களிலும் 'தலித்' மற்றும் 'ஹரிஜன்' என்ற சொற்களை அகற்ற முடிவு செய்து அதற்கு பதிலாக அவர்களை பட்டியல் ஜாதியினர்/பழங்குடியினர் என குறிப்பிடுகிறது.

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவின் கவுரவத்தைப் பாதுகாக்க அரசு இயந்திரங்களும் நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருப்பதை காண முடிகிறது.சமூகத்தில் பாகுபாடுகளை அகற்ற சிறுபான்மை பிராமண மக்கள் விஷயத்திலும் இதே முறையை சட்டப் பூர்வமாக அமல்படுத்த வேண்டும். சமூகத்தில் பலவீனமான இப்பிரிவு மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.ஊடகங்களில் பிராமணர்களை 'பார்ப்பான், பாப்பாத்தி' என்ற வார்த்தைகள பயன்படுத்தி சித்தரிப்பது சர்வசாதாரணமாகி விட்டது. கடந்த தலைமுறையின்போது 'பகுத்தறிவுவாதம்' என்ற பெயரில் சிறுபான்மை சமூகம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டது.எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவாக நடத்துவது பேசுவது விமர்சிப்பது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்.

இது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உரிய சட்டத்தின் வாயிலாக உணர்த்த வேண்டியது அவசியம்.நம் அரசியலமைப்பு சட்டப்படி இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் சரிசமம். மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படாவிட்டால் சமத்துவ சமூகத்தை ஒருபோதும் நாம் அடைய முடியாது. பிராமணர்களின் கவுரவத்தை பாதுகாக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் 'பார்ப்பான், பாப்பாத்தி' என ஜாதி ரீதியாக அவதுாறு நோக்கில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.


'பார்ப்பான், பாப்பாத்தி' போன்ற சொற்கள் மட்டுமின்றி இச்சமூகத்தை வசைபாட சிலரால் பயன்படுத்தப்படும் அனைத்து வார்த்தைகளையும் தடை செய்ய வேண்டும்.இக்கோரிக்கையை ஏற்று தேர்தலுக்கு முன் வெளிப்படையாக வாக்குறுதி அறிவிக்கும் கட்சிக்கே தமிழகத்திலுள்ள பிராமணர்கள் வாக்களிப்பர்.தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசுக்கு, குறிப்பாக அ.தி.மு.க. தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தினரின் ஓட்டுக்கள் தங்கள் கட்சிக்கே தொடர்ந்து கிடைக்கும் என நம்புகின்றனர்;
இது தவறு.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு இதுவரை பிராமணர்களுக்கோ, கோவில்களுக்கோ, ஏன் கோவில் குருக்களுக்கோ கூட கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட தமிழகத்தில் அமல்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை.எனவே பிராமணர்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து அந்தந்த தொகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாக்களிப்பர். குறிப்பாக 'பார்ப்பான், பாப்பாத்தி' போன்ற வசைபாடல் சொற்களை பொதுவெளியில் பயன்படுத்தப்படுவதை தடை செய்வோம் என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிக்கே வாக்களிப்பர். - இர. ரங்கராஜன் சென்னை.


Reply all
Reply to author
Forward
0 new messages