Fw: கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் ஜெயலலிதா அரசு!

5 views
Skip to first unread message

mani kandan

unread,
May 27, 2011, 4:57:21 AM5/27/11
to
 

Fwdmsg...


CourtesY: My nanban,




Thanks & Regards,

Mani



கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் ஜெயலலிதா அரசு!
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் செய்தியைப் படித்ததும் நம்மைத் தொடர்பு கொண்ட நண்பர் அடித்த ஒரு கமெண்ட்: “என்னண்ணே இது… விக்கலுக்கு விஷத்தைக் குடிச்ச மாதிரியாகிடுச்சே!”
இதையே தலைப்பாக்கி ஒரு கட்டுரை எழுதவும் முனைந்தோம். ஆனால் அதிமுக ஜெயித்துவிட்டதில் பலர் திருவிழா உற்சாகத்தில் இருந்த நேரம் அது. அதிமுக அனுதாபிகளோ ஒரு தேனிலவு கொண்டாட்ட உணர்விலிருந்தார்கள்.
இதைக் கலைக்கும் பாவ காரியத்தை நாம் செய்ய வேண்டியதில்லை… ஜெயலலிதாவே செய்வார் என்ற அதீத நம்பிக்கை காரணமாக அமைதியாக இருந்தோம். நம் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை ஜெயலலிதா!
‘கூடவே பொறந்தது… என்னிக்கும் மாறாது’, என்பார் ரஜினி. ஜெயலலிதா விஷயத்தில் நூறு சதவீதம் அது சரி!
நல்லதோ கெட்டதோ ஒரு விஷயத்தை யார் செய்திருந்தாலும், அதன் தன்மையை அலசிப் பார்த்து செயல்படுத்துவதே நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதா, இந்த ‘அழகோடுதான்’ ஆட்சி செலுத்துவார் என்று அவருக்கு ஆதரவான பத்திரிகைகள் மணியடித்தும் மலர் தூவியும் பஜனை பாடி வந்தன. ஆனால் அதெல்லாம் மடத்தனமான நினைப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரிய வைத்துள்ளார் முதல்வர்.
இவரது ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடியில் சகல வசதிகளோடும் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம். இப்போது அதை வணிக வளாகமாக்கி, டாஸ்மாக் கடை, நட்சத்திர பார் உள்ளிட்டவற்றை அதற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தபோது, ஜெயலலிதாவின் வக்கிர முகம் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.
அடுத்து மாணவர்களின் கல்வியோடு விளையாட ஆரம்பித்துள்ளார். கல்வி என்ற பெயரில் தனியார் பள்ளி கொள்ளையர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்று வெளிப்படையான பச்சைக் கொடியைக் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
இதன் ஒரு பகுதியாக சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட ஆரம்பித்துள்ளார். இதற்கு அவர் சொல்லும் காரணம், அது தரமற்ற பாடத் திட்டமாம். எத்தனையோ கல்வி நிபுணர்களின் பங்களிப்பும் பாராட்டும் பெற்ற பாடத்திட்டம் அது.
இது கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது… முக்கியமாக கருணாநிதி பற்றிய பாடம் அதில் இடம்பெற்றிருப்பதுதான் இந்த சமச்சீர் கல்வியை ஜெயலலிதா கண்ணை மூடிக் கொண்டு நிறுத்தக் காரணம் என்பது சிறு பிள்ளைக்கும் கூட தெரிந்த சமாச்சாரம்.
கருணாநிதியைப் பற்றிய பாடம் இருக்கக் கூடாது என்பதுதான் ஜெயலலிதா விருப்பம் என்றால் அதற்கு மிக சுலபமான வழியுள்ளது. அந்தப் பாடப் புத்தகங்களை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நீக்கப்பட்ட பிரிவில் கருணாநிதி பற்றிய பாடத்தைச் சேர்ப்பதுதானே… நீக்கப்பட்ட பாடத்தை மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லையே. மாநில நலனில், மாணவர் நலனில் அக்கறையுள்ள முதல்வராயிருந்தால் அதைத்தான் செய்திருப்பார். இவருக்கு இந்த இரண்டும் கிஞ்சித்தும் இல்லை என்பதற்கு இந்த உத்தரவே சாட்சி.
சமச்சீர் கல்விப் புத்தகங்கள் வரும் வரை, புத்தகக் கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் அடித்த கொள்ளை பெரிது. பல ஆயிரம் ரூபாயை பெற்றோரிடமிருந்து பிடுங்கி வந்தனர் இந்த கொள்ளையர்கள். எல்கேஜிக்கு புத்தகம் மற்றும் நோட்டுகளுக்கு கட்டணம் ரூ4000. இது 2009-ல்.
ஆனால் சமச்சீர் கல்வி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதும் ஆறாம் வகுப்புக்கான பாடப் புத்தகங்களின் விலை ரூ 300 ஆகக் குறைந்துவிட்டது. திகைத்துப் போன பள்ளி நிர்வாகங்கள், இந்த ‘நஷ்டத்தை’ எப்படி ஈடுகட்டுவது என்று திட்டம் போட்டன. உடனே, டைரி, கட்டண அட்டை, கட்டண ரசீது, தேர்ச்சி அட்டை, கம்ப்யூட்டர் பயிற்சி கட்டணம், நூலகக் கட்டணம், விளையாட்டு மைதானக் கட்டணம் என்றெல்லாம் புதுப்புது கட்டணங்களை உருவாக்கி, மாணவர்களிடம் புதிதாக ரூ 3000 வரை பிடுங்க ஆரம்பித்தனர். நோட்டுப் புத்தகங்களுக்கு தனியாக ரூ 2000.
இவர்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு ரசீது தருவதற்குக் கூட மாணவர்கள் தனி கட்டணம் தர வேண்டுமாம். மைதானம், விளையாட்டு சாதனங்கள் இல்லாவிட்டால் பள்ளிகளுக்கு அனுமதியே தரக்கூடாது என்பது விதி. ஆனால் இந்த கொள்ளையர்களோ, மைதானத்துக்கே தனி கட்டணம் வசூலிக்கிறார்கள். எதனால் இந்த நிலை…. சமச்சீர் கல்வி என்ற திட்டம் வந்து, புத்தகங்கள் விலையை மலிவாக்கிவிட்டதுதான். அப்படியானால் இதுவரை இவர்கள் புத்தகக் கட்டணம் என்ற பெயரில் அடித்த கொள்ளை எவ்வளவு என்று புரிகிறதா?
இதையெல்லாம் அலசி ஆராய்ந்து, தனியார் பள்ளிகளை அதிரடி நடவடிக்கை மூலம் ஒழுங்குபடுத்தத் துப்பில்லாத ஜெயலலிதா அரசு, கிட்டத்தட்ட ரூ 60 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்களை வீணாக்கியதோடு, இஷ்டப்படி பாடத்திட்டம் வைத்துக் கொள்ளுங்கள், முடிந்த வரை புத்தகக் கட்டணம் எனும் பெயரில் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என கிட்டத்தட்ட நேரடியாகவே கூறியிருக்கிறார்.
கல்விக் கட்டண விவகாரத்திலும் அரசு தலையிடாதாம். பள்ளிகள் கேட்டுக் கொண்டால் தலையிடுமாம். பள்ளிகள் எப்போது கேட்டுக் கொள்ளும்? இந்தக் கட்டணம் கட்டுப்படியாகவில்லை… அதிக கட்டணம் வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் வேறு என்ன கேட்கப் போகிறார்கள்?
ஆக, பழையபடி மழலையர் (பிரீகேஜி) பள்ளியில் சேரவே ஆரம்பக் கட்டணம் ரூ 1 லட்சம் என்ற பழைய நிலையை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் வாக்காளர்களே… இதோடு நின்று விடப் போவதில்லை. இது ச்சும்மா ட்ரெயிலர்தான். மெயின் பிக்சர் இனிமேல்தானே பாக்கப் போகிறீர்கள்!!
-வினோ
என்வழி
 .
 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages